பலதடவை சொல்லியாகி விட்டது.பிடிவாதம் குறையவில்லை..
"உங்க தம்பி கல்யாணத்துக்கு கலந்துக்கணும்னா 4 பவுன் நகை வாங்கி தரணும்" னு அடம் புடிச்சா எப்படி..
மாச சம்பளம் வாங்கித் தான் காலம் ஓடுது..
என்னச் செய்ய
அவனுக்கு தெரியும் மனைவியின் பிடிவாதம்..என்ன செய்வது..
புரிந்துக் கொள்ளவே முடியவில்லை..அவளை
ஏதாவது லோன் போட்டு வாங்கிக் கொடுத்து விட வேண்டியது தான்...
எப்படியோ லோன் போட்டு நகை வாங்கிக் கொடுத்து இந்த நாலுமாசத்தில் லோனும் அடைந்திருந்தது..
அன்று ஆபிஸில் இருக்கும் போது திடீரென வயிற்றில் ஏதோ ஒரு வித வலி வந்து பிசைந்தது..
வீட்டிற்கு வந்த பிறகும் வலி குறைந்த மாதிரி தெரியவில்லை..
ஒன்றும் வலி தெரியாதது போல இருந்தாலும் கண்டுபிடித்து விட்டாள் மனைவி..
" என்னங்க செய்றது "
இதமாகக் கேட்டாள்..
"வாங்க ஆஸ்பிடல் போகலாம்." வலு கட்டாயமாக அழைத்துச் சென்றாள்..
டாக்டர் எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்து விட்டு ஸ்கேனும் எடுத்துப் பார்த்தார்..
கடைசியாக டாக்டர் சொன்னார்..
"ஒரு சின்ன ஆப்ரேஷன் செய்தா எல்லாம் சரியாகி விடும்."
வீட்டிற்கு வந்தாச்சு..
இப்போது வலி சற்றுக் குறைந்திருந்தது..
ஆனால் ஆப்ரேஷனுக்கு பணம் செலவாகுமே என்னச் செய்வது என்று யோசனையிலேயே இருந்தான் அவன்..
மனைவி இது பற்றி ஒன்றுமேச் சொல்லவில்லையே..
அவளால் என்னச் சொல்ல முடியும்.ஆறுதலை தவிர...
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மனைவி கேட்டாள்..
"என்னங்க எப்பங்க ஆப்ரேஷனை வச்சுக்கப் போறீங்க"
"என்னது.ஆப்ரேஷனா பணத்துக்கு என்ன பண்றது..அதெல்லாம் தேவையில்லை..இப்படியே அட்ஜட்ஸ் பண்ணிட வேண்டியது தான்.."
"என்னங்க இப்படிச் சொல்றீங்க இத வித்திடுங்க" என்றுச் சொன்ன அவளின் கையில் அவன் வாங்கிக் கொடுத்திருந்த 4பவுன் தங்கச் செயின் இருந்தது..
மனைவியை புரிந்துக் கொள்ள முடியாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..
No comments:
Post a Comment