Friday, September 20, 2013

இமாம்களின் சேவை தேவை.


ஒரு இஸ்லாமிய சூழலில் ஒரு அடிப்படை நபர் இமாமாக இருக்கிறார்.
இமாம் முஸ்லீம் சமூகத்தின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும்.
இமாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவர்களது வாழும் முறை மக்களால் கண்காணிக்கப் படுகின்றது .

பெரும்பாலான இமாம்கள் இப்பொழுது தொழ வைப்பதோடு, ஹதீஸ் சொல்வதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

இமாம்கள் மக்களோடு நெருக்கம் கொண்டு சமூக அக்கறையோடு மற்றவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். மக்கள் மனதை தொட மக்களுக்கு நெஞ்சை வருடி விடுமாறு ஆறுதலும் ஊக்கமும் கொடுக்க வேண்டும். குறையை சுட்டிக் காட்டுவதை விட நிறையை சொல்வதில் மக்கள் அவரது தொடர்பை விரும்புவர். நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு கொள்ளாமல் கெட்டவரையும் நல்லவராக்க அவர்களின் தொடர்பு அறுபடக் கூடாது

மக்களின் துன்பம் துயரங்களில் ஆறுதல் சொல்வதோடு முடிந்தவரை மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு தங்களால் முடிந்த அளவு அவர்களது பங்கும் இருக்க வேண்டும்.

இமாம்கள் சமூகத்தில் குறிப்பாக இளைஞர்களுடன் தொடர்பு இருக்க வேண்டும்.

எனினும் முழுமையாக முஸ்லீம் சமூகத்தின் சேவையில் இமாம்களுக்கு தங்களது நேரம் அர்ப்பணிக்கவும் பொருட்டு ஆரோக்கியமான ஊதியங்கள் இமாம்களுக்கு கொடுக்கப் பட வேண்டும்.

இமாம் தனிமைப் படுத்தப் பட்டவராக இருக்க கூடாது.
மார்க்க சம்பந்தமாக அவரிடம் மசூதி கமிட்டி விளக்கம் கேட்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.

வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails