Thursday, October 29, 2015

இஸ்லாம் விரும்பும் முஸ்லிம்

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு,
அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேடவேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Tuesday, October 27, 2015

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

அவனுக்கு என்னச் செய்வது என்றுத் தெரியவில்லை..

பலதடவை சொல்லியாகி விட்டது.பிடிவாதம் குறையவில்லை..

"உங்க தம்பி கல்யாணத்துக்கு கலந்துக்கணும்னா 4 பவுன் நகை வாங்கி தரணும்" னு அடம் புடிச்சா எப்படி..

மாச சம்பளம் வாங்கித் தான் காலம் ஓடுது..
என்னச் செய்ய
அவனுக்கு தெரியும் மனைவியின் பிடிவாதம்..என்ன செய்வது..

புரிந்துக் கொள்ளவே முடியவில்லை..அவளை

களப்பணியில் ஆலிமாக்கள்


களப்பணியில் ஆலிமாக்கள்


ஆலிமா என்பவர் யார்? குர் ஆன் வசனங்கள், ஹதீதுகள், இஸ்லாமிய சட்டங்கள், வழிமுறைகள், நபிமார்களின் வரலாறுகள், பற்றி முறையாகப் படித்து அறிந்தவர். இஸ்லாமியச் சமுதாயத்திற்கு இஸ்லாம் குறித்த வழிகாட்டியாக இருப்பவர். சுருக்கமாகச் சொன்னால், நபி(ஸல்) அவர்கள் எப்படி இறைவனிடமிருந்து தாம் பெற்ற செய்தியை, தன் உம்மத்துகளுக்கு எத்தி வைத்தார்களோ, அதே பணியை இன்றைய காலத்தில் அதன் வரைமுறைக்குட்பட்டு, தொடர்பவர்கள்தான் ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள்.

ஆலிமாக்களுக்குரிய பொறுப்புகள்:

ஒரு மதரஸாவில் சிற்சில மாணவிகளுக்கு குர் ஆன் ஓதக் கற்பித்தல் என்பது மட்டுமே என்பதாகத்தான் மக்களின் புரிதல் இருக்கிறது. இத்தகைய எண்ணத்தைத் தோற்றுவித்ததற்கு ஆலிமாக்களின் செயல்பாடுகளும் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

ஆலிமாக்களும் ஆசிரியர்களே. பணம் சம்பாதிக்க மட்டுமே உதவுகிற ஏட்டுக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்களே ‘குரு’வாக மதிக்கப்படும் இந்நாளில், ‘வாழ்வியல் நெறி’யைப் போதித்து வாழ்க்கையைச் செம்மைப்படுத்தக்கூடிய திறனுடைய ஆலிமாக்கள் அதனினும் மேலானவர்கள். சுருங்கச் சொன்னால், ‘தன் பலமறியா யானை’ போன்ற சூழலில் இருப்பவர்கள் அவர்கள்.

ஆலிமா என்ற சொல், ‘இல்ம்’ – அறிவு என்ற சொல்லை வேர்ச்சொல்லாக உடையது. அறிவை உடையவர்கள் ஆலிமாக்கள். அந்த அறிவைப் பரப்ப வேண்டிய கடமைப்பட்டவர்கள். ”ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன் தரும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பம் முழுதும் கற்றமைக்குச் சமம்” என்பது இந்த வாழ்வியல் நெறி போதிக்கும் கல்விக்குத்தான் சிறப்பாகப் பொருந்தும்.

சமூகத்தில் பெண்கள்:
 

நபி(ஸல்) அவர்களின் காலத்தில், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் அறிவு தேடலில் ஈடுபட்டார்கள். சமூகத் தளங்களில் பணியாற்றியுள்ளார்கள். பொருளீட்டலில் ஈடுபட்டுள்ளார்கள். நபியவர்களின் மனைவியரான கதீஜா(ரலி) மற்றும் ஜைனப்(ரலி) அவர்களும் வியாபாரம் செய்து பொருளீட்டியுள்ளனர். ஆயிஷா(ரலி) அவர்கள் ஹதீதுகள் சேகரித்துக் கொடுத்து, அறிவுப் பணி செய்துள்ளார்கள். அக்காலத்து நபித்தோழியர்கள் எனப்படும் ஸஹாபியப் பெண்கள் பலரும் வீட்டோடு தம் கடமைகளைச் சுருக்கிக் கொள்ளாமல், போர்க்களம் வரை தன் கடமைகளைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

Monday, October 26, 2015

கீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை !

கீழக்கரை கடற்பகுதி முத்துக் குளித்தலில் உலகளாவிய புகழ் பெற்று இருந்தது. கீழக்கரையில் ஆதி காலம் முதற் கொண்டு சிறப்பாக நடந்து வந்த முத்து, சங்கு குளித்தல் பற்றி கி.பி. 80 ஆம் வருடத்தில் வாழ்ந்த பெரிப் புளூஸ்,  கி.பி.130 ஆம் வருடத்தில் வாழ்ந்த தாலமி போன்ற வரலாற்று அறிஞர்களும்,  கி.பி.6 ஆம் நூற்றாண்டில்; வாழ்ந்த எகிப்து நாட்டு பயணி காஸ்மாஸ் இனிகோ பிளஸ்டாஸ் உள்ளிட்டோரும் தங்கள் ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல் முதலாகக் காலனிய ஆட்சியை நிறுவியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். 16ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி, கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதியில் காலூன்றி அப்பகுதியில் ஆட்சி செலுத்தியவர்கள். கி.பி.1658இல் டச்சுக்காரர்கள் நிகழ்த்திய படை யெடுப்பிற்குப் பின்னரே இவர்களின் ஆதிக்கம் மறைந்தது.

Sunday, October 25, 2015

பார்க்க தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும் !

நிர்பந்தங்கள் யாருக்கில்லை? பிறந்து விட்ட செயலே நாம் விரும்பி என்றில்லாத போது அதுவே வாழும் நிர்பந்தமாகிப் போகையில், வாழ்வில் நடப்பது எல்லாமும் நிர்பந்தம் என்று பொதுவில் சொல்லி வைப்பது கூட ஏற்கப்படும் ஒரு கருத்துதான்.

பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலையில் தானாய் ஏறி அமர்ந்துவிடும் பொறுப்புக்களுக்காக கடமைகளை நிறைவேற்றுவது நிர்பந்தம் என்றால், துன்பங்கள் துயரங்களைக் கண்டு வாழ்வை நாமாக முடித்துக் கொள்ள முடியாத வாழ்நிலையும் நிர்பந்தமே. இதில் இறைவனுக்குச் செலுத்தும் நன்றியும் வணக்கமும் கட்டாய நிர்பந்தம் என்கிற நிலையில், இன்னபிற கடமைகளை செய்து முடிக்க நேர்மை வழியில் காசு சம்பாதிப்பதும் நிர்பந்தம் என்றாகிப் போகிறது

Tuesday, October 20, 2015

பொறுப்புணர்வும், பொதுநலமும்

 ஒரு சமூகம், சீரானபாதையில்  பயணிக்க செயல்ரீதியாக, ஒரு தலைமைகளை கட்டமைத்தல், அந்த சமூகத்திற்கு அவசியமாகும்.தலைமைத்துவ,மேளான்மைத்துறை சார்ந்த பண்புகள் கொண்டவரை, இனங்கண்டு அவரை சமூகம் தலைமைக்கு தேர்ந்தெடுப்பதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு பிறகு இஸ்லாத்தையும், இஸ்லாமிய கலாச்சாரம், நாகரீகம், சமூககட்டமைப்பு,   என்பவற்றை பேணிக்காக்க ஒரு வழுவான தலைமையின் இருப்பு குறித்த விழிப்பனர்வு,  இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான ஒன்றாக உள்ளது .

Monday, October 19, 2015

இஸ்லாம் அழைக்கிறது கடவுள் ஒருவனே!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.

சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர்.

இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் இல்லை எனக் கூறி கடவுளின் பெயரால் அரங்கேற்றப்படும் அத்தனை மூடநம்பிக்கைகளையும் அடியோடு மறுக்கின்றது.

Sunday, October 18, 2015

நீ செய்து விட்டு என்னிடம் கூறு’


நீ செய்து விட்டு என்னிடம் கூறு’ என்று தத்துவம் பேசுபவர்கள் அறிவாளிகளா?.... இது பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.... தயவு செய்து முழுவதும் படியுங்கள்... நல்லதொரு படிப்பினையாகவே இருக்கும் இன்ஷாஅல்லாஹ்....

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள். செய்யாததை சொல்வது இறைவனிடம் வெறுப்புக்குரியதாகும்.” (அல் குர்ஆன் 61:2,3)

இரண்டு விதமான சொற்சொடர்களை இந்த வசனம் தடுக்கின்றது.

1. தாம் செய்யாததை செய்ததாகக் கூறி பெருமையடித்துக் கொள்வது
2. தாம் செய்யாமல் பிறரை செய்யும் படி தூண்டுவது.

இஸ்லாத்தைப் பொருத்தவரை எடுத்துச் சொல்வதை விட வாழ்ந்துக் காட்டுவதே மிக சிறந்த செயலாகவும் முன் மாதிரியாகவும் கருதப்படும்.

தோழர்கள் - 1 - ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!

அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், "தோழர்கள்" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை இன்ஷா அல்லாஹ் அறிமுகப் படுத்தவிருக்கிறார்.

பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.

வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!

1. ஸயீத் இப்னு ஆமிர்سعيد ابن عامر (ரலி)

உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலகட்டம். சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. அனைவரும் உமர் (ரலி) அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள். தனது கருவூலத்திலிருந்து உதவி வழங்க, ஹிம்ஸுப் பகுதியில் ஏழையாய் உள்ளவர்களின் பட்டியல் ஒன்றை அளிக்கும்படி அவர்களிடம் கேட்டார் உமர் (ரலி).

Saturday, October 17, 2015

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ?

  கடின உழைப்பின் மூலம் பெறும் ஊதியத்தை வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் வங்கிகளில் வட்டியாகச் செலுத்துவது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்து விட்டது. வட்டிக்கு வட்டி, கந்து வட்டி, ஸ்பீடு வட்டி எனப் பல வடிவிலான வட்டிகளால், வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளே, கடனில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் அந்த நாடுகளின் வளர்ச்சி தடைபடுகிறது. அப்படி வட்டிக்கு கடன் வாங்கும் வங்கிகளே பொருளாதார நெருக்கடியால் திவாலாகிப் போவதை வரலாறு பதிவு செய்துள்ளது.

Monday, October 12, 2015

அழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்' - பாதுகாக்க இஸ்லாமிய அறிஞர்கள் கோரிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ்' - பாதுகாக்க இஸ்லாமிய அறிஞர்கள் கோரிக்கை

எஸ்.முஹம்மது ராஃபி




                                                                         கீழக்கரையில் உள்ள அரபுத் தமிழ் கல்வெட்டு
 

தமிழகத்தில் அரபுத் தமிழ் மொழி சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. அதை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகத் தொடர்புக் கருவியான மொழியும் சமூகத்தைப் போல் மாற்றத்துக்குட்பட்டது. அரசியல், சமய, சமூக வணிகத் தொடர்பு களால் வசதிக்கேற்ப வழங்கியும், வாங்கியும், வாழ வேண்டிய நிலை மொழிகளுக்கும் ஏற்படுகிறது.

சமணர் மற்றும் வைணவர் தொடர்பால் பிராகிருதமும், சமஸ் கிருதமும், அரேபியர் மற்றும் இஸ் லாமியர்கள் தொடர்பினால் அரபி யும், பார்சியும், துருக்கியும், ஆங்கி லேயர் மற்றும் பிரெஞ்சு ஆதிக்கத் தினால் ஆங்கிலமும், பிரெஞ்சும் இந்திய மொழிகளில் கலந் துள்ளன.

Monday, October 5, 2015

விருந்தோம்பல் எனும் உயர் பண்பு …!

விருந்தோம்பல் எனும் உயர் பண்பு …!

சிராஜுல் ஹஸன்

  “இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்காங்க. ஏதோ வந்தமா பாத்தமா என்று போய்க்கிட்டே இருக்கச் சொல்லுங்க. இங்க டேரா போடுற வேலையெல்லாம் வேண்டாம்.”

  இன்று பெரும்பாலான வீடுகளில் இத்தகைய உரையாடல்களைப் பலரும் கேட்டிருக்கலாம். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? இறைவன் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் விருந்தினரை நன்றாக உபசரிக்கட்டும்.

  அது மட்டுமன்று விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும், எப்படி வரவேற்க வேண்டும் என்றெல்லாம் கூட அண்ணலார் கற்றுத் தந்துள்ளார்கள். நம் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் முதலில் அவருக்கு முகமன் கூறி வரவேற்று நலம் விசாரிக்க வேண்டும்.

  குர்ஆன் கூறுகிறது : “இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா? அவர்கள் அவரிடம் வந்த போது ‘உம்மீது சாந்தி நிலவட்டும்’ என்று அவர்கள் கூறினார்கள். அவரும் ‘உங்கள் மீதும் சாந்தி நிலவட்டும்’ என்றார்.” (51:24-25)

Sunday, October 4, 2015

வெளிநாட்டில் இருந்து கொண்டே உள்ளூரில் உங்கள் பெயரில் சொத்து வாங்கலாம்

By Noorul ibn Jahaber Ali
வெளிநாட்டில் இருந்து கொண்டே உள்ளூரில் உங்கள் பெயரில் சொத்து வாங்கலாம் 

 பெரும்பாலானவர்கள் வேலைக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் தன்னுடைய பெயரில் வீட்டு மனை அல்லது வீடு வாங்க முயற்சிக்கும் போது வெளிநாட்டில் இருந்து கொண்டே நம்முடைய பெயரில் சொத்துக்களை இந்தியாவில் வாங்க முடியும்.
அதற்கான வழிமுறைதான் இந்த ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னி
Power of (General Attorney (GPA or GPOA) or Purchase Power.
தேவையான ஆவணங்கள்
பவர் எழுதி கொடுப்பவரின் (Principle)
புகைப்பட அடையாளச் சான்று
இருப்பிடச் சான்று
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
ரூபாய் 20-க்கான முத்திரைத் தாள் (பத்திரம்)
பவர் ஏஜண்ட் (எழுதி வாங்குபவர்)-ன்
புகைப்பட அடையாள அட்டை ( Photo identity proof)
இருப்பிடச் சான்று (Residence Proof)
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்
இரு அத்தாட்சிகளின் (Two witness)
புகைப்பட அடையாளச் சான்று (Photo ID proof)
இருப்பிடச் சான்று (Residential proof)
இந்த ஆவணங்களை தங்களது சொந்த ஊரில் (தமிழ்நாட்டில்) இருக்கும் போதே SUB_REGISTRAR OFFICE (சார் பதிவாளர் அலுவலகம்) தாக்கல் செய்யலாம்.

தன்னம்பிக்கை தாரக மந்திரம்


பிரச்சினைகள்,சோதனைகள் யாருக்கு தான் இல்லை..
எல்லோரும் ஏதாவது ஒரு பிரச்சினையோடு தான் இருக்கிறார்கள்..

அப்படி அதீத மன உளச்சலோடு இருப்பவர்கள் சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்..

இறைவன் தருகின்ற சோதனைகள் தான் இது..

அச்சத்தினால்,பசியினால்,பொருட் சேதத்தால்,உயிர் சேதத்தினால் சோதிப்பதாக அவனே கூறுகிறான்..

அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று உதட்டளவில் சொல்லிக் கொண்டாலும் உணர்வுகளை தடுத்து நிறுத்த முடியாது..

Saturday, October 3, 2015

பெண்ணே ! பெண்ணே !...

கூடை மலர்கள் தூவித் ..தூவித் ...தூவி ...
உனக்கான பாதைகள் அலங்கரித்திருந்தாலும் ....
வார்த்தை முட்களைப் பரப்பித்தான் ...
அடியெடுத்து வைக்கிறாய் மகளே !....

பேசாத மொழிகளும் ,பார்க்காத விழிகளும் ..
உன்னை பாரினில் உயர்த்திவிட்டாலும் .....
அதிகப் பேச்சும் ,ஆணவத் திமிரும் ..
உன்னை அடக்கப் படுத்திவிடும் மகளே !....

Thursday, October 1, 2015

இன்ப துன்பம்

உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன.
ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.

LinkWithin

Related Posts with Thumbnails