மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள் பற்றி கனடாவின் " டோ" நகரில் உள்ள " ஸ்கார்பேரோ பல்கலைக்கழக " விஞ்ஞானிகள் சமிபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு,அவர்களை தவறு செய்தவர்கள்,தவறு செய்யாதவர்கள் என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வை மேற்கொண்டனர். இரு தரப்பினது மூளையின் செயல்பாடுகளும் ஆராயப்பட்டன.
தவறு செய்யாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருந்தது.இதுவே தங்களை நல்லபடியாக வழி நடத்தும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் அதிகம் இருந்தது. அவர்களது வெற்றிக்கு இந்த நம்பிக்கையே காரணமாக இருக்கிறது.
அதிக தவறுகள் செய்கிறவர்களிடம் தன்னம்பிக்கையின்மை,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தது ஆய்வில் தெரியவந்தது.இதுவே இவர்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருபதற்கு முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே தன்னம்பிக்கையுடன்,கடவுள் நம்பிக்கையும் இருந்தால்
மன அழுத்தம் கணிசமாக குறையும் என விஞ்ஞானிகள் இந்த ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.
நட்புடன்
Source : http://abulbazar.blogspot.in/
No comments:
Post a Comment