மக்களுக்குச் சேவை செய்வதாக, தொண்டு செய்வதாக நம்பிக் கொண்டு ஆளுக்கொரு இயக்கப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். சிலர் அதை அரசில் பதிவு செய்து கொள்கிறார்கள். சிலர் பதிவு செய்யாமலும் செயல்படுகிறார்கள். உண்மையில் மக்களுக்கு ஏதாவதொரு உலகியல் பலனளிக்கும் செயல்களைச் செய்யவும் செய்கிறார்கள். அதனால் உலகில் பேர் புகழ் கிடைக்கவும் செய்யலாம். ஆனால் இதுவும் ஒரு மாயைதான் என்பதை அறியாமல் ஏமாறுகிறார்கள்.
ஷைத்தானின் மாய வலையில் வசமாகச் சிக்கிய அச்சகோதரர்கள் அவர்களின் கற்பனையில் உதிக்கும் ஓர் இயக்கப் பெயரைத் தேர்ந்தெடுத்து சூட்டிக் கொள்கிறார்கள். முன் சென்றவர்கள் உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு பொய்க் கடவுள்களுக்குச் சுயமாகப் பெயர் சூட்டி, பிரபல்யப்படுத்தி ஆதாயம் அடைந்தது போல், இவர்கள் கற்பனையில் உதித்தப் பெயர்களைத் தங்களின் இயக்கங்களுக்குப் பெயராகச் சூட்டி அவற்றைப் பிரபல்யப்படுத்தி உலகியல் ஆதாயங்களை அடைகிறார்கள்.
Monday, November 30, 2015
உண்மை எங்கேயும் எப்போதும் கைகொடுக்கும்
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் ஈராக்கின் ஆளுநராக இருந்தான்.
பெரிய கொடுங்கோலன்.
பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றவன்.
அவனுக்கும் இப்னு கிர்ரிய்யா அல் ஹிலாலி என்ற அறிஞருக்கும் திருவிளையாடல் பட பாணியில் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேள்விகளை ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் கேட்க இப்னு கிர்ரிய்யா பதில் சொன்னார்.
அழிவுக்குக் காரணம் என்ன ?
கோபம் !
அறிவின் அழிவுக்குக் காரணம் ?
தற்புகழ்ச்சி !
சாதாரண அறிவுக்கு அழிவு எது ?
மறதி !

Wednesday, November 25, 2015
ஹழ்ரத் அலி(ரலி) அவர்களை சந்தித்த 10 அறிஞர்கள் அவர்களிடம்,
ஹழ்ரத் அலி(ரலி) அவர்களை
சந்தித்த 10 அறிஞர்கள் அவர்களிடம்,
“நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்போம் அதில் எங்கள் 10 பேருக்கும் தனித் தனியே 10 பதில் தர முடியுமா?” என்று கேட்டார்கள்.
"செல்வம், அறிவு" இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர்.
ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் 10 பேருக்கும் 10 பதில் சொன்னார்கள், அவை

மனிதம்
ஆலிம் புலவர்
எஸ். ஹூஸைன் முஹம்மது
ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ,திண்டுக்கல்
----------------------------------------
மனிதம் அன்பின் மறுபெயரா
மனதில் கசியும் வாசனையா
குணத்தால் எழுப்பிடும் கோபுரமா
குளிர்ந்த பண்பின் கூறுகளா
உனது எனது என்பதெலாம்
ஓய்ந்தபின் தோன்றும் உயிர்சுகமா
அனைத்து உயிரும் தன்னுயிராய்
ஆராதிக்கும் தவநிலையா?

Monday, November 23, 2015
மழை நீர் ....சேமிப்பு எப்போதும் வேண்டும் !...
மழை நீரை சேமிக்க வழியில்லாததால் ...
பலரின் கண்ணீரை சேமிக்க வழியில்லையே !...
சொந்தமாய் வீடொன்று வேண்டுமென்றே ..
பலர் பள்ளத்தில் குடியேறி கைசேதப்பட்டார் !...
இயற்கையின் சீற்றத்தை தடுப்பார் யாரோ ?...
இடர்பாடின் வேதனையை குறைப்பார் யாரோ ?...
அரசியல் குடைக்குள் புகுந்துகொண்டு ...
அடுத்தவரை குறைபேசி திரிதல் கேடு !...

Saturday, November 21, 2015
பாரீஸ் முஸ்லிம் இளைஞர் ஏற்படுத்திய திடீர் பரபரப்பு:வீடியோ!
பாரீஸ்: பாரீஸில் முஸ்லிம் இளைஞர் ஒருவர்"நான் தீவிரவாதி இல்லை என்னை கட்டி அணைப்பீர்களா?" என்ற வாசகத்துடன் அமைந்த பதாகையை ஏந்தி நின்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் 129 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு முஸ்லிம் இளைஞர் தன் கண்களை கட்டியப்படி, 'நான் தீவிரவாதி இல்லை, என்னை கட்டி அணைப்பீர்களா?' என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார்.
Monday, November 16, 2015
பள்ளிவாசல்
பள்ளிவாசல்
இது படைத்தவனின் வீடு..!
இது –
ஏகத்துவ அடிமைகள்
இபாதத்துத் தென்றலில்
இளைப்பாறும் பூஞ்சோலை..!
இது –
தேகப் பயிற்சிக்கூடம் அல்ல.
மனங்களின் –
யோகப் பள்ளிக்கூடம்..!
இஸ்லாம் – தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம்!
இஸ்லாம் – தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் மார்க்கம்!
“எவனொருவன் அநியாயமாக மற்றொருவனைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்”
“எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவரைப் போலாவார்”
ஆஹா என்ன அருமையான வாசகங்கள் என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா! ஆமாம்! இவைகள் சாதாரண மனிதரின் வாசகங்கள் அல்ல! மாறாக இது, மனித குலம் அனைத்தையும் படைத்த இறைவனான அல்லாஹ் மனிதர்கள் ஈடேற்றம் பெற அவன் இறக்கியருளிய அவனுடைய சத்திய திருவேதத்திலே “அநியாயமாக ஓர் உயிரைக் கொலைச் செய்வதைப்” பற்றி மனிதர்களுக்கு விடுத்த எச்சரிக்கைச் செய்தியாகும்.
Sunday, November 15, 2015
அதில் பங்கு வேண்டாம் !
உண்ணாமல் இருந்தாலும்
உன்னோன்பு ஏற்கலாகாதாம்
தண்மை குணங்களாக
தகுதி வரவேண்டும்
பொய்யான பேச்சுகளும்
பொய்யானநடவடிக்கைகளும்
மெய்யாக விட்டிட்டே
மேன்மை பெறவேண்டும்
வணக்கங்கள் எதற்காக ?
வல்லோனே கேட்க்கின்றான்
இணக்கமான குணமில்லை
எப்பொழுது மனிதத்தன்மை ?
பரந்த மனமில்லை !
பக்குவமும் இன்னுமில்லை !
அரவ குணங்களே
அப்பப்ப அரங்கேற்றம்
'எல்லாப் புகழும்
இறைவனுக்கே' என்றானே
வல்லோன் மொழிதனிலே
வாசிப்பு மட்டும்தானா !?
புறம்பேசுதல் நல்ல பழக்கமாகுமா.!?
அதாவது அடுத்தவன் குறை காண்பவன் அரை மனிதன் தன் குறை உணர்பவன் முழுமனிதன் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் இப்பழமொழி பெரும்பாலும் புறம்பேசும் மனிதர்களுக்கே மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
காரணம் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பார்க்கும்போது தன்னிடத்தில் பல குறைகளையும் வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் குறைகளை அடுத்தவர்களின் பிரச்சனைகளை, அடுத்தவர்களின் போக்குகளை அலசி ஆராய்ந்து அதைப்பற்றி புறம்பேசுவது என்பது எப்படி நல்ல பழக்கமாக இருக்கமுடியும்.?

Friday, November 13, 2015
இணைந்துக்கொள்ளுங்கள்...
அழுது பல நாள் ஆயிற்று;
இறுகிப் போய்விட்டனவோ
என எண்ணுமளவிற்கு
கண்களெல்லாம் வறட்சியாய்;
விழிகளை மெல்லமாய் மூடி
இதயத்தை சுழலவிட்டப்படி..
நான் ஏன் இங்கு இருக்கிறேன்
எதை எதை கடந்துவந்திருக்கிறேன்..
Thursday, November 12, 2015
மனித மனங்கள் பலவிதம்..
ஒருவன் அமைதியா இருந்தா என்னடா ஊமை குசும்பம்
போல இருக்கானேன்னு
சொல்ல வேண்டியது...
கொஞ்சம் பேசி விட்டால் என்னடா இவன் ரெம்ப வாய் சவடால்னு சொல்ல வேண்டியது..
கொஞ்சம் சந்தோஷமா இருந்தா ரெம்ப செழிப்போன்னு நினைக்க வேண்டியது...
போல இருக்கானேன்னு
சொல்ல வேண்டியது...
கொஞ்சம் பேசி விட்டால் என்னடா இவன் ரெம்ப வாய் சவடால்னு சொல்ல வேண்டியது..
கொஞ்சம் சந்தோஷமா இருந்தா ரெம்ப செழிப்போன்னு நினைக்க வேண்டியது...
இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்!
இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்!
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
பொது நிர்வாக தேர்தல்கள் அதன் சட்ட, திட்டங்களுக்குள் அடங்கும். அதன் நிர்வாக அமைப்புகள் தமிழக பதிவுத்துறை சட்டம், 1975க்குள் உட்பட்டது. சில நிர்வாகம் கம்பனி சட்டத்திற்குட்பட்டு செயல்படும். அதன் சட்டத்தினை மீறும் செயலுக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வழி வகுக்கும். அதில் உறுப்பினர் யார், யார் என்பது அந்த பொது நிர்வாகத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும்.
பள்ளி வாசல்களை வக்ஃப் சட்டம் மற்றும் ஸ்கீம் வழிமுறைகள் படி நிர்வாகித்து வருகின்றனர். சில இடங்களில் தனிப்பட்டவர்களே பள்ளிவாசல்களை நிர்வாகித்து வருகின்றனர்.
ஆனால் இறைவனின் இறை இல்லங்களில் நிர்வகிப்பது சம்பந்தமாக அல் குர்ஆனில் அத்தியாயம் 9 அத்தவ்பாவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
"இறை நிராகரிப்போருக்கு பள்ளி நிர்வாக நிர்ணயம் செய்யும் உரிமையில்லை." (அல்குர்ஆன் .9:17)
Wednesday, November 11, 2015
கலை என்பது எதைக் குறிக்கிறது?
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள். (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க் கற்பனை செய்கின்றீர்களா?” அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 10: 59,60)
ஹராமும், ஹலாலும் இஸ்லாத்தின் மிக முக்கிய அம்சங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எது அனுமதிக்கப்பட்டுள்ளது, எது தடுக்கப்பட்டுள்ளது என்பதை ஷரீஅத் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டது அனைத்துமே நமது நன்மைக்காத்தான் என்பது ஒரு சில விஷயங்களில் நமக்குப் புரிகிறது. பல விஷயங்களில் நமக்கு இது புலப்படமால் நன்மைகள் உட்புதைந்திருக்கிறது.
நஜ்ஜாஷி மன்னர் (அபீசீனியா)
அடைக்கலம் கொடுத்தவர் இஸ்லாத்தில் ஐக்கியமான வரலாறு
இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்கள் மக்காவில் பெரும் சோதனைக்கு ஆளானார்கள். இதிலிருந்து தங்களையும் தங்கள் கொள்கையையும் காத்துக் கொள்வதற்காக அபீசீனியாவிற்கு ஜாஃபர் பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.
அப்போது அவர்களுக்கு அங்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று சூழ்ச்சி செய்து, தடுப்பதற்காக மக்காவின் இணை வைப்பாளர்கள் ஒரு குழுவினரை அபீசீனியாவின் மன்னர் நஜ்ஜாஷி அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.
ஆனால் நஜ்ஜாஷி மன்னர், மக்கா இணை வைப்பாளர்களின் கோரிக்கையை நிராகரித்து முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னர் முஸ்லிம்களின் இந்த ஹிஜ்ரத் அமைந்ததால் இது முதல் ஹிஜ்ரத் என்று அழைக்கப்படுகின்றது.

Monday, November 9, 2015
மெஹர்
மிகையற்ற நடிப்பு; தொய்வின்றி இயல்பாக நகரும் காட்சிகள்; திரைப்படங்களில் செயற்கையாகத் தென்படும் முஸ்லிம்களின் வசனம் போலன்றி இயல்பாக அமைந்திருந்த முஸ்லிம் கதாபாத்திரங்களின் உரையாடல் என்று நிறைய ப்ளஸ்.
-நூருத்தீன்
http://darulislamfamily.com/reviews-t/our-reviews/595-mehar-review.html
http://www.hotstar.com/#!/watch-meher.
-நூருத்தீன்
http://darulislamfamily.com/reviews-t/our-reviews/595-mehar-review.html
http://www.hotstar.com/#!/watch-meher.
ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இணைய தளம்
இது ஒரு பொழுது போக்கு இணைய தளமல்ல, பொழுது போய்க்கொண்டிருப்பதைப் பற்றி எச்சரிக்கும் இணைய தளம். http://www.tamilislamicaudio.com/default.asp
Sunday, November 8, 2015
நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூலிலிருந்து....-Abu Haashima
" ஆது மகன் சத்தாது
குலவலிமைப் பெருவாழ்வு
அழியாமல் நிலை நின்றதோ ? "
ஹனிபா அண்ணன் பாடிய இந்தப் பாட்டு
அடிக்கடி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
யார் இந்த சத்தாது ?
நூஹு நபி ( அலை ) அவர்களின் மகனான சாமின் மகன் இறாம் என்பவரின் எட்டு ஆண் மக்களின்
வழித் தோன்றல்கள்தான் இந்த ஆது கூட்டத்தார்.
யமனிலிருந்து இராக் வரை இவர்களின் நாடு விரிந்திருந்தது.
இவர்கள் வலிமை மிக்கவர்கள். பெரும் உருவம் உள்ளவர்கள்.
பெரிய பெரிய பாறைகளை தலையில் சுமந்து வரும் ஆற்றலுள்ளவர்கள்.
எதிரிகளின் தலையில் பெரும் கற்களைப் போட்டுக் கொல்லும் சக்தி உள்ளவர்களாக இவர்கள் இருந்ததால் இவர்களை யாரும் வெல்ல முடியவில்லை.
இவர்களின் குட்டி தெய்வங்கள் ஸதாஉ , சமூத் மற்றும் ஹபாஉ .
இவர்கள் கட்டிய கோட்டையின் உள்ளே இவர்கள் வசதியாக வாழ்ந்து வந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
Subscribe to:
Posts (Atom)