ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் பிடியில் இருக்கின்றன என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டார். காரைக்குடியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச வந்த ப.சிதம்பரம் வெறுமே சட்டம் போடாமல் சட்டங்களை எல்லாம் திட்டங்களாக மத்திய அரசு ஆக்கிவருகிறது என்றும் கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல நல்ல திட்டங்களை, குறிப்பாக கல்வி உரிமை, வேலைவாய்ப்பு,தகவல் அறியும் உரிமை உணவுக்கு உறுதி என்று நடைமுறைப்படுத்தி வருவதாகச் சிலாகித்த சிதம்பரம் ஊடகங்கள் இதனையெல்லாம் செய்தியாக்குவதில்லை என்று குறைப்பட்டார்.
2004 தேர்தலில் கூட மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிதான் அமையும் என்று பெரும்பாலான நாளேடுகள்,ஊடகங்கள் எழுதின.அதற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரிடம் மட்டுமே நாளிதழ்களும், பிற ஊடகங்களும் இருப்பதால்தான். ஆனால், 2004 தேர்தலில் ஊடகங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஜக்கிய முற்போக்குக் கூட்டணி தான்வென்றது என்று ப.சிதம்பரம் நினைவு கூர்ந்தார்.
இப்போதும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் அவர்கள் இலங்கை விவகாரம் குறித்து பேசியதை இந்த ஆதிக்கசாதி நாளிதழ்கள் உள் பக்கத்தில் வெளியிட்டு மறைக்கப் பார்க்கின்றன என்றும் ஊடகங்களைக் குறை சொன்னார் நிதி அமைச்சர்.
Source ; http://www.inneram.com/
No comments:
Post a Comment