Monday, November 26, 2012

அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் எங்க ஊரு!


அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் எங்க ஊரு!

எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஒவ்வொருவருக்கும் அவங்க அவங்க சொந்த ஊரைப்போல வராது (ஒரு சிலருக்கே தவிர) . அது ஒரு குக்கிர
ாமமே ஆனாலும் தங்கள் ஊரைப் பற்றிக் கேட்டால் சந்தோஷமாக, சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்வார்கள்

'இந்தியா' என்றாலே (எங்கள்) நினைவில் முன்வந்து நிற்கும் கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான நான் பிறந்து, வளர்ந்து, காரைக்கால் என்ற எங்கள் ஊரைப் பற்றி எழுதுவதில் ஆனந்தமும், பெருமிதமும் கொள்கிறேன் :) :) ஃபிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களான‌ பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகியவற்றில் பாண்டிச்சேரியும் காரைக்காலும் தமிழகத்தின் எல்லையோடும், மாஹே கேரள எல்லையிலும், ஏனம் ஆந்திர எல்லையிலும் அமைந்துள்ளன.

இவற்றில் 2 வது பெரிய பிராந்தியமான‌ காரைக்கால், அந்த‌ மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரமாகும். காவிரியின் கிளை ஆறான அரசலாறு இங்குதான் ஓடுகிறது.

காரைக்கால் பீச்சில் குழந்தைகள் விளையாட பலவித விளையாட்டுகளோடு கூடிய 'பார்க்'கும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் இதமாக வருடிக் கொடுக்கும் கடல் காற்றை குழந்தைகளின் விளையாட்டுகளோடு ரசித்தபடி சுவாசிக்க, உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் கடல் இல்லாத பக்கத்து ஊர் மக்களும் 'காரைக்கால் கடற்கரை'க்கு விரும்பி வந்த வண்ணம் இருப்பார்கள்

Sunday, November 25, 2012

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

எழுதியவர்/ S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


“உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.

நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் மானசீக உறவுக்குத் தடையாக இருக்கின்றனர். உதாரணமாக, தந்தை அடிக்க முற்பட்டால் உடனே 555 இற்கு போன் செய்தால் காவல் துறை வீட்டில் வந்து நிற்கும் என்று சட்டம் போட்டால் பெற்றோர் எப்படி பிள்ளைகளைத் திருத்த முடியும். பெற்றோருக்குப் பிள்ளைகள் விடயத்தில் இருக்கும் உரிமைகள் என்ன? என்ற கேள்வி எழும்.

மற்றும் சிலர் சட்டம் இருக்கின்றதோ இல்லையோ பாசத்தின் பெயரில் குழந்தைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாதிருந்து விட்டு தவறுகள் பெருத்த பின்னர் கவலைப்படுகின்றனர்.

இது இப்படியிருக்க, குழந்தைகளைத் தண்டிக்கும் சிலர் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். குழந்தைகளை நல்வழிப் படுத்தல் என்பதுதான் தண்டனையின் நோக்கம். தண்டிக்காமலேயே வழிகாட்டுவதன் மூலம் அந்த இலக்கை அடையமுடியுமாக இருந்தால் தண்டனை இல்லாமலேயே நல்லுபதேசத்தின் மூலமே அடைய முயற்சிக்க வேண்டும்.

சிலர் தமது கோபத்தைத் தீர்ப்பதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் கையில் கிடைத்ததை எடுத்து தண்டிக்கின்றனர். இல்லையில்லை தாக்குகின்றனர். இது குழந்தைகளை நல்வழிக்குட்படுத்துவதற்குப் பதிலாக மனரீதியில் பாதிப்படையச் செய்யலாம். வீட்டை விட்டு வெருண்டோட வைக்கலாம். போதை, தீய நட்பு, கெட்ட பழக்க வழக்கங்கள் போன்ற தவறுகளுக்கு உள்ளாக்கலாம். இத்தகைய தண்டனை முறையை இஸ்லாமும் ஏற்காது. இதயத்தில் ஈரமுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். எனவே தண்டித்தல் குறித்த சில வழிகாட்டல்களை வழங்குதல் நல்லதெனக் கருதுகின்றேன்.

1. கோபத்தில் இருக்கும் போது தண்டிக்காதீர்கள்:
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்பார்கள். அதனால்தான் கோபப்பட்டவர் வீட்டில் பொருட்களை, கண்ணாடியை யெல்லாம் உடைப்பதைப் பார்க்கின்றோம். கோபத்தில் நாம் பேசினால் நமது பேச்சு சரியாக இருக்காது. தண்டித்தால் அது நியாயமாக இருக்காது. சின்னக் குற்றத்திற்குப் பெரிய தண்டனையளித்து அநியாயம் செய்துவிடுவோம். எனவே, உங்கள் கோபம் தணியும் வரையும் இருந்து நீங்கள் நிதானத்திற்கு வந்த பின்னர் நிதானமாகத் தண்டியுங்கள்.

நமது பெற்றோர்கள் சிலரின் செயற்பாடு ஆச்சர்யமாக இருக்கின்றது. மூத்தவன் இளையவனைத் தள்ளிவிட்டான். இளையவனின் தலையில் இரத்தம் வடிகின்றது. பாதிக்கப்பட்ட இளையவனைக் கவனிப்பதற்கு முன்னர் மூத்தவனுக்கு நாலு மொத்து மொத்தாவிட்டால் இவர்களுக்கு ஆத்திரம் அடங்காது. இதனால் தவறு செய்த பிள்ளை அடிக்குப் பயந்து ஓடி வேறு பிரச்சினைகளைத் தேடிக் கொண்டு வருகின்றது. பிறகு இரு குழந்தைகளுக்குமாக மருத்துவம் செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு!

எனவே, தண்டிப்பதிலும் நிதானமும் நியாயமும் தேவை. எனவே, கோபத்தில் இருக்கும் போது தண்டிப்பதைத் தவிருங்கள். நிதானமான நிலையில் தண்டியுங்கள். கோபம் அடங்கிய பின்னர் எப்படி தண்டிப்பது என்று கேட்கின்றீர்களா? குழந்தை இதன் பிறகு இந்தத் தவறை செய்யக் கூடாது என்று உணரும் அளவுக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்து வதற்காகத் தண்டியுங்கள். கோபத்தைத் தீர்ப்பதற்காகத் தண்டிப்பதென்றால் அது முறையான தண்டனையல்ல.

மத்திய உளவுத் துறைக்கு புதிய இயக்குனர்!

மத்திய உளவுத் துறையின் புதிய இயக்குனராக 1977 ஆம் வருட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஆசிப் இப்ராஹீம் நியமிக்கப் பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய உளவுத் துறையின் இயக்குனராக பொறுப்பு வகித்து வரும்  நேசால் சந்து வரும் டிசம்பர் 31 அன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து மத்திய உளவுத் துறையின்  புதிய இயக்குனர் பொறுப்புக்கு  ஆசிப் இப்ராஹீமை பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழு தேர்வு செய்துள்ளது.

மத்திய உளவுத் துறையில் சிறப்பு இயக்குனராகப் பொறுப்பு வகிக்கும் ஆசிப் இப்ராஹீம், கடந்த 20 வருடங்களாக உளவுத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Source : http://www.inneram.com/

Saturday, November 24, 2012

ஹிஜ்ரா காலண்டர் 1434H

ஹிஜ்ரா காலண்டர் 1434H

எழுதியவர்/பதிந்தவர்/உரை P. முகமது சிராஜுதீன்

Hijra Calendarஹிஜ்ரி 1434-ஆம் வருடத்தின் நாட்காட்டியை பார்க்க:

www.islamkalvi.com/hijracalendar/1434/index.html
Image format:

To download all images click here
இதன் இமேஜ் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Click below for PDF version
View PDF version | Download PDF version

Source : http://www.islamkalvi.com

Friday, November 23, 2012

மிஸ்டர் திரு ஜனாப் சேக்


தமிழ்நாட்டில் சில முஸ்லிம்கள் இன்னொரு முஸ்லிம் நபரை மரியாதையாக அழைப்பதற்கு ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உ-ம் ஜனாப் அப்துல் காதர் அவர்களே. இந்த ஜனாப் வந்த வரலாறு என்ன என்று காண்பதற்கு முன் அது தொடர்பான உலக வழக்கங்கள் சிலவற்றை முதலில் காண்போம்.

ஆங்கிலத்தில் ஆடவரை மிஸ்டர் என்று அழைப்பார்கள். இது பெரும்பாலும் குடும்பப் பெயர் சொல்லி அழைக்கவே பயன்படும். உ-ம்: மிஸ்டர் கேட்ஸ். அல்லது முழுப் பெயரையும் சேர்த்து அழைக்கும்போதும் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. உ-ம்: மிஸ்டர் பில் கேட்ஸ். முதல் பெயரை மட்டும் அழைப்பதற்கு வட அமெரிக்கர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஆரம்பக் காலங்களிலும், இன்று சில நாடுகளிலும், வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும்கூட முதல் பெயரை அழைப்பதற்கு மிஸ்டரைப் பயன்படுத்துகிறார்கள்.

துவக்கத்தில் மிஸ்டர் என்பது மனைவி கணவனை அழைப்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. மிஸ்டர் என்றால் கணவன், காவலன், புருசன், துணைவன், நெருக்கமானவன், உயிரானவன், மணமகன், வீட்டுக்காரன் என்றெல்லாம் பொருள் உண்டு.

Thursday, November 15, 2012

Wish you a very happy, blessed new Hijri Islamic New year

Wish you a very happy, blessed new Hijri Islamic New year   May Allah bless each and everyone of you during this blessed New Year!

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

 

ஒவ்வொரு ஹிஜ்ரி ஆண்டும் ஒரு புத்தாண்டு .


இஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது. பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அல்லாஹ்(ஜல்) தனது இறுதித்தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை அவர்களது 40வது வயதில் தேர்ந்தெடுத்தான். அவர்களது 40வது வயதிலிருந்து 63வது வயதுவரை அல்லாஹ் தன்புறத்திலிருந்து வஹீ இறக்கி சிறிது சிறிதாக அல்குர்ஆன் வசனங்களை அருளி அதை நிறைவு செய்தான்.

    அதுவே உலகம் அழியும்வரை உலக மக்கள் அனைவருக்கும் இறுதிவேதம் என்று பிரகடனப்படுத்தினான். எவற்றை இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இறக்கி கட்டளையிட்டானோ அதாவது நானே உங்களைப் படைத்த இறைவன் எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள் என்னை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். என்னிடமே உங்களுடைய தேவைகள் அனைத்தையும் கேளுங்கள் என்ற அதே போதனையைத்தான் வஹீயாக அறிவித்தான். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்க்கும் புரோகிதரர்கள் வழமைப்போல் என்ன செய்தார்கள் தெரியுமா?

    இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் செய்த போதனைக்கு நேர்முரணாக அவர்களையும் இன்னும் பல நல்லடியாளர்களையும் சிலைகளாக வடித்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டிய கஃபத்துல்லாஹ்வில் சிலை வணக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். சிலை வணக்கம்தான் அசலான வணக்க வழிபாடு என்றிருந்த அன்றைய அரபு மக்களுக்கு முஹம்மது நபி(ஸல்) போதித்த ‘ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் அதுவே வெற்றியைத்தரும் என்ற போதனை அவர்களுக்கு அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியது. தங்களின் மூதாதையர்களின் வணக்க வழிபாட்டை கேவலப்படுத்துகிறார், இழிவு படுத்துகிறார் என்று ஆத்திரத்திற்குமேல் ஆத்திரம் கொண்டனர்.

Wednesday, November 14, 2012

படிக்கட்டுகள்... ஏற்றம் - 22

தலைமைத்துவம் [Leadership]  என்பது ஏதோ கட்சிக்கும், நிறுவனங்களுக்கும் , ஏதோ ஒரு குழுவுக்கும் என்றோடு இல்லாமல் தலைமைத்துவம் என்பது நம் வாழ்வில் நிழல்போல் வரக்கூடிய ஒர் தன்மை.

ஒரு மனிதனின் தலைமைத்துவத்தின் தொடக்கம் அவனது மனைவியின் அங்கீகாரத்தில் ஆரம்பிக்கிறது. கல்யாணமான புதிதில் தான் ஒரு ஹீரோ என சொல்கிறமாதிரி நடப்பதை [அல்லது நடிப்பதை]நம்ப ஆரம்பிக்கும் மனைவியிடம் அங்கீகாரத்திற்கு மனிதன் தன்னை சில கஷ்டங்களுக்கும் உட்படுத்தி தன் சாதனையை நிலை நாட்ட ஆரம்பிக்கிறான். சிலர் முயற்சிகள் அற்றுப்போய் 'காமெடி பீஸ்" மாதிரி  நடக்க ஆரம்பித்தவுடன்  'என்ன நீங்க சொன்ன மாதிரி நடந்துக்க தெரியலையே' என்று என்று சொல்லும்போதே தலைமைத்துவத்தின் ஆணிவேரில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட் ஊற்றப்படுகிறது என்று அர்த்தம்.

சில சமயங்களில் குடும்பத்தில் நீங்கள் பெரிதாக நம்பியிருக்கும் சிலர் பேசுவதை எதிர் கொள்ளும்போது அந்த வார சீரியல் 'தொடரும்" போடும் போது உறைந்து நிற்கும் கேரக்டர் மாதிரி பல சமயங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதெற்கெல்லாம் கலங்கி நிற்பது ஒரு நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி அல்ல.

இது தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் 'ஙே" என்று விழிக்க ஆரம்பித்தால்  கால ஒட்டத்தில் "ஒப்புக்கு" அழைக்கப்படும் பெரியவர்கள் லிஸ்ட்டில் மட்டும்தான் நம் பெயர் இருக்கும். குடும்பத்தில் எடுக்கப்படும் பல முடிவுகளை நீங்கள் கேள்விப்படும் நேரத்தில் அந்த முடிவுகள். முடிவுக்கே வந்திருக்கும்.

இது உங்களை பயங்காட்டும் ட்ரைலர் அல்ல. "தூங்காத நிலை" என்று ஒரு நிலை வாழ்க்கையில் இருக்கிறது. மனிதன் படுத்து தூங்கும் செயலுக்கும் இதற்கும் புலிமார்க் சீயக்காய்தூளுக்கும் புலிக்கும் உள்ள சம்பந்தம்தான் அது. இதை சிலர் மதத்தோடு சேர்த்து கோடி கோடியாக பணம் பன்றாங்க. இதைப்பற்றி வேறு சமயத்தில் விவாதிக்கலாம்.

Qualities of Good Leaders.

வாழ்க்கையில் எப்போதும் உற்சாகம் குறையாமல் இருப்பார்கள். சரி இவர்களுக்கு சோகமே வராதா என நீங்கள் நினைக்களாம் , வரும்..ஆனால் ஒரு சராசரி மனிதனுக்கு எப்போது பார்த்தாலும் எதிலும் சோகமாய் வந்து கொட்டும் சோகம் அவர்களிடம் இருக்காது. சோகமான நிகழ்வுகளிலும் 'இதிலும் நான் ஏதோ கற்றுக்கொள்ள தான் இறைவன் இந்த சோதனையை எனக்கு தந்து இருக்கிறான்' என்று ஏற்றுக்கொள்வார்கள்.



      Leadership by ACTION, not by Position: 

Tuesday, November 13, 2012

ஹதீது தொகுப்புகள் ஆறு





நபித் தோழர்களும், அவர்களுக்குப்பின் வந்தர்வகளும் ஹதீதுகளைத் தொகுத்தளிக்க ஆரம்பித்தனர்.

அந்த ஹதீதுகள் அவர்களால் முடிந்தவரை மனப்பாடம் செய்யப்பட்டு சில செவி வழிச் செய்திகளாகவும், சில எழுதி வைத்தப் பிரதிகளாகவும் உருவாகின.

முகம்மது நபி இறந்த 200 ஆண்டுகள் தொடங்கி 300 ஆண்டுகள்வரை இஸ்லாத்தில் இணைந்த அரபி அல்லாதவர்கள் ஹதீதுகளின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றை நூல்களாகத் தொகுக்க ஆரம்பித்தனர்.

இக்காலக்கட்டத்தில் ஏராளமான ஹதீது தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள் மட்டுமே ”உண்மையான ஆறு ஹதீது நூல்களின் தொகுப்பு” எனக் கருதப்பட்டு "ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றன.

நூல் 1:   சஹீஹுல் புகாரி
ஹிஜ்ரி 194 - 256 ல் வாழ்ந்த ரஷ்யாவைச் சேர்ந்த புகாரி என்பவரால் தொகுக்கப்பட்டது. நான்கு லட்சம் ஹதீதுகளை இவர் தொகுத்தார். அவற்றுள் சுமார் நாலாயிரம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நூல் 2: ஷஹீஹ் முஸ்லிம்
ஹிஜ்ரி 206 - 261 ல் வாழ்ந்த ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 3: ஸூனன் நஸயீ
ஹிஜ்ரி 214 - 303 ல் வாழ்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நஸயீ என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 4: ஸூனன் அபூதாவூத்
ஹிஜ்ரி 202 - 275 ல் வாழ்ந்த இராக்கைச் சேர்ந்த அபூதாவூத் என்ப்வரால் தொகுக்கப்பட்டது

நூல் 5: ஸூனன் திர்மிதீ
ஹிஜ்ரி 209 - 279 ல் வாழ்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திர்மிதீ என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 6: ஸூனன் இப்னுமாஜா
ஹிஜ்ரி 202 - 273 ல் வாழ்ந்த ஈரானைச் சேர்ந்த இப்னுமாஜ்ஜா என்பவரால் தொகுக்கப்பட்டது.

Friday, November 9, 2012

வாங்கிய வரியை ,வாங்கும் வரியை திருப்பிக் கொடுத்தவர் உமர்(ரலி)

முந்தைய முஸ்லிம்கள் ஆட்சிகளில்  மற்ற மார்கத்தை சேர்ந்தவருக்கு எந்த தீங்கும் நேர்ந்துவிடாமல் சிறப்பாக பாதுகொடுப்பு கொடுப்பதற்கு வாங்கும் வரியை ஜசியா வரி என்று அழைப்பார்கள் .
பைத்துல்முகத்திஸ்  இஸ்லாமிய ஆட்சியில் இருந்தபோதும்    பைத்துல்முகத்திஸ் இருப்பிடத்தை சுற்றி முஸ்லிம் அல்லாத மக்கள் குடி இருந்தார்கள். கலீபா உமர்(ரலி) அவர்கள்  ஒரு கட்டத்தில் . அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்த வீரர்களை அவசியம் காரணமாக மதீனா நகருக்கு திரும்ப அழைத்தார்க்கள். வீரர்கள் பாதுக்காப்பு நிறுத்தப்பட்டதால் அங்கு வசித்து வந்த மற்ற மார்க்கத்தை சேர்ந்த  மக்களிடம்  வீரர்களை அழைத்துக் கொள்வதால் அவர்களையே தங்கள் பாதுகாப்புக்கு வேண்டியதை செய்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு  அதற்காக வாங்கப்பட்ட வரியை திரும்ப தந்து விடச் செய்தார்கள் .

Saturday, November 3, 2012

இஸ்லாத்துக்கு வேண்டாம் அற்புதங்கள்

இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்!

அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.

உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு – அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!

Friday, November 2, 2012

உலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) உர்.

நீங்கள் ஒரு மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களா என்பது உங்கள் தனிப்பட்ட கொள்கையைப் பொருத்தது .ஆனால் மார்க்கம் வாழ்கையின் முக்கிய முடிவை தீர்மானிக்கக் கூடியது என்பது உண்மை . ஒரு முக்கியம் வாய்ந்த நகரம் இஸ்லாமியர்களுக்கும்,கிறிஸ்தவர்களுக்கும் மற்றும் இஸ்ராலியர்களுக்கும் (யகூதியர்களுக்கும்) முக்கியம் வாய்ந்தது. அந்த நகரம் எது? அதனை அனைவரும் அறிந்துக் கொள்வது சிறப்பு.



நசிரியாவிற்கு அருகில் உள்ளது உர்.   பாக்தாத்திற்கு தெற்கில்  365 km   தூரத்தில் உள்ள உர் மிகவும் புகழ்பெற்ற சரித்திர முக்கியத்துவமாக உள்ளது உலகம் உள்ளவரை அதன் புகழ் மங்காது மற்றும் மறையாது. அதற்கு முக்கிய காரணம் இப்ராஹீம்( Abraham )நபி பிறந்து வளர்ந்த ஊராய் இருப்பதால்.  இப்ராஹீம்( Abraham )நபி . பிறந்தது 1996 B.C.
சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு ஈராக் நாட்டில் உள்ள உர் என்ற ஊரில் இப்ராஹீம் நபி பிறந்தார்.
வர்த்தகத்துக்கும் தொழிலுக்கும் மையமாக அந்நகரம் திகழ்ந்தது.
/>--------------------------------------------------------------------------------------------------------

LinkWithin

Related Posts with Thumbnails