Tuesday, March 12, 2013

துபாய் சாதனை: ஒரு கோடி சுற்றுலா பயணிகள்

கடந்த 2012 ஆண்டு துபாய் மாநகருக்கு ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதால் துபாய் சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு அது இன்னும் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதால் கடந்த ஆண்டு தங்கும் விடுதிகளின் மட்டும் 18.82 பில்லியனுக்கு வருமானம் பெற்றுள்ளதாகசுற்றுலாத் துறையின் பொது இயக்குநர் ஹிலால் அல்மர்ரி தெரிவித்துள்ளார்.

நகர நிர்வாகத்தில் காணப்படும் ஒருமித்த திறமைகள், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள், கிழக்கத்திய நாடுகளுக்கும்,மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் அத்துறையினரின் இடைவிடா முயற்சிகளும், அதனால் பயணிகளுக்கு கிடைக்கும் பலன்களும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : http://www.inneram.com/
-----------------------------------------------------

Monday, March 11, 2013

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்...

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்
- பௌத்த அச்சம் - நன்றி காலச்சுவடு

                                                    எம். ரிஷான் ஷெரீப்
இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக்கூடிய பிரிவினைவாதச் சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறிவைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. இந்நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்தங்களுக்குள் முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள் என்னும் அச்சம் இனவாதச் சக்தி களைப் பெருமளவில் அச்சுறுத்தி யிருக்கிறது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முஸ்லிம்களை அடக்கிவைக்கவும் பல்வேறு விதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேஷத்தைக் கிளப்பும் பற்பல நடவடிக்கைகள் காலங்காலமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த போதிலும், அண்மையில் பங்களாதேஷில் பௌத்தர்களுக்கு எதிராக நிகழ்ந்த சில வன்முறைகள், இலங்கையிலுள்ள முஸ்லிம்களையும் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தன. பங்களாதேஷ் வன் முறைகளுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் ‘பொது பல சேனா இயக்கம்’ எனும் பௌத்த அடிப் படைவாத அமைப்பால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் அதிகளவில் பௌத்த பிக்குகளே உள்ளனர்.

ஒவ்வொரு மாதத்தினதும் பௌர்ணமி தினமானது, போயா எனப்படும் பௌத்தர்களின் புனித தினமாகும். இத்தினத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆண்களும் பெண்களுமாகப் பௌத்த விகாரைகளில் நடைபெறும் மதப் போதனை நிகழ்வுகளில் வெண்ணிற ஆடையுடன் கலந்துகொள்வர். பௌத்த பிக்குகளால் நிகழ்த்தப்படும் போதனைகளுக்குள் முஸ்லிம் இன வெறுப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிறிது சிறிதாக ஊட்டப்படுகின்றன. இவ்வாறு விதைக்கப்படும் நச்சு விதைகள் எதிர்காலத்தில் பெருவிருட்சங்களாக மாறி வெகுவிரைவில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக் கலவரங்கள் ஏற்படக் காரணமாக அமையும்.

Thursday, March 7, 2013

இறைவா..!

உங்கருணையில துளியளவு
தூவிவிட்டா புவிசெழிச்சு
பூந்தோட்ட மாகுமப்பா

மலையளவு எம்மடியிலநீ
போட்டுபுட்ட மனமெல்லாம்
உங்கீர்த்தி பாடுதப்பா

நல்லதுநாலு செஞ்சு
தரணியில வொருகூட்டம்
உன்வழியில வாழுதப்பா

எம்போல் பாவியொருத்தன்
படியேற உம்வேதம்
ஒர்வழிய காட்டுதப்பா

என்னிதயத்துல குடியிருக்கு
மன்பர்பலர் பார்வையில
இவ்வுலகமழகாய் தெரியுதப்பா

எனக்கிட்ட பிச்சபோல
வொருபுடிய உங்கருணையால
அவர்மடியில போடுமப்பா

இத்தனநாள் நாஞ்செய்யு
தீமையெல்லாம் என்னத்தீண்டாம
தீக்கிறை யாக்குமப்பா

வருநாளெல்லாம் உம்புகழ்
பாடியுனக்கோர் நல்லடிமை
இவனென் றாக்குமப்பா...

rafeeqspoem.
இவன் சக்தி..!
Source : http://rafeeqspoem.blogspot.in/

Wednesday, March 6, 2013

போப் செய்தி உண்மையல்ல, ஆனால் இது உண்மை



அஸ்ஸலாமு அலைக்கும்,

போப் குறித்த வதந்திகள் ஒரு முக்கிய உண்மை செய்தியை மறைத்து விட்டன. சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு கிரீட் வில்டர்ஸ் (Greet Wilders) என்ற பெயர் நன்கு அறிமுகமாகி இருக்கும். டென்மார்க்கின் தீவிர வலது சாரி

                                                                  (    “I have all faith in Allah to support me and to guide me through these moments," Doorn said.
 Image source)

 இப்போது வெளியாகி இருக்கும் அந்த முக்கிய செய்தி என்னவென்றால், இந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான Arnoud Van Doorn இஸ்லாமை ஏற்று பெரும் பரபரப்பை ஐரோப்பாவில் ஏற்படுத்தியுள்ளார். "பெரும் பரபரப்பு" என்பது நிச்சயம் சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். இஸ்லாம் மீதான தன் கட்சியின் வெறுப்புணர்வு இஸ்லாம் குறித்து ஆராய தூண்டியதாகவும், ஒரு வருட ஆய்வுக்கு பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அல்-ஜசீரா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் Arnoud Van Doorn.

தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ள இவர், தான் மிகப்பெரும் சவாலை சந்திக்கவிருப்பதை உணர்ந்துள்ளதாகவும், இவற்றில் இருந்து விடுபட இறைவன் உதவுவான் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய உலகில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி குறித்து முழுமையாக படிக்க.. http://www.onislam.net/english/news/3341/461645.html




வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Saturday, March 2, 2013

நமக்காக அங்கே ஒன்று இருக்க துயரம் ஏன்? துவளல் ஏன்!




நமக்காக அங்கே ஒன்று இருக்க துயரம் ஏன்? துவளல் ஏன்!

மிகவும் அலுப்பாக உள்ளது
சென்னையே மிகவும் மக்கள் நெருசலான நகரமாக உள்ளது
சென்னைக்கு போக நான் விரும்பவில்லை

செய்தி வந்தது மகனிடமிருந்து சென்னைக்கு பணமும் பொருளும் சென்னை வாழ்வோர் கொண்டு வந்திருப்பதாக

அலுப்பும் மறைந்தது ,உத்வேகமும் வந்தது போன வேகம் தெரியவில்லை பொருளையும் பணத்தையும் பெறுவதற்கு சென்னை சென்றதில் .
உள்ளத்தின் வேகம் வயதைக் கடந்தது . இறுதிவரை இயன்றவரை ஏதோ நமக்காக காத்திருக்கின்றது என்ற நினைப்பில் செயல்படுங்கள் அது இறுதி பிரயாணமாகவும் இருக்கலாம்

Thursday, February 28, 2013

அந்தப் பழைய காலுறை!


 அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார்.
தன் மகனை அருகழைத்தார்
மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான்
உங்களையெல்லாம் விட்டுப் பிரிந்துவிடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி
சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை
நிறைவேற்றுவாயா?"

மகன் கேட்டான் : "என்ன, சொல்லுங்கள்?"

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்பட்டதும்,
என்னுடைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என்
எளிய கோரிக்கை"

என்ன இது விசித்திரம் என்று நினைத்தாலும் எளிய கோரிக்கை தானே என்று
மகனும் ஒப்புக்கொண்டான்.

Tuesday, February 26, 2013

நானும் கொஞ்சம்... சொல்ல ஆசைப் படுகிறேன்.

பேராசிரியர் காதர் மைதீன் அவர்களை பற்றிய ஒரு படமும் செய்தியும் சில நாட்களாக முக நூலில் பட்டய கிளப்பிக் கொண்டிருக்கிறது.. சந்தோசத்துக்குரிய செய்தி அது.. நானும் கொஞ்சம்... சொல்ல ஆசைப் படுகிறேன்.

அவரோடு 2004ல் தான் எனக்கு முதல் சந்திப்பு நிகழ்ந்தது. மயிலாடுதுறையில் நடந்த இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தார். உணவு இடைவேளையில் சற்று ஓய்வாக இருந்தவரை சுற்றிலும் கட்சி பெரியவர்கள். சற்றே தயங்கித் தயங்கி அவர் அருகில் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டு நமது முற்றம் இதழுக்காக ஒரு பேட்டி தர முடியுமா என்று கேட்டேன்..சில இதழ்களையும் கொடுத்தேன். பார்த்துவிட்டு, ஒப்புக் கொண்டார். எவ்வளவு பெரிய தலைவர்..உடனே ஒப்புக் கொண்டாரே என்று எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை . எனக்கு உதவியாக இருந்தவர் அன்புத் தம்பி அப்துல் அஜீஸ் தாயிப் .அவர்தான் போட்டோவெல்லாம் எடுத்தார். அரை மணி நேரம் அவரது ஓய்வைக் கெடுத்த புண்ணியத்தை நான் கட்டிக் கொண்டேன். அதன் பிறகு எங்கள் தொடர்பும் நட்பும் வளர்ந்தது.அடிக்கடி சந்தித்தோம். தலைவரை பலமுறை பேட்டி எடுத்து நமது முற்றத்தில் போட்டிருக்கிறேன். அதன் பிறகு பேராசிரியரை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேச முடிந்தது. சில சமயங்களில் நாடாளுமன்ற கூட்டத்தில் இருப்பார். அப்போது நான் போன் செய்தால் எடுக்க மாட்டார். ஆனால் வெளியே வந்தவுடன் போன் செய்து விவரம் கேட்பார். அத்தனை பணிவு. 2007ல் சென்னையில் ஒரு மாநாடு. தலைவர் மேடையில் அமராமல் கீழே முன் வரிசையில் உட்கார்ந்து அமைச்சர் மற்றும் பிரமுகர்களோடு பேசிக் கொண்டிருந்தார். நான் நிகழ்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னைக் கண்டதும் உடனே எழுந்து வந்த தலைவர் என் தோளில் உரிமையோடு கை போட்டு " அபு ஹாஷிமா .. நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார் ....அவரை பேச அழைக்கும் வரை. "ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு தலைவர் இப்படியும் மரியாதை கொடுப்பாரா?"

LinkWithin

Related Posts with Thumbnails