இன்னும் திறக்கப்பட்டு வாசிக்கப்படாத டைரி, கிழிக்கப்பட்ட துப்பறியும் நாவலின் கடைசிப்பக்கங்கள், டெலிவரி செய்யப்படாமல் சுற்றிவரும் அவசரம் தாங்கிய குரியர், வெளியிடப்படாத தேர்தல் மற்றும் பரிட்சை ரிசல்ட் இவைகளில் எல்லாம் எதோ ஒரு விதமான சுவராஸ்யமும், பரபரப்புடன் கூடிய படபடப்பும் ஒளிந்திருப்பதை அன்றாட வாழ்வில் நாம் அறியாமல் அறிந்து வருகிறோம்.
சவுதி ஜித்தா இந்தியத் தூதரகத்தில் WELFARE CONSUL ஆக சமீபத்தில் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ள சகோதரர். மூர்த்தி அவர்கள் கூடுதல் பொறுப்பாக புனித ஹஜ் டிபார்ட்மெண்டையும் ஏற்று அதன் மூலம் அற்புதமான பணியை செய்து வருகிறார்கள்.
"ஏற்பு மதத்தவரை விட மாற்று மதத்தவரான இவரால் எப்படி இவ்வளவு சிறப்பாக ஹித்மத் (service) செய்ய முடிகிறது?! என்று விமான தளத்தில் அவர் காது படவே நம் ஹாஜிகளின் ஆச்சரியம் கலந்த முனுமுனுப்பு!
"ஏற்பு மதத்தவரை விட மாற்று மதத்தவரான இவரால் எப்படி இவ்வளவு சிறப்பாக ஹித்மத் (service) செய்ய முடிகிறது?! என்று விமான தளத்தில் அவர் காது படவே நம் ஹாஜிகளின் ஆச்சரியம் கலந்த முனுமுனுப்பு!
மாற்று மத அன்பராக இருந்த பொழுதிலும் அவருக்காக அவர்கள் அனைவரும் மனமார து'ஆச்செய்வதை நேரிலேயே காண முடிந்தது.
ஒரு நாள் ஒரு காலை பொழுது ஜித்தா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக மத நல்லிணக்கக் கூட்டம் நடத்தலாமா? என்ற யோசனையுடனும் ஆர்வத்துடனும் திரு. மூர்த்தி அவர்களின் அலுவலகம் சென்றிருந்தோம். பல விடயங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தனக்கு வந்த மின்னஞ்சல்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு நம்மிடம் அவர் காண்பிக்க, அதை சற்றே வாசிக்க நேர்ந்தது. அதில் சுருக்கமாக வரையப்பட்ட அர்த்தங்கள் ஆயிரம் சொல்லும் வார்த்தைகளை உங்களின் பார்வைக்கு இங்கு வழங்க விரும்புகிறேன்.
------------ ------------------ ----------------------------
அய்யா!
பல நாட்களுக்கு முன்னர் என் தந்தை அவர்களுக்கு தாங்கள் எழுதியனுப்பிய மின்னஞ்சலை (பிரிக்கப்படாமிலிருந்ததை )இப்பொழுது தான் படிக்க இயன்றது. எதற்கோ அவருக்கு தாம் உதவி செய்திருக்கிறீர்கள். எதற்கென்று இத்தருணம் வரை நான் அறியேன். ரொம்ப சந்தோசம். அவர் சார்பாக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (சில மாதங்களுக்கு முன் என் தந்தை இறந்து விட்டார் என்பது தங்களுக்கு தெரியுமோ இல்லை தெரியாதோ..?! என்று எனக்கு தெரியவில்லை).
நன்றி!
ரியாதிலிருந்து.
------------------------ ------------------------ -----------------------------------
சுப ஹானல்லாஹ் ! நேற்று பெற்ற உதவியை இன்று மறந்து விடும் இக்காலத்தில் அதுவும் பலன் அடைந்தோரே பராமுகமாகிவிடும் இந்நாளில் இப்படியுமா? என அச்சகோதரியின் மின்னஞ்சலை என் அகக்கண் முன்னே நிறுத்தியவனாக நன்றி மறப்பது என்றும் நன்றன்று .. என உள்ளத்துக்குள் முனுமுனுத்தவனாக 'மத நல்லிணக்க' கூட்டம் பற்றி அலோசிக்காமலேயே வெளியே வந்து விட்டேன்!
இறைவன் இது போன்ற ஆயிரமாயிரம் நல்லெண்ணம் கொண்ட மாற்று மத சகோதர, சகோதரிகளை நம் உன்னத மார்க்கமாம் இஸ்லாத்தின் பக்கம் ஆர்வமுடன் வந்திணைந்து ஈருலக பாக்கியங்களை பெற அவனிடமே து'ஆச்செய்து அதற்காக நம் அன்றாட அலுவல்களுடன் முயற்சிப்போமாக என அன்புடன் கேட்டுக்கொண்டவனாக உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் என் அடுத்த ஆக்கம் வரை.
வஸ்ஸலாம்.
வஸ்ஸலாம்.
வாழ்க வளமுடன்.!
மு.செ.மு. ரஃபியா
ஜித்தாவிலிருந்து.
Source : http://adirainirubar.blogspot. com/2010/11/blog-post.html
Source : http://adirainirubar.blogspot.
No comments:
Post a Comment