Monday, October 13, 2014

ஆட்சிக்கு எது அழகு ? - அபு ஹசீமா

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரங்களுக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே !
தன்னிடம் எல்லா அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக ஆர்ப்பாட்டங்கள் எதுவும் செய்யாதவன் .

அவன்....
மனிதர்களை தனது பிரதிநிதிகளாக படைத்து மண்ணுக்கு அனுப்பி வைத்து அவர்களில் சிலருக்கு ஆட்சி அதிகாரங்களையும் வழங்கி இருக்கிறான்.
அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு தெளிவான வேதவிளக்கங்களையும் தந்திருக்கிறான்!

ஆனால்...
மனிதர்கள் பெரும்பாலும் இறைக்கட்டளைகளை மதிப்பதேயில்லை.
சாதாரண நிலையில் இருப்பவர்கள்கூட பதவி கிடைத்தவுடன் பணம் புகழ் என்ற போதைகளுக்கு அடிமைகளாகி குடிசை வாழ்வை மறந்து கோட்டை வாழ்வே நிரந்தரம் என்று மாறி விடுகிறார்கள்.
ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தவுடன் தாங்கள்தான் மன்னாதி மன்னர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என ஆட்டம் போடுகின்றனர்.

இதற்கு மாற்றமாக வாழ்ந்துகாட்டி வரலாற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்
முஹம்மது ரசூலுல்லாஹ் ( ஸல் )அவர்களே!

Saturday, October 11, 2014

94 வயது சுதந்திர போராட்ட வீரர் மறைவு. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்.

94 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கேப்டன் அப்பாஸ் அலி இன்று அலிகாரில் காலமானார்.

புரட்சித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் "இந்திய தேசிய ராணுவத்தில் (இந்தியன் நேஷனல் ஆர்மி") பணியாற்றிவர்.

ஐஎன்ஏ ‍வில் கேப்டனாக பணியாற்றிய அவர், பர்மா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் ராணுவ வீரராக களப் பணியாற்றினார்.

பிரித்தானிய அரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆங்கிலேய அரசு அவரை சிறையில் அடைத்து 1945ல்மரண தணடனை வழங்கியது.

Friday, October 10, 2014

"இதில் ஊதுங்கள்" என்று கூறினார். ஊதினேன்.

நண்பருடனான சந்திப்பு. நண்பர் சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பின் உறுப்பினர். அதனால் அவரைச் சந்திக்க அங்கு வரச்சொல்லி இருந்தார். அவருக்கு இரவு 11.30 மணி உழவன் எக்ஸ்பிரஸில் பயணம். அவரை ரெயில் நிலையத்தில் விட்டுவிடும்படி கூறினார்.

நாங்கள் கிளம்பும்போதே மணி 11 ஐ தாண்டி விட்டது. காஸ்மோவில் இருந்து வெளியில் வந்ததும் புகாரி வாசலிலேயே போக்குவரத்துக் காவலர் ஒருவர் வண்டியை ஓரம் கட்டும்படி சைகை காட்டினார். ஓரம்கட்டி அவரிடம் "நண்பரை ரயிலுக்கு அனுப்ப வேண்டும் நேரமாகிவிட்டது.அவசரம்" என்று கூறினேன்.

இறையே ... உன் இல்லத்து முசல்லாவை முத்தமிடும் இந்த முல்லாவுக்கு...

 
யாரிடம்
பேசினாலும்
எத்தனை பேர்
தைரியம் சொன்னாலும்
கிடைக்காத
அந்த
அமைதியும்
நம்பிக்கையும்
ஆறுதலும்
இறைவா....
உன் காலடியில்
விழுந்து கிடக்கும்
அந்த
சில நொடிகளிலேயே
உள்ளத்தில்
ஒளியாக ஊடுருவி
பேரின்பம் தருகிறதே....

என் தலை தாழும்
நேரத்தில்
உன் அருள்தானே
எழுகிறது
என் விழி நீரும்
விழும்போது
மனச்சுமைதானே
குறைகிறது !

இறையே ...
உன் இல்லத்து
முசல்லாவை
முத்தமிடும்
இந்த
முல்லாவுக்கு
உன்
இரக்கம் மட்டும்தான்
கதியே !
 

'ஹுத்ஹுத்' புயலின் பெயருக்குப் பின்னால் சுவாரசியம்: அரபி மொழியில் கொண்டலாத்திப் பறவையைக் குறிக்கிறது - தி இந்து

'ஹுத்ஹுத்' புயலின் பெயருக்குப் பின்னால் சுவாரசியம்: அரபி மொழியில் கொண்டலாத்திப் பறவையைக் குறிக்கிறது - தி இந்து


கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒவ்வொரு நாட்டின் சார்பில் பெயர்
வைக்கப்படுவது வழக்கம். தற்போது வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில்
உருவாகியுள்ள இந்த ஆண்டின் முதல் வலுவான புயலுக்கு 'ஹுத்ஹுத்' என்று பெயர்
வைக்கப்பட்டுள்ளது.
இது ஓமன் நாட்டின் சார்பில் வைக்கப்பட்ட அரபிப் பெயர். குர்ஆனில் 5-க்கும்
மேற்பட்ட இடங்களில் இந்த பெயர் கூறப்பட்டுள்ளது. துருக்கி, இஸ்ரேல்,
சிரியா, ஓமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இப்பெயர் அதிகம்
பயன்படுத்தப்படுகிறது. சிரியா மன்னர் சாலமன் என்ற சுலைமானின் ராணுவத்தில்
தகவல் தொடர்புக்காகவும் இப்பறவை பயன்படுத்தப்பட்டிருப்பது சுவாரசியம்.
இதுகுறித்து இஸ்லாமிய அறிஞர் அ.முகம்மது கான் பாகவி கூறியதாவது:
'ஹுத்ஹுத்' என்ற அரபிப் பெயர் ஒரு பறவையைக் குறிப்பதாகும். தமிழில் இது
‘கொண்டலாத்திப் பறவை’ என்று அழைக்கப்படுகிறது. சிரியாவை ஆண்ட மன்னரும்,
இறைத் தூதருமான சுலைமானுக்கு (ஆங்கிலத்தில் சாலமன்) நெருங்கிய நண்பரைப்
போன்றது இப்பறவை. அவர் எங்கு சென்றாலும் இதையும் கூடவே எடுத்துச் செல்வார்.
இது பூமிக்கு அடியில் தண்ணீர் எங்கு ஓடுகிறது என்பதை சுட்டிக்காட்டும்
திறன் படைத்தது. பாலைவனப் பயணத்தின்போது, தண்ணீர் இருக்கும் இடத்தின்
அருகில் தரையைக் கொத்தி, தன்னுடைய கொண்டையை ஆட்டி ஆடும். அங்கு தண்ணீர்
இருக்கிறது என்று தெரிந்து, குழி தோண்டி தண்ணீர் எடுத்து தாகம்
தீர்ப்பார்கள்.
சரித்திரப் பறவையான 'ஹுத்ஹுத்'த்துடன் சுலைமான் மன்னர் பேசவும் செய்வார்.
அவரைவிட்டுப் பிரிந்து சென்று மீண்டும் திரும்பி வந்த 'ஹுத்ஹுத்', ‘‘ஏமன்
என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கு சூரியனை வழிபடுகிறார்கள். அந்த நாட்டை
பல்கீஸ் என்ற பெண் ஆட்சி செய்கிறாள்’’ என்று கூறுகிறது. இதன் பிறகு,
இஸ்லாமிய கோட்பாடுகளை எழுதி, ஏமன் அரசி பல்கீஸுக்கு 'ஹுத்ஹுத்' பறவை மூலம்
சுலைமான் தூது அனுப்புவதாக வரலாறு.
இவ்வாறு மார்க்க அறிஞர் கான் பாகவி தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் இப்பறவை ‘ஹூப்போ’ என்று அழைக்கப்படுகிறது. இது இஸ்ரேல்
நாட்டின் தேசியப் பறவை. இதன் தலையில் நீளமான ஊசி போன்ற கொண்டை உள்ளது.
பெரும்பாலும் தண்ணீர் இருக்கும் இடத்தின் மீது தனது ஊசிக் கொண்டையை குடைபோல
விரித்து அழகாக ஆடும். அதனால் தமிழில் கொண்டலாத்திப் பறவை எனப்படுகிறது.
மரங்கொத்தி, மீன் கொத்தி வகையைச் சேர்ந்தது. பாலைவனங்களில் அதிகம் வாழும்.
இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் பழுப்பு நிறத்திலும்,
கருப்பு, வெள்ளை கலந்த பட்டையுடனும் காட்சியளிக்கும். 

Thursday, October 9, 2014

'குள' ப்பெருமைப் போற்றுவோம்...

ஆறில்லா ஊரின் அழகு பாழ்' என்றார் அவ்வை..ஈரம் இழந்த ஆறுகளின் நிலை கண்களை ஈரம் ஆக்குகின்றன.
காவிரியின் பிள்ளைகளில் ஒன்றான திருவாரூர் ஓடம்போக்கியாறு பற்றி 'ஒரு நதியின் சடலம்' என்ற எனது கவிதையை வாய்ப்புள்ளோர் வாசியுங்கள்.

ஆற்றை விடவும் ஊருக்கு அழகு சேர்ப்பவைக் குளங்கள்.
சிலநாள்கள் விடுமுறையில் சொந்த ஊர் வந்த நான் என் பாசத்திற்குரிய பழையகுளங்களைத் தேடிச்சென்றேன்.
அல்லிக்குளம், பிடாரிகுளம்,பள்ளிவாசல்குளம்,ஐநூற்றுபிள்ளையார்குளம்.. என திருவாரூரின் எல்லாக் குளங்களும் படுகொலைச் செய்யப்பட்டுவிட்டன.

Thursday, October 2, 2014

தியாகத் திருநாள் - நினைவுகள்

(கவிஞர் ப.அத்தாவுல்லா)
பரந்து கிடந்தது அந்த பாலைப் பெருவெளி. கண்ணெட்டிய தூரம்வரை மண்கொட்டிக் கிடந்தது. அந்தப் பெருமகனாரும் அவர்தம் துணைவியாரும் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பால்மணம் மாறாத அந்த பச்சிளம் பாலகர். இறைவன் இட்டுவைத்த இலக்கு நோக்கி அவர்களது பயணம் அமைந்திருந்தது. தமது எந்த சொந்த விருப்பங்களுக்காகவும் தம்மை விலைப்படுத்திக் கொள்ளாத அந்த நேயர் குறிப்பிட்ட இடம் வந்ததும் தம் பயணம் நிறுத்தினார். அவர்களது தேவைக்காகக் கொஞ்சம் கனிகளையும் தோற்பை சுமந்த குடிநீரையும் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தார்.

அவர்களைக் குடியமர்த்திய அந்தப் பெருவெளியில் அந்த மரத்திற்கு அருகில் இந்த உலகத்தின் மையப்புள்ளி, சற்றே உயர்ந்த மணல்மேடாய் தெரிந்தது. திரும்பி நடந்த அந்தப் பெருமகனாரை நோக்கி அவர் துணைவியார் வினவினார்.

'எங்களை இங்கே விட்டுவிட்டுச்செல்லுமாறு இறைவன்தான் உங்களுக்குக் கட்டளையிட்டானா?'

'ஆமாம்'

'அப்படியானால் அவன் எங்களைக் கைவிட மாட்டான்' – உறுதிபட எழுந்தது அன்னையின் குரல். அவர்களை விட்டுச்சென்ற அந்த இடத்தில் இரு மலைக்குன்றுகள் நின்றன. பக்கத்தில் அந்த மணல்மேடு இருந்தது. அந்த மணல்மேடு ஆதியிறை ஆலயம் 'கஅபா'.

LinkWithin

Related Posts with Thumbnails