Wednesday, November 11, 2009

இஸ்லாமியச் சட்டம் (10)

நீடூர் A.M.சயீத்
இஸ்லாமிய சட்டங்களை நோக்கி...
இன்றைய உலகியல் சட்டங்களும், தீர்ப்புகளும் இஸ்லாமிய ரீஅத் சட்டங்களை நோக்கி மாறிக் கொண்டிருக்கின்றன. இந்திய குற்றவியல் சட்டம் 299-ம் பிரிவு ஒருவரின் உயிரை போக்குவதற்கு தகுந்த செயலைச் செய்து கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை செய்தால் அதைக் கொலைக்குற்றம் என்று குறிப்பிடுகிறது. கொலை செய்யாது மரணம் விளைவிக்கும் குற்றம் பற்றி பிரிவு 300ல் குறிப்பிடப்படுகிறது. இந்திய குற்றவியல் சட்டம் 302-வது பிரிவின்படி கொலை செய்தவருக்கு மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ அபராதத்துடன் தண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுவாக ஆயுள் தண்டனை என்பது இருபது வருட சிறை தண்டனையை குறிப்பிடும். அண்மையில் உச்சநீதிமன்றத்தின் ஆயுள் தண்டனை பற்றிய புதிய தீர்ப்பு ஒன்றிய உச்சநீதிமன்ற நீதியரசர்களான றீ.இராஜேந்திரபாபு றீ.ஹி.ஃபுகான் வழங்கிய தீர்ப்பில்
''ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியின் வாழ்க்கை முழுவதையும் பொருத்தாகும். தண்டனை பெற்றவர் சிறைச்சாலையில் நடந்து கொண்ட முறை, அவர் செய்த குற்றம், ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அவரை முழுமையான தண்டனை அனுபவிக்கச் செய்வதா அல்லது இடையில் விட்டு விடுவதா என்பதை அரசுதான் முடிவு செய்யும்''. ஆயுள் தண்டனை பெற்றவர் பொருத்தமான நேரத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தன் வழக்கின் முறையீட்டை தந்து முன்னதாகவே விடுதலை செய்ய விண்ணப்பிக்கும் உரிமை மட்டுமே அவருக்கு உண்டு. மாறாக ஆயுள் தண்டனை பெற்ற ஒவ்வொருவரும் இருபது ஆண்டுகாலம் சிறை உரிமையைக் கோர முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலே காணப்பட்ட இந்திய குற்றவியல் சட்டங்களும், புதிய தீர்ப்புகளும் சமூக வாழ்வை சிதறிடிக்கச் செய்யும் பாவிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதை நம்மால் உணர முடிகிறது.

இப்போதுதான் இவர்களது சிற்றறிவிற்கு புலப்பட்டுள்ளதோ! பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏக இறைவனான அல்லாஹ் தனது வான்மறையில் முஃமின்களே! கொலை செய்யப்பட்டவர்கள் வியத்தில் பழிவாங்குதல் உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2 : 178) என்று குறிப்பிடுகின்றான். இப்படி பழிவாங்கச் சொல்வதன் மூலம் மனிதனை அழித்து விடுவது நோக்கமல்ல. இந்த கடுமையான எச்சரிக்கை மூலம் கொலைகள் தவிர்க்கப்பட்டு குற்றமற்ற அப்பாவிகள் நிம்மதியாக வாழமுடியும் என்பது மட்டுமே நோக்கமாகும்.

இதைத்தான் அறிவுடையவர்களே! பழிவாங்குவ(தின்இச்சட்டத்)தில் உங்களுக்கு வாழ்வுண்டு (இதன் மூலம் பழிவாங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் கொலை செய்யக் கருதுபவரும், அவரால் கொலை செய்யக் கருதப்பட்டவரும் ஆகிய) நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் (அல்குர்ஆன் 2 :179) என்ற வசனம் தெளிவுபடுத்துகிறது.

கொலை செய்து விட்டார் என்பதற்காக மூர்க்கத்தனமாக பழிவாங்கக் கூடாது. வேண்டுமென்றே செய்தாரா, அல்லது தவறுதலாக செய்யப்பட்டதா, கொலை செய்வதற்கென்றே உள்ள ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா, அல்லது சாதாரண குச்சி போன்றவைகளைக் கொண்டு தட்டியதில் கொலை நடந்து விட்டதா என்பன போன்றவற்றை நன்கு ஆராய்ந்து பின்னர்தான் பழிவாங்க வேண்டும். கொலையுண்டவர் குடும்பத்தினர் நாடினால் மன்னித்தும் விடலாம். இப்படி மன்னிக்கப்பட்டாலோ அல்லது தவறுதலாக கொலை செய்து விட்டாலோ (பழிவாங்கப்படுவதன்றி) கொலையுண்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை கொலையாளி கொடுக்க வேண்டும். இதுபற்றி குர்ஆனின் (2:178) வசனமும் (4:92) வசனமும் தெளிவு படுத்துகிறது.

கற்பழிப்பு காரணமாக சமுதாய சுயகெளரவம், நாட்டின் ஒழுக்க நெறி கெட்டுவிடுவதோடு மனிதனின் மிருகவெறி வளர்ந்து விடுகிறது என்பதால்தான் கற்பழிப்பு, குற்றம் தகுந்த சான்றுடன் நிரூபிக்கப்பட்டால் திருமணமாகாதவனுக்கு 100 சவுக்கடியும், மணமுடித்தவனுக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு தங்கள் பக்கத்து வீட்டு ஒட்டகை தங்கள் வீட்டில் தண்ணீர் அருந்தியதற்காக சண்டையில் ஈடுபட்டு கொலை செய்து கொண்டு மூர்க்கத்தனமாக வாழ்ந்து கொண்டிருந்த அதே மக்கள்தான், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் போர்க்களத்தில் வெட்டுண்டு தாகத்தில் தவித்து, தண்ணீர் கேட்டு அது கிடைத்த போது தாம் அருந்துவதற்கு முன் அருகில் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்தவருக்கு அத்தண்ணீரை தந்து ஈடு இணையற்ற தியாகம் செய்தவர்களானார்கள். இப்படி மூர்க்கர்களை தியாகச் செம்மல்களாகவும், மூடர்களை பேரறிஞர்களாகவும் மாற்றியதால் மயானபூமியாக காட்சி தந்த அரபகம் அமைதிப்பூங்காவாக மாறியது. இது உறுதி மிக்க இஸ்லாமிய சட்டங்களையும், போதனைகளையும் பின்பற்றியதால் ஏற்பட்டதுதானே!

தற்போது கூட இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தி ஆட்சிசெய்யும் இஸ்லாமிய நாடுகளில் கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்ற குற்றப்பதிவுகள் மற்ற உலகநாடுகளின் குற்றப்பதிவு புள்ளி விபரங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகவே இருக்கின்றன. இக்குறைவான பதிவுகள் கூட வெளிநாடுகளிலிருந்து வந்து அங்கு பணிபுரியும் நபர்களால் ஏற்படுகிறது என்பதை அந்நாடுகளின் புள்ளி விபரங்கள் நிரூபிக்கின்றன.

ஆக இஸ்லாம் கூறும் தண்டனைகள் குற்றம் நடைபெறாமல் தடுப்பத்றகுத்தான் என்பதற்கு இவைகள் மிகப்பெறும் சான்றாகும். இதைத்தான் திருமறையின் விரிவுரையாளர் அல்லாமா யூசுப் அலி அவர்கள், ''இஸ்லாமிய குற்றவியல் சட்டம் மனிதனை திருத்துவதற்கே முதலிடம் தருகிறது. சமூகத்திலிருந்து அவனை நீக்கப்பட வேண்டுமென்பது இறுதியான (இரண்டாவது) திட்டமாக இருக்கும்'' என்று குறிப்பிடுகிறார்.

எனவே தான் இறைவன் வறுமையை அஞ்சி உங்கள் குழந்தைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நாம் (தாம்) அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். நிச்சயமாக அவர்களை கொலை செய்வது பெரும்பாவமாகும் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 17:31)

குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு எண்.433ன் படி தண்டிக்கப்பட்ட நபரின் அனுமதியின்றி சம்பந்தப்பட்ட அரசு (1) ஒரு மரண தண்டனையை இந்திய தண்டனை சட்டத்தின்படி அளிக்கத்தக்க வேறொரு தண்டனையாகவும், 2. ஆயுள் தண்டனையை பதிநான்கு ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத் தண்டனையாக அல்லது அபராதமாக, 3. கடுங்காவல் தண்டனையை வெறுங்காவல் தண்டனையான அல்லது அபராதமாக 4. வெறுங்காவல் தண்டனையை அபராதமாக மாற்றலாம்.

மரண தண்டனை கூட மக்களாட்சி தலைவரி (ஜனாதிபதியி)டம் கருணை மனு கொடுக்கும் போது நிறுத்தி வைக்கப்படுகின்றன. சமூக வாழ்க்கையை சீரழிக்கும் பாவிகள் மனிதர்களால் இயற்றப்படுகின்ற இதுபோன்ற பலங்குன்றிய சட்டங்களால் தப்பித்து விட்ட போதிலும் நிரந்தரமாக ஆட்சி செய்கின்ற இறைவனின் சட்டம் இவர்களை தண்டிக்காமல் விட்டு விடாது.

அநியாயக்காரர்கள் செய்கின்றவை பற்றி அல்லாஹ் பாராமுகமாயிருக்கிறான் என்று (நபியே!) நீர் ஒருக்காலும் எண்ண வேண்டாம் அவர்களை (அழிக்காமல்) அவன் பிற்படுத்தி வைத்திருப்பது கண்கள் எதில் விரைத்துப் பார்த்துக் கொண்டிருக்குமோ அந்த (மறுமை) நாளுக்காகத்தான். (அல்குர்ஆன் 14:42)

எனவே ஆட்சியாளர்கள் இஸ்லாமிய சட்டங்களை பிரகடனப்படுத்தி நிம்மதியான உலகை படைக்க முன் வருவார்களாக!

இஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்
கற்பு என்பது விலை மதிக்க முடியாத அளவுக்கு உயர்வானது. ஒரு முறை கற்பை இழந்தால் திரும்ப பெற முடியாத இழப்புதான். ''கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை'' என்று சொல்வர் ஆன்றோர்கள். ஆனால் இன்றைய சமூக வாழ்வில் கற்பு என்ற தத்துவமே மறு பரிசீலனைக்கு உரியதாகிவிட்டது. பொருளாதாரப் பிரச்சினையால் பருவமடைந்து பல ஆண்டுகளாகியும், திருமணமாகாத பெண்கள் இருப்பதாலும், பத்திரிகைகளிலும், படங்களிலும், காமஉணர்வைத் தவறுதலாக புரிந்து கொண்டு கல்வி கூடங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பழகும் நிலையினாலும், கற்பழிப்பு குற்றங்கள் கணக்கிலடங்காமல் வந்து கொண்டிருக்கின்றன.
குற்றங்கள் மலிவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சினிமா என்னும் ''ஆக்டோபஸ்'' ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பெரும் பாவங்களில் ஒன்றான சினிமா சமூகத்தின் வாழ்வை, அதன் பொருளாதாரத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை பல முனைகளிலும் தாக்கி சீரழித்து வருகிறது.''காட்டும் திரைப்படத்தில் கற்பில்லை பொறுப்பில்லை. கல்லூரி பாடத்தில் வாழ்க்கை நம்பிக்கையில்லை. நாட்டில் ஒருமைபாடில்லை. எனவேதான் நாம் விழாக்கள் கொண்டாடல் சரியில்லை'' என்று பாடினான் ஒரு கவிஞன். காம உணர்வைத் தூண்டும் காட்சிகள் போதாதென்று பொருந்தாக் காமம், முறைதவறிய காமம், வக்கரித்துப் போன காமம் ஆகியவற்றையும் கட்டுரைகளிலும், கதைகளிலும் நவீனங்களிலும் இடம் பெறச் செய்து வருகிறார்கள். இதன் விளைவாக கோபத்தினால் செய்யும் பாவங்களை விட, ஆசையினாலும், காமத்தினாலும் செய்யும் பாவங்கள் அதிகமாக வருகின்றன என்பதே கசப்பான உண்மை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் 7 விநாடிகளுக்கு ஒரு கற்பழிப்பு நடந்து வருகிறது என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இவை போதாதென்று ஞானிகள் நிறைந்த இந்திய நாட்டிலும் இத்தகைய கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாகி வருவதுதான் மிகுந்த கவலையைத் தருகிறது.

குழந்தைகளையும் கற்பழிப்பு செய்யும் கொடுமையான பாவச்செயல் இந்திய நாட்டில் ஏற்பட்டு வருகிறது என்பதை வழக்கு மன்றங்களில் வரும் தீர்ப்புகளைப் படித்து வேதனை அடைகிறோம்.

ஹிமாச்சல மாநிலத்தில் மாவட்ட குற்றவியல் நீதிபதியிடம் ஒரு வழக்கு வந்தது. 5 1/2 வயதுடைய ஒரு சிறுமியை காமவெறியால் ஒரு கயவன் கற்பழித்திருக்கிறான். அதன் காரணமாக இந்தியக் குற்றத் தண்டனை விதித் தொகுப்பு அல்லது இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code)   பிரிவு எண் 376ன் படி வன்புணர்ச்சி (Indian Penal Code) குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அவனுக்கு கொடுக்கப்பட்டது.(ஒரு பெண்ணின் எண்ணத்திற்கு மாறாகவே, அவளது இசைவை பெறாமலோ, அவளை அச்சுறுத்திப்பெற்ற சம்மதத்துடனோ அல்லது தாம் அவளுடைய கணவன் என்று அவளை நம்பும்படி செய்து அதனால் பெற்ற சம்மதத்துடனோ ஒரு பெண்ணைப் புணர்தல் வன்புணர்ச்சி (Rape) என்ற குற்றமாகும்.) மேல் முறையீட்டிற்காக இந்த வழக்கு ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு சென்றவுடன் தண்டனை பெற்ற குற்றவாளி குற்றம் நடந்த நேரத்தில் சிறிது மனநிலை சரியில்லாமல் இருந்தார். என்று வாதிட்டதால் மாவட்ட நீதிபதி தந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

பிரிவு எண்.375ல் வன்புணர்ச்சி என்றால் சட்டப்படி என்ன? என்ற விளக்கம் தரப்பட்டுள்ளது. பிரிவு எண்.376ல் அக்குற்றத்திற்கான தண்டனை பற்றிய விபரம் தரப்பட்டுள்ளது. குறைந்தது ஏழு வருடத்திலிருந்து பத்து வருடம் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அபராதத்துடன் வன்புணர்ச்சி குற்றத்திற்காக விதிக்கப்படலாம்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதியரசர் டாக்டர்.பு.றீ.ஆனந்த், நீதிபதி துரைசாமி ராஜூ, நீதிபதி யூ.ளீ.லகோரி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு (நடுவர் ஆயம்) ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து அம்மாநில மாவட்ட குற்றவியல் நீதிபதி குற்றவாளிக்கு பத்து வருட தண்டனை கொடுத்ததை உறுதி செய்தது. உச்சநீதிமன்ற இத்தீர்ப்பு 01.05.2001ல் வழங்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட காமுகர்கள் சமுதாயத்தில் தலைதூக்க விடக் கூடாது என்பதற்குத்தான் ரீ அத் சட்டப்படி கற்பழிப்புக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அக்குற்றத்தை செய்பவன் திருமணமாகாதவனாக இருக்கும் பட்சத்தில் நூறு சவுக்கடியும், மணமானவனாக இருந்தால் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டுமென்று இஸ்லாம் பகருகிறது.

இஸ்லாமிய சட்டங்களை குளைக் கண்கொண்டு பார்ப்பவர்கள் தண்டனை கடினமாக உள்ளது என்பதை மட்டும் பார்க்கிறார்களே தவிர இத்தண்டனை நிரூபணமாவதற்கு எவ்வளவு கடினமான நிபந்தனை என்பதை பார்ப்பதில்லை.

''எவரேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வராவிட்டால், அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தகைய)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்புமீறிய) தீயவர்கள். (அல்குர்ஆன் 24:4) என்ற வசனத்தின் மூலம் தண்டனையின் நோக்கம் மனிதனை அழிப்பது நோக்கமல்ல. மாறாக பாலியல் உணர்வுகளை தவறாக நிறைவேற்றக் கூடாது என்று எச்சரிப்பதுதான் நோக்கம் என்று இஸ்லாம் கூறுவதை ஏனோ இவர்கள் உணருவதில்லை.

குழந்தை கற்பழிப்பிற்காக மரண தண்டனை உறுதிபடுத்தி உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றை நாம் பார்க்கலாம். எம்தா திவாரி என்பவன் 7 வயது பெண்ணை கடத்தியதோடு 30.04.1995ல் கற்பழித்துக் கொன்றுவிட்டான். அது தொடர்பான வழக்கில் ஷாஹடோல் (மத்தியப்பிரதேசம்) அடினல் செசன்ஸ் நீதிபதி தன் தீர்ப்பில் மரண தண்டனை தந்தார். மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் அதை உறுதி செய்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதியரசர் எஸ்.பி.குர்துகர்மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து மரணதண்டனையை உறுதிப்படுத்தியதோடு கீழ்க்கண்டவாறு தன் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்:

''குற்றம் செய்தவரின் உள்நோக்கம், எளிதாக்க கையாளப்படக் கூடிய பலவீனமான குற்றமிழைக்கப்பட்ட சிறுமி, மிகக் கொடுமையான குற்றம். அதனால் அளிக்கப்பட்ட மரண வழக்கு அபூர்வத்திலும் அபூர்வமானது. அதனால் இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனைதான் விரும்பத்தக்கது. ஏனெனில் மற்றவர்கள் இத்தகைய கொடுமையான குற்றத்தைச் செய்வதிலிருந்து தடுப்பதற்கு மட்டுமல்லாமல் இத்தகைய குற்றங்கள் சமுதாயத்தின் வெறுப்புக்குரியது என்பதை வலியுறுத்தி தெரிவிப்பதற்காகவுமே இருக்கும்.''

இங்கிலாந்து நாட்டு குற்றவியல் சட்டத்தில் பதினான்கு வயதுக்கு கீழே உள்ள ஒருவனால் கற்பழிப்பு செய்ய முடியாது என்று விதிவிலக்கு இருப்பதை இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டு நடப்பு இங்கிலாந்திய கருத்தை பொய்யாக்கிவிட்டது என்றே கூற வேண்டும். இது வியத்தில் சரியான கருத்தை இந்தியா கொண்டிருந்தாலும் கற்பழிப்பு நடைபெறாமல் தடுக்க இவர்களிடம் என்ன திட்டம் உள்ளது? இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தால் தலைகீழ் நின்றாலும் இக்குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எவராலும் இயலாது. இது சவால்.

இந்த பேருண்மையை கண்டு கொள்ளாமல் ரீஅத் சட்டத்தை கேலியாக விமர்சிக்கின்ற இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமைச்சர் குற்றங்களைப் பற்றிய புள்ளி விபரங்களைக் கூறுகையில் 1981ம் ஆண்டிலிருந்து 1983ம் ஆண்டு வரை இந்திய நாட்டில் சராசரி ஒரு நாளைக்கு அறுபது கொலைகறும் பதினான்கு கற்பழிப்பு குற்றங்களும் நடக்கின்றன என்று குறிப்பிடுகிறது. இவ்வளவு நடந்த பிறகும் இது போன்ற குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வகை செய்யும் இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தத் தயங்குவது ஏனோ?

முன்னாள் குடியரசுத்தலைவர் 'வேதாந்தி' டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒருமுறை ''உடல் பல ஆளுமையும், அறிவு நுட்ப விழிப்புணர்ச்சியும், ஆத்மீகக் கல்வியும் இல்லாதிருந்தால் கேடு விளைவிக்கும்'' என்று குறிப்பிட்டார்.திருமணம் செய்தவர்களே ஷைத்தானுக்கு அடிமையாகி கற்பழிப்பு குற்றங்களில் குற்றவாளியாகி இருக்கிற இச்சூழ்நிலையில் ஆத்மீகப் பயிற்சி இல்லாத திருமணம் ஆகாதோர் நிலை இன்னும் மோசமாக இருக்கும் என்பதால்தான் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் கொள்பவர்தான் சன்மார்க்கத்தில் பாதியைப் பாதுகாத்தவர் ஆவார் என்று சொன்னார்கள். (நூல் : பைஹகி) திருமணம் புரியாதவர் எவ்வளவுதான் தன் கற்பைப் பாதுகாத்துக் கொண்டாலும், அநேகமாக தீய பார்வையை விட்டுத் தன் கண்களையும், தீய சிந்தனையை விட்டு தன் மனத்தையும் காத்துக் கொள்ள முடியாது.
ஞானச்சீமாட்டி ராபியா பஸரியா (ரஹ்) போன்ற துறவியாயிருந்தாலும், அன்னியப் பெண்ணோடு தனிமையில் இருக்காதீர்கள் என்று அல்லாஹ்வின் நேசர் அக்லாக் ஹூசேன் காஸிமி அவர்கள் எச்சரிப்பதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாகும்.
ரபிக் Rafique 1980 Cr.L.J.1344  என்ற வழக்கில் நீதிபதி கிருஷ்ண அய்யர் இந்த வழக்கின் தீர்ப்பில் பருவமடையாத ஒரு இளம் பெண் தனக்கு இழைக்கப்பட கொடுமையை தன்னுடைய தாயாரிடத்திலோ, வேறு ஒருவரிடத்திலோ வெளிப்படுத்தினால் அதுவே சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். ரபிக் வழக்கில் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் ஒரு பெண்ணின் கற்பு விலை மதிப்பு அறிந்த ஒருவன் மற்றொரு பெண்ணின் கற்பழிப்பு பற்றி பொய்யுரைக்க மாட்டான். ஒரு பெண் கற்பழிக்கப்படுகிற போது இது சாதாரண உடல்ரீதியான காயமல்ல. மரணத்தையயாத்த அவமானம் அப்பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று கருத வேண்டும் என்று தன் தீர்ப்பில் குறிப்பிடுகிறார்.

ஆணும், பெண்ணும் கலந்துரையாடிப் பழகும் தினசரிப் பழக்கமுள்ள பெண்ணின் கற்பு அனலிடை மெழுகாய் அழிந்து விடுவதும், நீரிடை உப்பாய் நிலை கெடுவதும் உறுதி என்று நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.

இத்தகைய காரணங்களினால்தான் பர்தா முறை இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுகிறது. ஒரு பெண்ணின் முகம் உட்பட அவள் கவர்ச்சியை பிற ஆடவர் பார்க்கக் கூடாது. மறைக்கும் ஒரு செயல் காரணமாக பிற ஆடவர் நெஞ்சு புகாத பெருங்கற்பைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஒரு சாதாரண நாணயத்தைப் பாதுகாப்பதற்காக இரும்புப் பெட்டியில் வைத்து அதைப் பா துகாக்கிறோம். அப்படியயன்றால் விலை மதிக்க முடியாத கற்பை பாதுகாப்பதற்கு எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும். அதை பாதுகாக்கும் ஒழுக்க முறைதான் பர்தா என்பதை இன்றைய இளைய சமுதாயம் உணர வேண்டும்.

தலைகனிந்து நடக்கும் பெண் கற்புக்கரசியாக இருப்பாள். காமரசம் மிக்க வேடிக்கை பேச்சுகளில் அவள் கலந்து கொள்ள மாட்டாள். அத்தகைய எழுத்துக்களையும் அவள் படிக்க மாட்டாள்.

பெண்களுக்குத் தேவையானதாகக் கருதப்படும் வெட்கம், நாணம், சூடு, சொரனை, கற்பு ஆகிய அனைத்தும் தங்களுக்கும் உண்டு என்பதை ஆண்களும் உணர வேண்டும். இதைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

எனவேதான் இறைவன் தன் அருள்மறையில் கூறுகிறான்: (நபியே!) விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறும் : அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கி வைக்கவும். தங்கள் கற்பையும் இரட்சித்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான். (நபியே!) விசுவாசமுள்ள பெண்களுக்கும் நீர் கூறும் : தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்து, தங்கள் கற்பையும் இரட்சித்துக் கொள்ளவும். (அல்குர்ஆன் 24 : 30,31) துன்புணர்ச்சி என்பது மனிதனின் மிருகத்தன்மையை ஒழித்து மனிதத்தன்மையை பெற்று மனத்தூய்மையான நபி வழியை நோக்கி நாம் நடந்தாக வேண்டும்.

மிதமிஞ்சிய பேச்சு, உணவு, தூக்கம் ஆகியவற்றின் காரணமாக அவலநிலையும், அழிவு நிலையும் ஏற்படுவதால் நபி வழியில் ஷரீஅத் சட்ட ஒளியில் நாம் முதலில் நடந்து, பிற சமுதாயத்தினரும் இப்பேருண்மையை ஏற்று குற்றமற்ற நிம்மதி நிறைந்த உலகைப் படைக்க முயற்சிப்போமாக, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. 

LinkWithin

Related Posts with Thumbnails