Sunday, November 3, 2013
நீச்சல் பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்!
நீச்சல் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த விசையம் தான் ஆனால் நீச்சல் தெரிந்தவர்களை பார்த்து நீச்சல் தெரியாதவர்களுக்கு ஒரு விதமான ஏக்கமாகவே இருக்கும் . நாமும் சிறு வயதில் நிச்சல் கற்று இருந்தால் இன்று நாமும் நீச்சல் அடித்து இருக்கலாமே என்று . நீச்சல் என்பது மிக முக்கியமானது நம் வாழ்க்கையில் .ஆபத்தான தருனக்கலில் நம் உயிரையும் பிறர் உயிரையும் காப்பாற்றும் ஒரு கலை என்றால் அது நீச்சல் கலை தான் .கிராம புறங்களில் பெரும்பாலும் உள்ளவர்கள் நீச்சல் கற்று கொண்டவர்களாக இருந்தனர் ஆனால் இரு அது கூட மாறி கொண்டே வருகிறது.
குளம் ,குட்டை ,கடல் ,நீச்சல் தொட்டி ஒவ்வொரு கிராமத்து இளைஞனும் அவனது சிறுவயதில் நீச்சல் கற்க தந்தையுடனே இல்லை மாமாவுடனோ இல்ல ஊர்ல இருக்கிற அண்ணன்களுடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று நீச்சல் பழகி இருப்பார்கள் இன்று நாம் என்ன தான் வளர்ந்து பெரிய ஆள் ஆனாலும் அன்று கற்ற நீச்சல் இன்றும் மறக்காது. சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் கற்பது இவை இரண்டும் ஒரு முறை கற்றால் வாழ்வில் மறக்காத கலைகள் ஆகிவிடும். கிராமத்தில் சைக்கிள் ஓட்டத்தெரியதா ஆட்கள் கூட இருப்பார்கள் ஆனால் நீச்சல் தெரியாத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கிராமத்தில் உள்ளவர்கள் எப்பவுமே தண்ணீரைக்கண்டால் பயமில்லாமல் குதிப்பார்கள் ஆனால் நகரத்தில உள்ளவர்கள் அய்யோ எனக்கு நீச்சல் தெரியாது என்பார்கள். அதுவும் இல்லாமல் உலகில் மிகச்சிறந்த உடற்பயிற்சிகளில் நீச்சல் கலையும் ஒன்று என்று படித்த ஞாபகம்.
நீச்சல் கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன் தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைகால்களை எவ்வாறு அசைக்கிறார் என பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார் இதை நன்கு கவனித்துவிட்டு நாம் தண்ணீரில் இறங்க வேண்டும். லாரி டியூப்பில் காற்றை நிரப்பி அதற்குள் அமர்ந்து கொள்கிறார்கள். ஒரு இரண்டு நாட்கள் உதவியுடன் இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும் மெதுவாக இறங்கி கை, கால்களை அசைக்கும் போது நன்கு நீச்சல் தெரிந்தவர் நமது அரைநான் கயிறை பிடித்துக்கொண்டு பின்னால் வருவார். ஒரு இரண்டு முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிப்பார். அடுத்த நாள் இந்தபக்க சுவரையும் அந்தப்பக்க சுவரையும் பிடித்து செல்ல வேண்டும் இவ்வாறு ஒரு ஒருவாரம் சென்றால் அழகாக நீச்சல் கற்றுக்கொள்ளலாம்.
இந்த வகை நீச்சல் கிணறு, நீச்சல்குளம், ஏரி, மட்டுமே பொருந்தும்.
ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது எப்பபொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகதான் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர் இது மிகவும் கடினமான ஒன்று. ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்த நண்பருடன் செல்லவேண்டும். ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளில் ஒவ்வவொரு கையையும் முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரைவேண்டும் அப்பொழுது நாம் முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளிவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு நாம் முன்னிற்குச் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 15 நாட்கள் ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும் நாம் எளிதாக தப்பிக்கலாம். கடல் நீச்சல் பற்றி நான் இப்பபோது தான் விபரம் தேடிக்கொண்டு இருக்கிறேன்.
நீச்சலின் பயன்கள் :
1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான்.
2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்.
3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
5. இரத்த ஓட்டம் சீராகிறது.
6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது
பெற்றோர்கள் கவனத்திற்கு
குழந்தைகள் படிக்கும் போது பள்ளிகளில் நீச்சல் கட்டாயப்பாடமாக்கவேண்டும். இல்லையேல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும்.நோயற்ற சமுதாயத்தை உருவாக்க நீச்சல் கலையும் உதவும்.
Source : http://www.seithy.co...&language=tamil
நன்றி http://www.yarl.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment