இணையம் என்றால் அதில் இணையற்று விளங்குகிறது கூகுள்.
இணையத் தேடலென்றால் கூகுள், இணையக் குழுமம் என்றாலும் கூகுள். இணையமென்னும் மெய்நிகர் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகி நிலை பெற்றுள்ள கூகுளுக்கு இணையாக அல்லது அது போன்ற ஒன்றை உருவாக்கும் சக்தி இந்தியத் தொழில் முனைவோரால் சாத்தியப்படலாம். இப்படி கூறியிருப்பவர் இந்தியரோ, இணையம் பற்றி அறியாதவரோ அல்ல. கூகுள் நிறுவன செயற்குழுத் தலைவர் எரிக் ஸ்மித் தான் இப்படி ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இந்தியா தனது இணையப் பயன்பாட்டுச் சக்தியை நாடெங்கும் முழுமையாகப் பயன்படுத்துமானால், இந்தியத் தொழில் முனைவோரால் இன்னொரு கூகுளை உருவாக்க முடியும் என்றார் எரிக். "ஆனால், இந்தியா தனது கிராமங்கள் தோறும் இணையப் பயன்பாட்டை உள்நுழைக்க வேண்டும்"
"நாட்டை விட்டுச் செல்லாமலே பெரும் உலக நிறுவனங்களை இந்தியர்கள் உருவாக்க முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்களால் உலகையே மாற்ற முடியும்" என்றார் எரிக். "1994ல் இணையத்தில் அமெரிக்கா இருந்த நிலையில் தற்போது இந்தியா இருக்கிறது. தனது இணையப் பங்களிப்பை நகரங்கள், கிராமங்கள் தோறும் அது அதிகரிக்க வேண்டும்" என்றும் எரிக் ஸ்மித் கூறினார்.
Source : http://www.inneram.com
No comments:
Post a Comment