Sunday, November 20, 2011

குழிப் பிள்ளை மடியிலே !

 
மற்றப் பெண்களின் கையிலும் மடியிலும்   குழந்தையைக் கண்டால் என் மடியிலும் குழந்தையைத் தா இறைவா! என  வேண்டாத நாளில்லை. ஆண்டவன் அருள் செய்தான்.பிள்ளை பெற்றேன் அதனால் நான்  மலடி என்று என்னை யாரும் சொல்ல மாட்டார்கள் என  பெரு மூச்சு விட்டது அடங்கு முன்  இறைவன் அக் குழந்தையை மரணமடையச் செய்து தன் பக்கம் அழைத்துக் கொண்டான். அந்த மகிழ்வு நீடிக்காமல் போனதே என ஏங்கினேன்.  இது எனக்கும் என் உட்றார் உறவினர்களுக்கும் மற்றும்  அனைவர்க்கும் மிகவும் மன வருத்தத்தினை தந்தது .
எனது தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் பல இன்னல்களுக்கு உள்ளானேன். 
நான் மிகவும் சோர்ந்து மனமுடைந்து போனபோது ஒருவர் என்னிடம் வருந்தாதே 'அக் குழந்தை சுவனத்தில் இறைவனால் சேர்க்கப் பட்டு விட்டது. "
குழிப் பிள்ளை மடியிலே" என்பது  போல் இறைவன் உனக்கு தேவையானபடி உனது விருப்பம் போல் குழந்தைகள் கொடுப்பான்' என அன்புடன் ஆறுதல் சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஆமாக பதிந்து விட்டது.
அல்லாஹ்வின் அருளால் எனக்கு மறுபடியும் நல்ல குழந்தைகள் கொடுத்து மகிழ்வாக வாழ வழி செய்துவிட்டான். எல்லாப் புகழும் இறைவனுக்கே. 
 
 ஆனால் இடைப்பட்ட காலங்களில் துயரத்தால் நான் இழந்த பல்வகை சிரமங்களும் நானே உருவாக்கிக் கொண்டவையே. நல்லதும் கெட்டதும் நடப்பது இயல்பு அதையே நாமே வரவைத்துக் கொள்வது நற்செயலாக இருக்க முடியாது. அனைத்தையும்   சமநோக்கோடு எடுத்துக் கொள்ளும் மனது தேவை. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
இன்பத்தைக் கண்டு துள்ளுவதும் துயரத்தைக் கண்டு துவளுவதும் இல்லாத மனதைத் தா இறைவா!    

இப்னு ஷிஹாப் அறிவித்தார்.
இறந்துவிட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தப்படும். அது விபச்சாரிக்குப் பிறந்ததாக இருந்தாலும் சரியே! ஏனெனில் அது இயற்கையாகவே இஸ்லாத்திலேயே பிறக்கிறது.
பெற்றோர் முஸ்லிம்களாக இருந்து அல்லது குறிப்பாகத் தந்தை மட்டும் முஸ்லிமாகவும் தாய் வேற்று மதத்தவளாகவும் இருந்து அவர்களின் குழந்தை பிறக்கும்போது சப்தமிட்டு, பிறகு இறந்தால் அதற்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படும்; சப்தமிடவில்லையாயின் அதற்குத் தொழுகையில்லை; ஏனெனில் அது விழுகட்டியாகும்.
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) 'எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலின் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தையும் ஓதிக்காட்டினார்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்1358.

3201.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய இறப்புக்காகவும், பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்101.

.
 
'(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி(ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி(ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை" என உம்மு கைஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி ஹதீஸ்223

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails