Monday, February 14, 2011

ஹோஸ்னி முபாரக்கின் $ 70 பில்லியன் சொத்துகள் அரபு நாடுகளுக்கு மாற்றம்


மக்கள் புரட்சியால் பதவி இழந்த முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை முடக்க சுவிஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததையடுத்து அவர் தனது சொத்துகள் அனைத்தையும் அரபு நாட்டு வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சொத்துக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து முபாரக்கின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற சில அவசர உரையாடல்கள் மூலம் இது தெரியவந்ததாக புலனாய்வு உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஈரான் தொலைக்காட்சியான பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா, யுஏஈ உள்ளிட்ட நட்பு அரபு நாடுகளுக்கு முபாரக் சொத்துக்களை மாற்றியுள்ளதாக நம்பப்படுகிறது என அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முபாரக்கின் சொத்து மதிப்பு 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று அல்ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. எனினும் 2 பில்லியன் டாலர் முதல் 3 பில்லியன் டாலர் வரை தான் முபாரக்கின் சொத்து மதிப்பு இருக்கும் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Source : http://www.inneram.com/2011021413545/hosni-mubarak-properties-transferred-to-gulf-states

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails