உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள், பல்வேறு குழுக்கள், மார்க்க மேதைகள் ,அரசியல் சார்ந்தவர்கள் கருத்துக்கள், அனுபவங்கள், நடவடிக்கைகள் மற்றும் தங்கள் மகிழ்ச்சியை , துன்பத்தை பகிர்ந்து கொள்ளும் விவாதிக்க பயன்படும் தளங்களில் ஒன்றாகும்.
மக்கள் தங்கள் வணிகம் ஊக்குவிக்கவும் தங்கள் கொள்கைகளை பரப்பவும் , பிரச்சாரத்திற்கு எதிராகவும் மற்றும் பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் , மற்றும் பல நோக்கங்களுக்காகவும் பேஸ்புக் தளம் பயன்படுத்தப் படுகிறது.
இப்பொழுது ஆன்மீக தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்க நோக்கத்திற்காக நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள் .
இப்பொழுது கணினியை ஒதுக்கிய நாட்கள் போய்விட்டன.
ஆரம்பத்தில் வானொலி, தொலைக்காட்சி, ஒலிபெருக்கிகள் பயன்படுத்தி வந்தார்கள்.
கற்பனைக்கு எட்டாத இருந்த சமூக நோக்கத்திற்காக பயன்படுத்தும் நோக்கமற்ற இருந்த இணைய தளங்கள் நவீன கால அவசியத்தைக் கருதி விரைவாக மக்கள் மத்தியில் கருத்துகளை ,ஆய்வுகளை ,பிரசாரங்களை செயல்படுத்த அவசியமாய் ஆகி விட்டது.
ஒதுங்கி நின்ற உலமாக்களும் இதில் இணைந்துக் கொள்வது அவசியாமாகி விட்டது .அவர்களும் தங்களை இதில் இணைத்துக் கொள்வதில் தயங்குவதில்லை.
No comments:
Post a Comment