அல்லாஹ் யாருக்கேனும் நன்மையை செய்ய நாடி விட்டால் அவரை மார்கத்தில் அறிவாளியாக்கிவிடுகிறான் என்றார்கள் நபி (ஸல்)
அறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின்று வணங்குவதும் சம மாகாது என்றார்கள் அவர்கள்
பள்ளியில் படிக்கும் காலத்து பார்த்திருப்போம்...........
சில பிள்ளைகள் பாஸ் செய்தால் போதும் அதாவது 35 – 40 மார்க் வாங்கினால் போதும் என்றிருப்பார்கள்
சில பிள்ளைகள் சுமாராக வாங்கினால் போதும் அதாவது 50-60 மார்க் வாங்கினால் போதும் என்றிருப்பார்கள்
சிலர் 100க்கு 100 வாங்க விழைவார்கள். இந்தப் பிள்ளைகள் நன்றாக படிப்பதோடு மட்டுமல்லாமல் கலர் பென்சில் அழிப்பான் போன்றவற்றோடு சென்று விடைத்தாளை அழகுற எழுதி வண்ணங்களால் கோடிட்டு 100க்கு 100 வாங்குவார்கள்.
தொழுகையின் நிலைகளும் அவ்வாறு தான் தொழுகையில் 100க்கு 100 வாங்க வேண்டும் என்றால் அதன் நிலைகளை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும்.
நான் நமது நாட்டில் பணி செய்து கொண்டிருந்த போது என்னுடன் பணியாற்றிய இரணடு மூத்த முஸ்லிம் அதிகாரிகளுடன் தொழச் செல்வேன். ஒருவர் பருமனாக இருப்பார்
நான்கு ரக் அத் தொழும்போது (ஃபர்ல்) ஒவ்வொரு ரக் அத்திலும் இரண்டாம் ஸ்ஜ்தா முடிந்து பின் உட்கார்ந்து பின் கைகளை தரையில் ஊன்றி எழுந்திருப்பது என்பது நபி பெருமானாரின் வழி முறை இது ஷாஃபி மத்ஹபிலும் உள்ளது.
ஆனால் அவர் ஹனஃபி ஆகவே அவ்வாறு செய்ய மாட்டார் கையை ஊன்றாமல் எழும் போது கனமான அவர் தடுமாறுவார். மேலே விழுந்திடுவாறோ என நான் பயப்படுவேன்.
நான் அவரிடம் “ஒவ்வொரு ரக் அத்திலும் இரண்டாம் ஸ்ஜ்தா முடிந்து பின் சில நொடிகள் உட்கார்ந்து பின் கைகளை தரையில் ஊன்றி எழுந்திருப்பது என்பது நபி பெருமானாரின் வழி முறை இது ஷாஃபி மத்ஹபிலும் உள்ளது” அதை நீங்கள் ஃபாலோ செய்யலாமே ஏன் டைரக்டாக ஸஜ்தா முடிந்த வுடன் நேரடியாக எழுந்து நிலைக்கு வர முயலுகிறீர்கள் இதனால் உங்கள் பாலன்ஸ் தவறி தடுமாறுகிறீர்களே என்றேன். அதை ஃபாலோ செய்தீர்கள் என்றால் பாலன்ஸ் தவறாது அதல்லாமல் எத்தனையாவது ரக் அத் என்பது கூட ஞாபகம வருமே என்றேன்.......
With best regards
Kamal
by mail from Kamal
1 comment:
அருமையான கட்டுரை இதுபோல் “ஓர் நிலைப்படுத்தி ஓரிறையைத் தொழுவது எப்படி?” என்ற எனது ஆக்கம் அனுப்புகின்றேன்
Post a Comment