Sunday, October 4, 2015

தன்னம்பிக்கை தாரக மந்திரம்


பிரச்சினைகள்,சோதனைகள் யாருக்கு தான் இல்லை..
எல்லோரும் ஏதாவது ஒரு பிரச்சினையோடு தான் இருக்கிறார்கள்..

அப்படி அதீத மன உளச்சலோடு இருப்பவர்கள் சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்..

இறைவன் தருகின்ற சோதனைகள் தான் இது..

அச்சத்தினால்,பசியினால்,பொருட் சேதத்தால்,உயிர் சேதத்தினால் சோதிப்பதாக அவனே கூறுகிறான்..

அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று உதட்டளவில் சொல்லிக் கொண்டாலும் உணர்வுகளை தடுத்து நிறுத்த முடியாது..

அந்த நேரத்தில் ,"அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்ற நிலைகுலையாத தன்மை பொறுமை வேண்டும்..

சிலருக்கு செல்வத்தை கொடுத்தும் சோதிப்பான்..

அந்த செல்வத்தினால் அவர்களுக்கு பல வித சோதனைகள் வரும்..அதிலும் நிலைகுலையாமை வேண்டும்..

ஆக இந்த உலகம் ஒரு சோதனை சாவடி தான்...

இப்போது யாரை பார்த்தாலும் நான் டென்ஷனா இருக்கேன்..மனசு சரியில்லை..என்று தான் சொல்கிறார்கள்..

முன்பெல்லாம் மனவளர்ச்சி குன்றியவர்கள்,மனநிலை பாதிக்கப் பட்டவர்களை தான் பைத்தியம் என்று நினைத்து மனநல நிபுணரிடம் அழைத்து செல்வார்கள்..

ஆனால் காலத்தின் கோலம் பெரும்பாலானவர்கள் இப்போது மன அழுத்தத்தினால் Abnormal லாகத் தான் இருக்கிறார்கள்..

முதல்நாள் ஒழுங்காகப் பேசும் சிலர் மறுநாள் அதுபோல பேசுவதில்லை..

கேட்டால் மனசு சரியில்லை அதனால தான் அப்படி பேசி விட்டேன் என்பார்கள்..

இப்படிப் பட்டவர்களுக்கு கவுன்சிலிங் தேவை என்றும் சொல்கிறார்கள்..

வாழ்க்கை போராட்டத்தில் ஏற்படும் பல படித் தரங்களில் இது போன்ற மன உளைச்சல்களில் யாரும் எந்த பதட்டமும் கொள்ளத் தேவையில்லை..

இறைவனை ஐவேளையும் தொழுது அவன் கற்றுத் தந்த இந்த தாரக மந்திரத்தை சொல்லும் வேளையில் இதுவே மன அழுத்தம் தீர்க்கும் அரு மருந்தாகும்..

"அல்லாஹும்ம லாமானிய லிமா அதைய்த வலா மொயித்தியா லிமா மனாத்த வலா யன்பகு ஜத்த மில்கல் ஜத்."

"யா அல்லாஹ் நீ எதை கொடுக்க நினைக்கிறாயோ அதை யாராலும் தடுக்க முடியாது..

நீ எதை தடுக்க நினைக்கிறாயோ அதை யாராலும் கொடுக்க முடியாது..

நாங்கள் செய்கின்ற முயற்சிகள் பயனளிக்கும் உன் நாட்டமிருந்தால்..அனைத்தும் பயனளிக்கும்.."

"Allah which one is given to you no one can stop you. Allah which one to stop you no one can give you.. Everything is possible with Allah..."

கூடவே

"குல்லன் முஸிபனா இல்லாம கத்தபிலனா.."

"அல்லாஹ் விதித்ததை தவிர எதுவுமே எங்களுக்கு நிகழாது.."

என்ற ஈமானின் உறுதியும் உள்ளத்தில் பதிந்து கிடந்தால் உங்களை அறியாமல் நீங்கள் உந்தப் படுவீர்கள்..

எந்த டென்ஷனுக்கும் வழியில்லை.எந்த மன உளைச்சலுக்கும் வாய்ப்பில்லை.எந்த கவுன்சிலிங்கும் தேவையில்லை.
செய்வீர்களா...

‪‎இன்ஷா‬ அல்லாஹ்..
 
எழுதியவர்   Saif Saif 
அவர்கள்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails