Saturday, June 30, 2012

அதிக மார்க்க அறிவு - அதிக பெண்களுக்கான உரிமைகள்.

அஸ்ஸலாமு அலைக்கும், 
உலகின் பாரம்பரியமிக்க ஆய்வு நிறுவனமான Gallup, அரேபிய புரட்சிக்கு பின்னரான அந்நாடுகளின் பெண்களின் நிலை குறித்த ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது (எகிப்து, லிபியா, துனிசியா உள்ளிட்ட ஆறு அரேபிய நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது). அதிலிருந்து சில தகவல்கள்...

1. தங்கள் நாட்டு சட்டத்தில் ஷரியாவின் பங்கு இருக்கவேண்டும் என்று கூறும் அரேபிய பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை ஒத்தே இருக்கின்றது...

2. புரட்சி நடந்த நாடுகளின் அறுதி பெரும்பான்மையான மக்கள், தங்கள் நாட்டு சட்டத்திட்டங்கள் ஷரியாவை ஒத்தே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

3. அதிக மார்க்க அறிவு பெற்றுள்ள ஆண்கள், பெண்களுக்கான உரிமைகளை அதிகளவில் கொடுப்பவர்களாக உள்ளனர். 

4. இஸ்லாமிய கட்சிகளின் ஆதரவாளர்கள், பெண்களுக்கான உரிமைகளை அதிகளவில் ஆதரிப்பவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை மதசார்பற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் சமமே. 

5. மார்க்கப்பற்று மிகுந்த அரேபிய பெண்கள் அதிக மரியாதை கொடுக்கப்படுபவர்களாகவும், தங்கள் வாழ்வில் அதிக மகிழ்வுடனும் இருக்கின்றனர். 

24 பக்கங்கள் கொண்ட Gallup-இன் அறிக்கையை முழுமையாக படிக்க அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்... http://www.gallup.com/poll/155306/arab-uprisings-women-rights-religion-rebuilding.aspx

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails