" முஸ்லிம் " என்ற ஒற்றை வார்த்தை
இன்று எத்தனையோ வார்த்தைகளாய்
வெடித்துச் சிதறி
சின்னா பின்னமாய்
சிதறிக் கிடக்கிறதே ...
அடையாளத்தைத் தொலைத்து விட்டு
அகங்காரத்தை அணிந்து கொண்டு
அலங்கோலம்
அரங்கேறி விட்டதே...
நேற்று வரை உன் வீட்டில் நானும்
என் வீட்டில் நீயும்
ஒரே தட்டில்
உண்டு மகிழ்ந்த உணவெல்லாம்
இன்று
வாந்தியாக
வெளியேறி விட்டதே...
ஒரு கொடியே கூடாதென்று
கூறி விட்டு
ஓராயிரம் கொடிகளுக்காக
கிழிந்து போனோமே...
இனியொரு நாள் வருமோ...
பகையினை
பகை கொள்ளும் பலம் வருமோ...
Abu Haashima Vaver
நன்றி - Bro Abu Haashima Vaver


No comments:
Post a Comment