Monday, June 4, 2012

படிக்கட்டுகள் .....ஏற்றம் 14

முடிவு எடுக்கும் விசயம் என்பது நம் வாழ்க்கையின் இலக்கை தீர்மானிப்பதில் மிகவும் முக்கியமானது. சிலர் முடிவெடுப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்து விட்டு பிறகு சில வருடம் ஆன பிறகு' அப்போதே செய்திருக்கனும்" என வருந்துபவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் முடிவெடுக்க சின்ன வயதிலிருந்து மனிதர்களை பழக்குவதில்லை.


சின்ன வயதை சார்ந்தவர்கள் தனியாக எதுவும் முடிவு எடுத்துவிட்டால் பெரியவர்களை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டப்படலாம் என்று பயந்தே முடிவெடிடுப்பதில்லை.
பிள்ளைகளை முடிவெடுக்க எப்படி பழக்க வேண்டும் என்று என் வாழ்க்கையில் நடந்த விசயம் ஒன்று உதாரணமாக சொல்லலாம். என் முதல்மகன் 11 வயதாக இருக்கும்போது பள்ளிக்கூடத்தில் டூர் போக இருப்பதாக சொல்லி அனுமதி கேட்டான். அது இங்கிருந்து ஏறக்குறைய 2000 கிலோ மீட்டர். விமானத்தில்தான் போக வேண்டும். நான் அவனிடம் சொன்னது " நீ ஏன் போக வேண்டும் என்று 5  பாயின்ட், ஏன் போகக்கூடாது என்று 5 பாயின்ட் எழுதி வா" என்று சொன்னவுடன் போவதால் அதிகம் நன்மை இருப்பதாக எழுதிய அவன் , போகாமல் இருந்தால் ஏற்படும் நன்மையை அதிகம் எழுத வில்லை. கடைசியில் அவனிடமே முடிவெடுக்க சொல்லி போய் வந்தான். 

பொதுவாக பசங்க ஊர் சுற்றத்தான் ஆசைப்படுவார்கள், எனவே உங்கள் மகனின் முடிவு ஒன்றும் அதிசயம் இல்லை என நினைக்களாம். அதே மகன் தனது 12 வது வயதில் ஒரு அருவிக்கு பக்கத்தில் கேம்ப் போக ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யும்போது அதே மாதிரிதான் நான் சொன்னேன். பிறகு அவன் அந்த கேம்ப் போகவில்லை. இன்னும் இறுதி தேர்வுக்கு 2 மாதம் இருந்தும் அப்படி போகாததற்கு  அவன் சொன்ன காரணம் ' ரிவிசன் செய்ய நிறைய பாடம் இருக்கிறது"...ஆக முடிவெடுக்க நாம் பழக்குவதுடன் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்களாகவே கற்றுக்கொள்ள நாம் வாய்ப்பு தருகிறோம்.

முடிவு எடுக்கப்படுவதற்க்கும் நேரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. சில சமயங்களில் எடுக்கப்படாத முடிவு நேரம் தாண்டி எடுத்தபிறகு எந்த பயனும் தராது. நான் சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன்..' முன்பு அங்கே மனை 25000 தான்...அப்பவே வாங்கிபோட்டிருக்கனும்- முன்பு எனக்கு நல்ல காலேஜில் சீட் கிடைத்தது, வீட்டில் உள்ள பெரியவங்கனாலே அங்கு போக முடியலெ- அந்த வியாபாரம் செய்ய நல்ல சான்ஸ் கிடைத்தது..இப்போ அவன் நல்லா செய்ரான்.. நான் வேடிக்கை பார்க்க வேண்டியாபோச்சு..இப்படி நிறைய பேர் புலம்ப காரணம் சரியான சமயத்தில் எடுக்காத முடிவுதான். சிலர் பெர்சனல் வாழ்க்கையில் சரியான முடிவெடுக்காமல் தொடர்ந்து "நொந்துபோன" வாழ்க்கை வாழ்வதும் பரிதாபத்துக்குறியது.  நீங்கள் எந்த விதமான "மனச்சிறை"யில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாமல் இருந்தால் யாரும் உங்களுக்கு உதவி செய்து வெளிக்கொண்டுவர முடியாது. உங்களின் மனச்சிறை எது என்று நீங்கள்தான் அடையாளம் காட்ட வேண்டும்.

Time and Tide will not wait for anybody.

உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தூரம் உங்களுக்கு எது தெரியும் என்பதற்க்கும்- எதைசெய்கிரோம் என்பதற்க்கும் உள்ள தூரம்தான்.

உங்களின் பலம் எதிலும் இருக்களாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். வாழ்க்கை நிச்சயம் வசப்படும். எனக்கு அப்படி ஒன்றும் தெரியாதே என்று சொல்கிறீர்களா?...நான் உங்களை கேட்கிரேன்...நீங்கள் நல்லவர்தானே?---அதை ஏன் உங்களின் பலமாக நினைக்க தோன்றவில்லை.  "அது சரி ...நல்லவன் எல்லாம் முன்னேரிட முடியுமா..அநியாயம் செய்கிறவன், கெட்டவன் கையிலதானே கோடிகள் புரள்கிறது'...எப்போது இப்படி நினைக்க ஆரம்பித்து விட்டீர்களோ..உங்களுக்கு ஒரு "ஆன்டிவைரஸ்-ஸ்கேன்: நிச்சயம் தேவை. நீங்கள் பார்த்த சின்ன வயதுபடங்களின் வில்லன் எல்லாம் செத்துமடிந்து விட்டாலும் உங்கள் மனதில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

முடிவெடுக்க பல பேர் தயங்க காரணம்“நாம் எடுக்கும் முடிவு சரியாக இல்லாவிட்டால்?" என்ற எல்லாருக்கும் தோன்றும் கேள்விக்குறிதான். வாழ்க்கை என்பது கியாரன்டிகார்டுடன் இணைத்து வரும் எலக்டிரிக்கல்பொருள் அல்ல. ஒரு சமயம் கெட்டுப்போய்விட்டால் கடைக்காரரிடம் போய் நிற்க. வாழ்க்கை என்பது அடுத்த நிமிடத்தின் முடிச்சு எப்படி அகற்றப்படும் என்ற வித்தை இறைவன் ஒருவனிடம் மட்டும்தன்உள்ளது. தோல்வி என்பது கற்று வெற்றியடைய கட்டப்படும் உறுதியான படி.

சிலர் முடிவெடுத்ததுடன் தனது முடிவுக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்க்கொள்ளாமல் பழைய மாதிரியே இருந்து புதிய பயனை எதிர்பார்ப்பார்கள். இது இயற்கையின் விதிகளுக்கு முரண். ஊருக்கு வந்தபோது சில விசயம் கவனித்தேன். சிலர் கடை திறக்கும்  நேரத்தை தனது இஷ்டத்துக்கு மாற்றிவைத்து கடைதிறக்கிறார்கள். சில வெற்றியடைந்த நிறுவனங்களை பார்த்தால் சில விசயம் தெரியும். அவர்களின் கடை / பிஸ்னஸ் திறக்கும் நேரம் மிகவும் சார்ப் பன்க்ச்சுவாலிட்டி இருக்கும். தமிழ்நாட்டை பொருத்தவரை சரவணபவன் உணவகம் இதற்கு உதாரணம் சொல்லலாம். ஜப்பானில் டொயோட்டோ தொழிற்சாலையில் வேலையாட்கள் சரியான நேரத்துக்குள் வந்து லைட் எக்ஸர்சைசில் கலந்து கொண்டு வேலையை ஆரம்பிக்கிறார்கள். இவ்வளவு வெற்றியடைத்தும் ஏன் இவர்கள் இன்னும் இந்த விசயத்தை கடைபிடிக்கவேண்டும். அதுசரி நம்ம சின்ன ஊருக்கு எல்லாம் அது சரிப்படாது என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். சின்ன முன்னேற்றம் வேண்டுமானால் கிடைக்களாம். இந்த சின்ன விசயத்தில் ஒரு முடிவெடுத்து செயல் பட முடியாதவர்கள் . பெரிய முடிவுகள் என்று வரும்போது உடல்/மனம் இரண்டும் வளையாது.

நீங்கள் மட்டும்தான் உங்களுக்கு பிரச்சினை..அதன் தீர்வு உங்களுக்குள்தான் இருக்கிறது. மாற்றங்கள் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாதது. ஆனால் ஒன்று மட்டும் மிக மிக நிதர்சனம். தனி மனித முன்னேற்றம் = தனி மனித முடிவு


எப்போது உங்களின் வாழ்க்கை / தொழில் சம்பந்தமான முடிவுகளில் "என்னை விட என் தகப்பன் / அண்ணன்/ மச்சான்/ மாமன் முடிவு எடுத்தால் சரி...எனக்கு ஒன்னும் தெரியாது" என்று சொல்கிறீர்களோ அப்போதே உங்களின் வாழ்க்கை உங்கள் கன்ட்ரோலை இழந்து விட்டது. மற்றும் உங்களைப்பற்றி இன்னும்  சரியாக உங்களுக்கே மதிக்க தெரியவில்லை. இப்படி இருந்தால் உங்களை சுற்றி உள்ளவர்களும் உங்களை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.அப்படியே மதித்தாலும் அது போலியானது.


வாழ்க்கையின் வெற்றிக்கு Manhood என்ற ஒரு விசயம் இருக்கிறது. இதைத்தான் "சரியான ஆம்பளையா இருந்தா...என்று" நம் ஊர் பக்கத்தில் பேசப்படும் விசயம். இது மீசை/ வெள்ளைக்கைலி /பெண்களிடம் வெட்டி பந்தா செய்யும் திறமை போன்ற விசயங்களில் இல்லை. . கொடுத்த வாக்குக்கும் / எடுத்த முடிவுக்கும் சத்தியம் தவறாமல் கட்டுப்பட்டு சாதித்து காட்டுவதுதான் அது.

முடிவெடுக்க தெரிந்தவர்கள் மட்டும்தான் தலைவர்கள் ஆக முடியும். நான் சொல்வது அரசியல்தலைவர்கள் அல்ல. உங்கள் குடும்பத்தில் கூட நீங்கள் முடிவெடுக்க தள்ளிபோடுபவராக தெரிந்தால் மரியாதையின் மீட்டர்முள் கீழே இறங்குவதை பார்க்கலாம். [ சிலர் வெளிநாட்டில் இருந்து வந்தும் தர்ஹாவில், Railway stationல், படுத்துகிடந்து விட்டு "காத்துக்காக' படுத்து கிடக்கிறேன் என சொல்வதின் behind the scene மரியாதை மீட்டர்முள் தான் காரணம்.]

நீங்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இருக்கிறீர்கள் என்பதை உங்களின் புதிய செயல்பாடு உலகுக்கு உணர்த்த வேண்டும். முடிவு எடுத்து விட்டேன் என்பது மைன்ட் சம்பந்தப்பட்ட விசயம் மட்டுமல்ல.

இதில் படிக்கும் மாணவர்கள் முக்கியம் பார்க்க வேண்டியது "இந்த வருடம் முக்கியமான பரீட்சை இருக்கிறது- எப்போதும்போல் இந்த வருடம் மெத்தனமாகஇருக்க முடியாது எனவே நான் நன்றாக படிக்க போகிறேன் என்று முடிவு எடுத்து விட்டு அடுத்த நாளே வழக்கம்போல் நண்பர்களுடன் வெட்டிப்பேச்சு, பாடல் / திரைப்படம் டவுன்லோட் போன்ற காசுக்கும் நேரத்துக்கும் ஆப்பு வைக்கும் வெட்டி வேலைகளில் ஈடுபட்டால் நல்ல மார்க் எடுத்து வெற்றிபெற முடியுமா?. தொழில் முன்னேற்றத்தை பொருத்தவரை நீங்கள் எடுத்த நல்ல முடிவுக்காக உங்களை எந்த அளவு தயார்படுத்தி/ ஈடுபடுத்தி வருகிறீர்கள்?.

அல்லது சொந்தமாக தொழில் தொடங்க நினைத்திருக்கிறீர்களா? அதற்காக உங்களின் செயல்பாடு என்ன?. பக்கத்தில் இருக்கும் சென்னைக்கும், திருச்சிக்கும் போவதற்கே மற்றவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டிருந்தால் எப்போது வெற்றியடைவது?. இது உங்கள் வாழ்க்கை நீங்கள் மட்டும்தான் கதாநாயகன். செகேன்ட் ஹீரோ இல்லாதது உங்கள் சரித்திரம்.

ZAKIR HUSSAIN
Source : http://adirainirubar.blogspot.in/2012/06/14.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails