Saturday, November 6, 2010

எல்லா நிலையிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும்

இக்கட்டுரை ஒரு கருத்துப் பரிமாற்றமே ஒழிய வேறேதுமில்லை.  இதில் குற்றங்களிருப்பின்  திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன.

கீழ்க்கண்ட கருத்துப் பரிமாற்றங்களை படிக்க வேண்டுகிறேன். 

நாம் யாராக இருந்தாலும் எல்லா நிலையிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்

நமக்குள் கொள்கைகளில் வேறுபாடிருக்கலாம்

தொழுகை முறைகளில் மாறுபாடிருக்கலாம்

ஆனால் பேசும் போது எழுதும்போது தாறுமாறு இருக்கக் கூடாது

நான் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவனில்லை........  ஆனால்
என்னை இயக்கிக் கொண்டிருப்பவனைச் சார்ந்தவன்.

ஒரு கட்டுரை எழுதும் போது கண்ணியக்குறைவான வார்த்தைகளை யாராக இருந்தாலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கொழுந்து விட்டு எரியும் தீயைக் கூட கொஞ்சம் தண்ணீர் விட்டு அணைக்கலாம்

எழுந்து நின்று எரியும் தீயை எண்ணெயை விட்டா அணைக்க முடியும்?

அதைப் போலத்தான் மனக்கசப்பு மேலும் அதிகப்படுத்தும் வண்ணம் அடாத வார்த்தைகளை அவன் இவன் என்ற ஏகவசனங்களை போட்டு எழுவதும் ஏற்கனவே கொழுந்து விட்டெரியும் மனக்கசப்பு எனும் தீயில் கொஞ்சம் எண்ணெய் விட்டெரிப்பது போல.

ஒரு தனிமனிதனின் செயலுக்கு ஒர் இயக்கத்தை ஒர் இயக்கத்தின் தலைமையை குற்றம்சாட்டுவது என்பது எப்படி பொருத்தம் என்று எனக்குப் புரியவில்லை.

இன்றைக்கு உலகில் நடக்கும் சில வன்முறைச் சம்பவங்களை நடத்துபவர்களை தீவிரவாதிகள் என்கிறார்கள்.  அவர்கள் முஸ்லிம்கள் என்றால் முஸ்லிம் தீவிரவாதிகள் என்கிறார்கள்.

ஆனால் அந்த ஒரு சில முஸ்லிம் தனி மனிதர்கள் செய்யும் தவறுக்கு காரணம் இஸ்லாம் தான் குர் ஆன் தான் என்று உலகம் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்வோமா? அவர்கள் சொன்னாலும் நாம் ஏற்பதில்லை.  

அதைப் போலத்தான் ஒரு தனிமனிதனின் தவறான தன்னிச்சையான  செயலுக்கு ஒர் இயக்கத்தை அதன் தலைமையைக் குறை சொல்வதும் என்பது என் சிந்தனைக்கு வந்த கருத்து .......... மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள்


இன்ஷா அல்லாஹ்...... தொடர்வோம்



With best regards
Kamal
by mail from Kamal

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails