Thursday, November 28, 2013

வெள்ளி கிழமை வந்து விட்டால்...



வெள்ளி கிழமை வந்து விட்டால்
நினைவு செய்ய மறுக்கிறது வேலைகள்

காரணம் ஜும்மா தொழுகையை
நினைவில் கொள்கிறது என் சிந்தைகள்

நான் சண்டை இட்ட ஒருவரை
சந்திக்க நினைப்பவரை


சந்திக்கும் இடம் அல்லவா
வருகிறது மன்னிப்பு கேட்க்க மனமல்லவா

ஊர் கூடி ஒரு இடத்தில்
இறைவனின் ஆலயத்தில்

அதிகாரம் இருப்பவனும் அமைதியாகிறான்
பேசியே பழக்க பட்டவன் பேசுவதை கேட்கிறான்

தலை குனிந்து சரணாகதி
இறைவா கொடு எனக்கு நல்ல விதி

என்று கேட்டு நிற்கும் போது நம் சிந்தை
ஒத்து கொள்கிறோம் நம்மிடம் பலம் இல்லாததை

நமது குறைகளை சொல்லும் போது இறைவன்
சொல்வதால் செவி எற்குரார்கள் மலக்குகள்

இறைவன் சொல்கிறான் இதுதான் நான் படைத்த
மனிதனின் இயலாமைஇன் இலக்குகள்

அதனால் தான் பதறும் நிலையுடன் படைக்க பட்டான்
பதறியே பாதி நாளை கழித்து விட்டான்


என் இறைவன் தானே என் குறை போக்குவான்

மனிதனெல்லாம் சாக்கு போக்கு காட்டுவான்

எனவே வந்தால் அந்த வெள்ளி கிழமை
மறந்து போகிறது என் புலமை

எப்போதும் போல் நினைவில் வந்து
நிற்கிறது இறைவனின் புகழ் பெருமை


பஷீர்
Bassheer Ahamed

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails