Friday, June 21, 2013

நீடூரில் புதிய உதயம் ‘‘அல்கயிபு ’’ மாற்றுத்திறனாளிகள் பயிற்சிப்பள்ளி..!


 நீடூர் நெய்வாசல் பொதுமக்களுக்கு ஒரு நற்செய்தி!   மாற்றுத்திறனாளிகள் (மன வளர்ச்சியில் குறைபாடு உள்ள குழந்தைகள்) இருக்கிறார்கள் .அவர்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு சேவை மையம் நீடூரில்.

 இதில் பல வகை உள்ளது நடக்க முடியாத குழந்தைகள், பேச முடியாத குழந்தைகள், பெற்றோர்களை பார்த்து உணர்ந்துகொள்ள முடியாத குழந்தைகள்  என பலவிதமான இருக்கிறார்கள். இன்னும் தங்களின் சுய தேவைகளான உணவு அருந்துவது, மலம், ஜலம் கழிப்பது போன்ற தங்களின் சுய தேவைகளை கூட செய்துகொள்ள முடியாத நிலையில் பல குழந்தைகள் இருக்கிறார்கள்.



நமது சமுதாய மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும் வெகு தூரம் சென்று அதற்கான வைத்தியம் செய்யவேண்டிய நிலை இருந்ததாலும் இதற்கு சிறப்பான பயிற்சி முறைகள் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாததினால் இதுபோன்ற குழந்தைகள் சரியாக கவனிக்கப்படாமல் அந்த குழந்தைகள் வாழ்கை பாதிக்கப்படுவதோடு அவர்களின் பெற்றோர்களுக்கும் அந்த குழந்தைகள் பாரமாக அமைந்துவிடுவதை பார்க்கிறோம்.

நீண்ட நாளாக நமது ஊரில் இருந்த இந்த குறையை போக்க நமது ஊரில் கல்வி தொடர்பான பல சேவைகளை செய்துவரும் T.S.R குடும்பத்தை சேர்ந்த ஒரு சகோதரியின் பெரும் முயற்சியால் ஒரு சிறப்பு பள்ளிக்கூடம் மஜீது காலனியில் துவங்கப்பட்டுள்ளது. அங்கு இதுபோன்ற குழந்தைகளின் குறைகளை அறிந்து அவர்களுக்கு தகுந்த ஆசிரியர்களின் துணை கொண்டு குறைவான கட்டனத்தில் முறையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.

குறிப்பு:

அன்புள்ள பெற்றோர்களே! உங்கள் அன்பு செல்வங்களின் வாழ்க்கையில் ஒளி வீச, அவர்கள் தங்களின் தேவைகளை பிறரின் உதவியின்றி தாங்களே செய்துகொள்ள, அவர்கள் மற்றவர்களுக்கு சுமையாக ஆகிவிடாமல் இருக்க இன்றே அதற்கான வழிவகை செய்யுங்கள். உங்கள் குழந்தையின் வாழ்கையோடு ஒப்பிடும்போது இதற்கான கட்டணங்கள் மிக குறைவு என்பதைவிட இது ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம்.

நாம் நமது வீட்டில் இதுபோன்ற குழந்தைகளை வைத்திருந்தால் தொடர்ந்து நம்மால் அவர்களுக்கு பயிற்சி செய்ய முடியாது. ஆனால் இங்கு  சிறந்த ஆசிரியர்களை கொண்டு எட்டு மணிநேரம் அனைத்து பயிற்சிளும் அளிக்கப்படுவதால்  உங்கள் குழந்தைகள் நல்ல முன்னேற்றம் அடையவும் அதே நேரம் நீங்க்ள் எப்போதும் உங்களின் குழந்தைகளை நினைத்து கவலை அடையாமல் மற்ற விஷயங்களில் உங்களின் கவனத்தை செலுத்தி மன அமைதியோடு இருக்கவும் இது ஒரு நல்ல வாய்பு.
சிறப்பு வகுப்புகள்!

தனி கவன படிப்பு, ஆக்குபேஷனல் தெரப்பி, பிசியோ தெரப்பி, ஸ்பீச் தெரப்பி
மாற்றுத்திறனாளிகள்

மனவளர்ச்சி குறைபாடு (MENTAL RETARDATION), ஆட்டிசம் (AUTISM), மூளை முடக்கு வாதம் (CEREBRAL PALSY), கற்றல் குறைபாடு (LEARNING DISABILITY)
மேலதிக விபரம் அறிய:

Sofiya Banu B.B.A. B.Ed.

Special Educator

302/2 மஜீது காலனி – நீடூர்

04364 250379
Source : http://niduri.com/

நீடூர் அல்கயிபு மாற்றுத் திறனாளிகன் பயிற்சிப் பள்ளிக்கு இன்று நானும் எனது மகன் Mohamedali Nowshathali நவ்சாது அலியும் சென்றிருந்த போது அங்கு பாச மனம் கொண்டு வந்தவர்கள் மற்றும் அதில் முழு ஈடுபாடுடன் தங்கள் சேவையை செய்பவர்கள் Ashraf Ali Nidur , T.S.R.நஜீம் ,T.S.R அப்துல் ஜமீல் வந்திருந்தது மகிழ்வைத் தந்தது மற்றும் எனது நெருங்கிய நண்பர் மர்ஹூம்அன்சாரி (சோன்ச்பார் வீடு) அவர்கள் மருமனும்(ayub ansari) இருந்தார் .Gajini Muhd அவர்தான் இந்த படங்களை எடுத்தவர்




---------------------------------------------------
அல்கயிபு மாற்றுத் திறனாளிகன் பயிற்சிப் பள்ளி
ALGHAIB
Secial
Educational school
Nidur.
நீடூர்.
B.சோபியா பானு B.B.A.,B.E.d

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails