இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் போது வழங்கப்பட்ட தீர்ப்புகள்
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.
இன்று இந்திய நாட்டில் ஒரு குற்றவாளி கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுஇ மாநில வழக்கு மன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுஇ மேல் முறையீட்டில் இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்தால் குடியரசு தலைவரிடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் கருணை மனு கொடுக்கலாம். ஒரு பிராமண சமூகத்தைச் சார்ந்த பெண்ணை அரசாங்க தலைமை வர்த்தக ஆணையாளர் கற்பழித்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு கல் எறிந்து கொல்லப்படும் மரண தண்டனை மன்னர் அக்பர் விதித்தார்.
(டீயனயலயni : ஆரவெயமாயடிரட வுறயசiமா ஏழட.ஐஐ.P.124இ யு.டு.ளுசiஎயளகயஎய யுமடியச வாந புசநயவ ஏழட.ஐ.P.519)
பிறர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதன் காரணமாக ஆண்மையை அழித்தல் என்ற தண்டனையுடன் ஒரு குற்றவாளிக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த மகளிர் கருத்தரங்ம் ஒன்றில் பெண்களை கற்பழிக்கும் ஆண்களுக்கு காயடித்தல் தண்டனையை (ஊயளவசயவழைn) தர வேண்டும் என்று ஒரு பெண் ஆவேசமாக பேசினார். ஒரு முஸ்லிம் பெண்ணை தன் வீட்டில் வைத்துக் கொண்டு தன் பெற்றோர்களைக் கொன்று வீட்டிலேயே புதைத்த குஜராத் மாநில ராஜா விக்ரமாதித்சிங் என்பவரின் மகன் கல்யாண் என்பவருக்கு நாக்கு துண்டிக்கப்படும் தண்டனை கொடுக்கப்பட்டது.
மன்னர் ஒளரங்கசீப் ஆட்சிகாலத்தில் நடந்த சுவையான வழக்குகளில் ஒன்று : சிந்து மாநில ஆளுநர் ஒருவர் வசதி படைத்த ஒரு வணிகரின் புதல்வி அறைக்குள் பெண்வேடம் அணிந்து ஓர் இரவு தங்கிய செய்தி அரசருக்கு தெரிய வந்த போது ஆளுநர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு தலைநகர் டில்லி வரை கால்நடையாகவே நடந்து வரும் தண்டனையை கொடுத்தார்.
மன்னர் ஷாஜஹான் அரசு பணியாளர்களை மிகவும் கண்காணிப்புடன் கவனித்து வந்தார். ஒழுக்கங்கெட்ட அதிகாரிகளை மதயானை முன் வீசியயறிந்து அந்த யானை அவர்களை கொல்லும் நிலைக்கும் ஆளாக்கினார். இதன் விளைவாக அர• பணியில் இருப்பவர்கள் ஒழுக்கத்தோடு செயலாற்றி வந்தனர்.
அரசு அதிகாரிகளாக பணியாற்றுபவர்கள் மக்களின் ஒழுக்கத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1. முஸ்லிம்கள் தொழுகைஇ நோன்பு ஆகியவற்றை சரியாக கடைபிடிக்கிறார்களா? என்பதை கவனிப்பதோடுஇ மது அருந்தாமல் இருக்கிறார்களா? என்பதையும் கண்காணித்து வர வேண்டும்.
2. உடல் நலம் இல்லாதவர்கள் சிகிச்சை பெற தவறாதிருக்கவும்இ பிச்சை எடுக்காதிருக்கவும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. மருத்துவர்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிறார்களா? கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒழுங்காக கற்றுக் கொடுக்கிறார்களா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
4. வேலையாட்களை வைத்திருப்பவர்கள் வேலைக்காரர்களை கொடுமை படுத்தாமல் இருக்கிறார்களா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
5. நதிகளில் படகு ஓட்டுபவர்கள் அளவுக்கு அதிகமான •மையோடு செல்லாமலும்இ பருவநிலை ஒத்துவராத போது படகுகளில் பயணம் செய்யாமல் இருக்கவும் கவனிக்க வேண்டும்.
மன்னர்இ ஜஹாங்கிர் தவறாது நாள்தோறும் நீதிமன்றத்திற்கு சென்று தன் கடமையை ஆற்றிவந்தார். தொழுகை நேரங்களைத் தவிர உடல் நலமில்லாத நேரத்திலும் மக்களின் குறைகளை நேரில் ஆழமாகவும் அமைதியாகவும் கேட்டு வழக்குகளை விசாரித்து குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையும் முறையீடு செய்தவர்களுக்கு நியாயமான தீர்ப்பும் வழங்கியிருப்பதாக தம்முடைய குறிப்பேட்டில் பதிய வைத்திருக்கிறார்.
முஸ்லிம் மன்னர்கள் நாள்தோறும் வழக்குகளை விசாரித்தாலும் தீர்ப்பு சொல்வதற்காக ஒரு நாளை ஒதுக்கியிருந்தனர். மன்னர் அக்பர் வியாழக்கிழமையும்இ மன்னர் ஜஹாங்கீர் செவ்வாய்கிழமையும்இ மன்னர் ஷாஜஹான் புதன் கிழமையும் தீர்ப்பு சொல்லும் நாட்களாக வைத்திருந்தனர். அரசர்கள் எங்கு சென்றாலும் தீர்ப்பு சொல்லும் நாளில் தவறாமல் தர்பாரில் இருப்பார்கள். மன்னர் ஜஹாங்கீர் இதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். மக்கள் நீதிவழங்கும் இடத்திற்கு சுதந்திரமாகச் செல்லலாம். எந்தத் தடையும் இல்லை.
குடிமக்கள் அரசரை நேரில் சந்தித்து தம் கோரிக்கைகளைச் சொல்லலாம். சமுதாயத்தில் கீழ் மட்டத்தில் உள்ள ஒரு தோட்டக்காரர் வழக்கு இங்கே குறிப்பிடத்தக்கது.
மன்னர் ஜஹாங்கீர் காலத்தில் ஆளுநர் முக்ராப்கானின் வேலைக்காரர் ஒரு தோட்டத்தில் நுழைந்து அனுமதியில்லாமல் ஒரு மரத்தை வெட்டியது பற்றி அரசரிடம் முறையீடு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் குற்றச்சாட்டு உண்மையயன நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளியின் கட்டை விரல்கள் இரண்டும் அகற்றுவதற்கான தண்டனை வழங்கப்பட்டது.
இஸ்லாமிய ஆட்சியில் வழக்கறிஞர்கள் இந்தியாவில் வாதிக்கோஇ பிரதிவாதிக்கோ பிரதிநிதி என்ற முறையில் வழக்காட அனுமதிக்கப்பட்டனர். இஸ்லாமிய சட்டப்படி வக்கீல் தொழில் புனிதமான தொழிலாக கருதப்பட்டது. அல்குர்ஆனிலும் வக்கீல் என்ற சொல் காணப்படுகிறது.
இந்தியாவில் முஸ்லிம்கள் ஆட்சி காலத்திலிருந்து இன்றைய நாள் வரை நீதிமன்றங்களில் ஆஜராகி தம் கட்சிக்காரரின் உண்மையையும் கோரிக்கையையும் நீதிபதியின் முன் பரிந்துரைக்கும் வழக்கறிஞரை வக்கீல் என்று கூறப்படுவதை அறியலாம்.
இஸ்லாத்தின் ஏக இறைவனாகிய அல்லாஹ் தன் அடியானைவிளித்து எனக்கும் உனக்கும் இடையில் எவ்விதமான பரிந்துரைகளும் இல்லை என்று அறிவுறுத்துகிற சொல்லாக வக்கீல் என்பது அல்குர்ஆனில் 28:28 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டம் (வுhந யுடட ஐனெயை ஆரளடiஅ Pநசளழயெட டுயற) பற்றி ...
இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளாக இருந்தாலும்இமுஸ்லிம்கள் பெரும்பான்மையினர் வாழும் நாடுகளாக இருந்தாலும்இ முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் குடியரசு நாடுகளாக இருந்தாலும்இ முஸ்லிம்களுக்காக அரசு ஷரீஅத் சட்டத்தை குர்ஆன்இ ஹதீஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டவிதிகளை முஸ்லிம்கள் பின்பற்ற உரிமையளிப்பது அரசாங்கத்தின் கட்டாய கடமையாகும்.
மாண்புமிகு நீதியரசர்கள் இஸ்லாமிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் போது இஸ்லாமிய சட்டத்தின் ஆழத்தை நன்கு ஆராய்ந்துஇ அடிப்படையில் சிதைவு ஏற்படாதவாறு தீர்ப்பு வழங்குவது மிக முக்கியமானதாகும்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (வுhந யுடட ஐனெயை ஆரளடiஅ Pநசளழயெட டுயற டீழயசன - யுஐஆடீடுடீ) சமீபத்தில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. அந்த வாரியத்தின் தலைவர் மவ்லானா முஜாஹிதுல் இஸ்லாம் காஸிமி இஸ்லாமிய ரீஅத்தின் கொள்கை கோட்பாடுகள் கெடாமலும்இ பாதுகாக்கவும்இ தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அந்த அறிக்கையில் உறுதியளித்திருக்கிறார். முஸ்லிம் நிறுவனங்கள்இ உலமாக்கள்இ புகழ்மிகு அறிவாளிகள் ஆகியோரை ஒன்று கூட்டி விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்குஇ இத்தா காலம் முடிந்ததோடு மட்டுமில்லாமல் அவள் வாழும் வரையிலும் பராமரிப்புச் செலவு கொடுத்து வரவேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு பற்றி விவாவித்து ஒரு முடிவு எடுக்கும் என்று மும்பையிலுள்ள ராஜா கல்விக்கழகம் (வுhந சுயதய யுஉயனநஅல) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மாண்புமிகு அஜித்ஷாஇ ஜே.ஏ.பட்டீல்இ திருமதி.ரஜனா தேசாய் ஆகியோர் அடங்கிய நீதிபதிகளின் தீர்ப்பில் குடும்ப வழக்குகளை விசாரிக்கும் வழக்கு மன்றங்களுக்கு விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் பராமரிப்புச் செலவு பற்றி விசாரிக்க அதிகார எல்லை இல்லையயன்றும் முஸ்லிம் (பாதுகாப்பு மற்றும் விவாகரத்து) சட்டம்
(ஆரளடiஅ Pசழவநஉவழைn யனெ னுiஎழசஉந யுஉவ) இத்தா காலம் முடிவடைந்த பிறகும் வாழ்க்கைத் தேவைகளுக்காக செலவுத் தொகை கொடுக்க வேண்டும்இ என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளதுஇ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.கல்கத்தா உச்ச நீதிமன்றத்தில் கீலாபர்வீன் என்ற பெண்ணின் வழக்கில் உயர்நீதிபதி வா.தேவபாணிகரஹி வழங்கிய தீர்ப்பில் ரீஅத் சட்டத்திற்கு விரோதமாக திருக்குர்ஆனின் புனித வசனத்தின் ஆழமான கருத்திற்கு அப்பாற்பட்டு இத்தா காலத்திற்கு புதிய விளக்கம் தந்திருக்கிறார். விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் செய்து கொள்ளும் வரை இத்தாகாலம் உள்ளது என்றும்இ அதுவரையிலும் விவாகரத்து செய்த கணவன் பராமரிப்பு செலவுத் தொகை கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
ஷரீஅத் என்றால் என்ன? என்பதை அறியாதவர்கள்இ திருக்குர்ஆனின் புனித வசனங்களை அடிப்படையாக வைத்து நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்கு அளித்துள்ள விளக்க உரையை ஏற்று தரப்பட்டிருப்பதே இஸ்லாமிய சட்டம் என்பதை தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் தங்களை பெரிய அறிவு ஜீவிகளாக எண்ணிக் கொண்டு அதிகமாக விற்பனையாகும் ஆங்கிலஇ தமிழ் நாளேடுகளில் இத்தா வாழ்க்கைப் பராமரிப்பு செலவு பற்றிய கல்கத்தா உச்சநீதிமன்ற தீர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி என்றும் சட்டத்தின் முன்னேற்றமான விளக்கம் என்றும் தலையங்கத்திலும் ஆசிரியருக்கு கடிதங்கள் என்ற தலைப்புகளிலும் எழுதி வருகிறார்கள்.இஸ்லாமிய சட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் ஓர் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அஸ்கர் அலி இன்ஜினியர் என்ற ஒரு ஆங்கில முஸ்லிம் எழுத்தாளர் (
´யா முஸ்லிம்) ஹிந்து ஆங்கில நாளேட்டில் 07.08.2000 தேதியில் முஸ்லிம் பெண்களின் பராமரிப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் எழுதியிருக்கிற கட்டுரையில் கல்கத்தா மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்புகளில் குறிப்பிட்ட இத்தா பருவகாலம் தாண்டியும் (விதவைப் பெண்ணுக்கு) விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்குஇ கணவன் பராமரிப்பு செலவு கொடுத்து வர வேண்டும் என்பதை நியாயப்படுத்தி எழுதியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் "ஷாபானு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 1980-ஆம் ஆண்டில் முஸ்லிம் தலைவர்களும்இ இஸ்லாமிய சமுதாயத்தினரும் •திர்ப்பு தெரிவித்தது போல கீலா பர்வீன் வழக்கில் கல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் சிறந்த எழுத்தாளர்இ என்பதில் எவ்வித ஐய்யப்பாடும் இல்லை. ஆனால் ரீஅத் பற்றிய அவருடைய கட்டுரைகள் சுன்னத் ஜமாத்தை சேர்ந்த மார்க்க அறிஞர்களின் ஒப்புதல் பெறவில்லை. அவர் சார்ந்திருக்கிற
´யா பிரிவு தலைவர்களும் பெரியார்களும் கூட அவரை எதிர்த்து மும்பையிலும்இ கோயமுத்தூரிலும் போராட்டமே நடத்தியிருக்கிறார்கள். ஷரீஅத்திற்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்படும் போதே சட்டமன்றங்கள்இ நாடாளுமன்றங்களில் சட்டங்களோஇ விதிகளோஇ நிறைவேற்றப்படும் போதே மார்க்க அறிஞர்களும்இ சமுதாயத் தலைவர்களும்இ சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும்இ முஸ்லிம் எழுத்தாளர்களும்இ ஜமாஅத் தலைவர்களும்இ நிர்வாகிகளும் விரைவில் ஒன்று கூடி தீர்மானங்கள் நிறைவேற்றி அர•க்கும் இது தொடர்பான அதிகாரம் பெற்றவர்களுக்கும் அனுப்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மிக முக்கியமான கடமையாகும் •ன்பதை உணர வேண்டும்.
இஸ்லாமியப் பார்வையில் இந்திய சாட்சிய சட்டம்
உரிமை வழக்குகளாக இருந்தாலும் குற்ற வழக்குகளாக இருந்தாலும் சான்றுகளின் அடிப்படையில் தான் வழக்குகளின் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீதிமன்றத்தில் ஆய்வுக்கு வரும் ஆவணங்கள் உறைகள் ஆகியவைகளுக்கு சான்று எனப்படும்.
இந்தியாவில் 1872ம் ஆண்டு இந்திய சாட்சியச் ட்டம் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வந்தது. இச்சட்டம் சான்றின் வகைகள்இ சான்று தரப்படும் விதங்கள்இ சான்றுக்குரிய வரம்புகள் ஆகியவற்றைப்பற்றி விவரிக்கக் கூறுகிறது.
1. எந்த ஆவணத்தை முன்னிலைப்படுத்தி நீதிமன்றத்தில் சேர்ப்பிக்கிறோமோ அது தலைநிலைச்சான்று (Pசiஅயசல நுஎனைநnஉந) எனப்படும்.2. இது பொது ஆவணமாக (Pரடிடiஉ னுழஉரஅநவெ) இருந்தால் அதனுடைய நகலை நீதிமன்றத்தில் சேர்க்கும் போது அதற்கு சார்நிலைச் சான்று (ளுநஉழனெயசல நுஎனைநnஉந) எனப்படும். 3. சான்றாகப் பயன்படும் ஆவணங்கள் ஆவணச்சான்று என்றும்.
4. சாட்சிகளின் உரைகளைச் சான்றாகப் பயன்படுத்தும் போது வாய்மொழிச்சான்று (ழுசயட நுஎனைநnஉந) என்றும் சொல்லப்படும்.5. தீர்வுகள்இ நிகழ்ச்சிகளை நேர்நிலைச்சான்று
(னுசைநஉவ நுஎனைநnஉந) என்கிறார்கள். 6. ஒருவர் சொன்ன சாட்சியிலிருந்து அல்லது ஆவணத்திலிருந்து தீர்வுக்குரிய நிகழ்வு
யூகிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தால் அதை சூழ்நிலைச் சான்று (ஊசைஉரஅ ளவயவெயைட நுஎனைநnஉந) என்று சொல்லப்படும்.7. ஆவணம் அல்லது பத்திரத்தில் இருக்கும் வார்த்தைகளே சான்றாக இருக்கும் போது அது அகநிலைச் சான்று (ஐவெநசiளெiஉ நுஎனைநnஉந) என்றும். 8. அத்தகைய ஆவணத்தின் வாசகத்தை விவரிப்பதற்காகவோ அல்லது ஆவணத்தை எழுதியவர்களின் கருத்து அதிலுள்ள வாசகத்துக்கு மாறானது என்பதைக் காட்டவோ தரப்படும் சான்று புறநிலைச்சான்று என்று சொல்லப்படும்.
9. ஒரு மனிதன் தான் வீடு கட்டுவதற்காகவோ மகளைத் திருமணம் செய்விப்பதற்காகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு தேவைக்காகவோ இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்குகிறார். அதற்காக கடன் வாங்குபவர் கடன் தொகையை வாங்கியபின் தாங்கள் வேண்டும் போது தங்களிடமாவது அல்லது தங்கள் உத்தரவு பெற்றவர்களிடமாவது வாங்கிய பணத்தை செலுத்துவதற்கு சம்மதித்து இந்த கடன் பத்திரத்தை எழுதிக் கொடுத்திருக்கிறேன்இ என்று ஒரு ஆவணம் எழுதிக் கொடுப்பதற்கு கடன் உறுதி ஆவணம் அல்லது உறுதிக் கடன் பத்திரம் (Pசழஅளைளழசல ழேவந) என்று சொல்லப்படும். வழக்கு முறையில் புரோ நோட்டு என்று சொல்வார்கள். இந்த ஆவணத்துக்கு சாட்சிகளோ பதிவு செய்ய ¼வ்ணடிய அவசியமோ தேவையில்லை. 10. 1881ம் வருடத்திய செலாவணி பத்திரச் சட்டம் அல்லது செலாவணி முறிச்சட்டம்
(நேபழவயைடிடந ஐளெவசரஅநவெள யுஉவ - 1881) 4Šவது பிரிவில் கடன் உறுதி ஆவணம் என்றால் என்ன என்பது ப்றறி விவரிக்கப்பட்டிருக்கிறது.
திருக்குர்ஆனில் அல்பகறா என்ற இரண்டாவது அத்தியாத்தின் 282வது வசனத்தில் விசுவாசிகளே நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். உங்களில் எழுதுபவன் நீதமாக எழுதவும். கடன் வாங்கியவரே வாசகத்தை கூறவும். நீங்கள் சாட்சியாக்கக்கூடிய உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்குங்கள் அவ்வாறு இரு ஆண்கள் ஓர் ஆணுடன் இரு பெண்களை சாட்சியாக்க வேண்டும். இன்று எழுதப்படும் கடன் உறுதிப்பத்திரம் இந்த இறைவசனத்திற்கு ஒத்தது போல் இருக்கிறது. வட்டி வாங்குவதுஇ கொடுப்பது ஹராம்இ என்பதால் அது தொடர்பான வாசகத்தை விட்டு விட வேண்டும். (இன்ஷா அல்லாஹ்இ தொடரும்....)
No comments:
Post a Comment