இமாம் அபு ஹனீஃபா ( ஹனஃபி மத்ஹபின் ஸ்தாபகர்) இமாமுல் அஃலம் ( அதாவது உலகிற்கே இமாம்) ( ஹனஃபி மத்ஹபு தான் மத்ஹபுகளிலே அதிகமாக மக்களால் பின்பற்றப்படுவதால் பெரியது) அவங்களே சொல்லலே அப்ப எப்படி நான் ஃபாலோ செய்ய முடியும் என்றார்.
நபி ஸல் அவர்களின் உறுதியான செயல்முறை என்கிறோம் மேலும் மற்றொரு மத்ஹபான ஷாஃபி மத்ஹபில் வலியுறுத்தப்பட்டு ஷாஃபி மத்ஹபை பின்பற்றுபவர்களால் தொழுகையிலும் செயல்படுத்தப்படுவதை சொன்னாலும் மேலும் அதில் உள்ள அனுகூலங்களைச் சொன்னாலும் அவருக்கு அதில் உடன்பாடில்லை....... ஹனஃபி இமாம் சொல்லாததால்.
மெத்தப் படித்தவர் மேன்மையான பதவியிலிருப்பவர் ஆனாலும் யோசிக்க வில்லை. நாளைக்கு அல்லாஹ் நம்மையெல்லாம் ஹனஃபி முஸ்லீம்கள் எல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள் ஷாஃபி முஸ்லிம்கள் எல்லாம் இந்தப் பக்கம் ஹம்பலி முஸ்லிம்கள் அந்தப் பக்கம் மாலிக்கி முஸ்லிம்கள் அந்தப் பக்கம் என்றா சொல்வான்.
இது மனதில் ஓடிக்கொண்டிருந்த போது தான் இஸ்லாமிய நாடுகளில் உள்ள மாற்று மதத்தவர்கள் ஏன் பெருமளவில் இஸ்லாத்தை தழுவுவதில்லை என்ற எண்ணமும் எழுந்தது.
மனிதன் ஒரு வித்தியாசமானப் படைப்பு. வேஷ்டியை தூக்கி எறிநது விட்டு அவன் பெர்முடா அணிவான். பொங்கலுக்கு பதிலாக பிஸ்ஸா சாப்பிடுவான் ஆனால் மதம் என்று வந்து விட்டால் விட்டுக் கொடுக்கவே மாட்டான்.
அதனால்தான் எத்தனையோ நபிமார்கள் ஒரிறைக் கொள்கையை எத்திவைக்க மிகுந்த சிரமப்பட்டார்கள்.
இது அறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின்று வணங்குவதும்...கட்டுரையின் தொடர்ச்சி
With best regards
Kamal
by mail from Kamal
No comments:
Post a Comment