Wednesday, June 20, 2012

நீங்கதான் பொறுப்பு .

நீங்கதான்  பொறுப்பு .
நீங்கள் விரும்பும் நல்லதை உங்கள் சகோதரனுக்கும் கொடுக்க வேண்டியது உங்கள் கடமை . அறிவு ஆற்றல் அனைத்தும்  இருந்தும் அதனை நமக்குள் அடக்கி வைத்தல் தவறு. சிந்தனை செயல்படுத்தப்பட்டு அதனை மற்றவர்க்கும் ஏற்றி வைப்பது உங்கள் கடமையல்லவா!

  குடிப்பழக்கம் பிறக்கும்போதே வருவதில்லை. சூழ்நிலை, சரியற்ற நட்பு, தூண்டுதல் மற்ற பல காரணங்களால் வருவது. அதனால்  ஒரு மனிதன் வியாதியை வரவழைத்துக்  கொள்கின்றான் மற்றும் சமுதாயத்தில் தாழ்தப்பட்டவனாக், மதிக்கப்படாதவனாக ஆக்கப்படுகின்றான் குடிப்பவர் அனைவரும் கெட்டவர் என்ற  முடிவு செய்து அவனை ஒதுக்காமல் நல்லோர் அவனுக்கு நல்வழியில்  உற்சாகம் கொடுத்து அவனையும் தன நண்பனாக,உறவினனாக  ஏற்றுக் கொண்டு இறை வழியில் அவன் மனதை திருப்பி தொழ அழைத்துச் செல்லுங்கள் அவனிடத்து மாற்றம் ஏற்படுவதனை காணமுடியும். நமக்கே நம்மீது நம்பிக்கை இல்லை .அவனோடு சேர்ந்தால் நாமும் கெட்டு விடுவோம் அத்துடம் சமுதாயம் நம்மையும் மதிக்காது என்ற  தாழ்வான எண்ணம்.போலி வாழ்வு. மற்றவருக்காக போடும் வேடம். இது ஒழிய வேண்டும். அடுத்த  வீடு எறிய  நம்வீடு பாதுகாப்பில் இல்லை. நல்லதை நாடுவோம்.அல்லதை நீக்க முயல்வோம். பிறப்பது நிச்சயமில்லை இறப்பது உறுதி. அதற்குள் நாம் நமது சேவையை மக்களுக்கு செய்து இறைவனது அருள் பெற்றாக வேண்டும் .நம்மோடு நம் சகோதரனையும் சுவனத்திற்கு அழைத்துச் செல்ல பாடுபட வேண்டும் . நம்பிக்கையே வாழ்கை



No comments:

LinkWithin

Related Posts with Thumbnails