Sunday, February 25, 2018

இறைவனின் வாக்கு பொய்க்குமா என்ன..!?

                       இறைவனின் வாக்கு பொய்க்குமா என்ன..!?
Saif Saif
நடக்கும் நிகழ்வுகள் அவனது நாட்டமின்றி வேறென்ன..!?
இன்றைய உலக,
நாட்டு நடப்புக்கெல்லாம் மனதில் எழும் கேள்விக்கெல்லாம்
இறைவன் எத்தனை தெளிவான
பதிலையும்,
தீர்வையும் சொல்லி வைத்திருக்கிறான்..!
"மேலும் இதேபோன்று ஒவ்வோர் ஊரிலும் அங்குள்ள பெரும் குற்றவாளிகளை
நாம் விட்டு வைத்திருக்கிறோம்.
தங்களுடைய ஏமாற்று வலையை அங்கு அவர்கள் விரித்து வைக்கட்டும் என்பதற்காக!உண்மையில் அவர்களே தங்களின் ஏமாற்று வலையில் சிக்கிக் கொள்கின்றார்கள்.
ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை."
(6:123)

Tuesday, February 13, 2018

குஞ்ஞு முஹம்மது!


கட்டுரை ஆசிரியர் அபூபிலால் கத்தரில் வசிப்பவர். தம்மைச் சுற்றி வாழும் மனிதர்களை வாசிப்பவர். அவ்வாறு அவர் வாசித்தவர்களுள் ஒருவரான ‘ஹாஜிக்கா’வைப் பற்றி நமது சத்தியமார்க்கம் தளத்தில் இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இப்போது இன்னொருவர். பெயர் குஞ்ஞு முஹம்மது!
குஞ்ஞு முஹம்மது சாஹிபின் பூர்வீகம் கோழிக்கோடு. கத்தரின் எண்ணெய்க் கம்பெனி ஒன்றின் இயந்திரவியல் பிரிவில் ஒரு மேலாளருக்குச் செயலாளராகச் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் தொடர் பணியாற்றல். அறுபதாவது வயதில், சுமார் முப்பத்துச் சொச்சம் ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின், ஆறு குழந்தைகளுள் இரு மகள்களை மருத்துவர்களாகவும் ஒரு மகனைப் பொறியாளராகவும் உருவாக்கிவிட்ட உள நிறைவோடு ஓய்வுபெற்றுக் குடும்பத்துடன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தாகிவிட்டது.

Friday, February 9, 2018

ஜனாஸா அடக்க நிகழ்சியில்

 *உண்மைசம்பவம்*
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

நாம் பலமுறை ஜனாஸா அடக்க நிகழ்சியில் கலந்து கொள்கிறோம்.

ஒரு சில நேரங்களில்  ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் போது நடக்கும்.

சில நல்ல  அடையாளங்களை வைத்து நல்ல ஜனாஸா என்று நாம் அடையாளம் கண்டும் உணர்ந்தும். கொள்கிறோம்.


அதே வேலையில் ஒரு சில ஜனாஸாக்களை அடக்கம் செய்யும்போதும்.

எப்போதாவது யாராவது ஏதாவது ஒரு சில தீய  நிகழ்வுகளையும் பார்த்தும் இருப்போம்.

அந்த வரிசையில்
என் கண்ணெதிரே நடந்த ஒரு ஜனாஸாவின் நிலையை பற்றிய ஒரு கட்டுரை.


கடந்த சில வருடங்களுக்குமுன் தில்லியில் நடந்த சம்பவம்.

Thursday, February 8, 2018

பேராசிரியர்_நசீமாபானு



பேராசிரியர்_நசீமாபானு ...
எனது அருமை நண்பர் 
பேராசிரியர்_சாயிபு_மரைக்காயர் அவர்களின் துணைவியார்.
இவருக்கும் குமரி மாவட்டத்திற்கும்
நெருக்கமான உறவிருக்கிறது .
இவர் ...
#கவிமணி_தேசிக_விநாயகம்_பிள்ளை
அவர்களின் உறவுமுறை பேத்தி.
காரைக்கால் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.
இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு
#முஸ்லிமானார்.
சாயிபு மரைக்காயர்
காதல் மணமும் செய்து கொண்டார்.
இஸ்லாத்தின் மாண்புகளை
செவி இனிக்கப் பேசும்
ஆற்றல் பெற்றவர்.

Tuesday, February 6, 2018

கொஞ்சம் கவலைப்படுங்கள் தமிழக ஆலிம்களின் ஹாபிஸ்களின் நிலமையை கொஞ்சம் யோசித்து

Thanks Kamaludeen +9198400-02828

Hassane Marecan
அன்பான. கண்ணியமான தமிழக பள்ளிவாசலின் நிர்வாகிகளே
அன்பான வேண்டுகோள் வட மாநிலத்திலிருந்து வரும் ஓதிய மாணவர்களை
மோதினார் பற்றாக்குறை என்ற பெயரில் பள்ளிவாசல் பணி அமர்த்துகிறீர்கள் குறைவான சம்பளம் சாப்பாடு பிரச்சினை இல்லை என்று எண்ணி சேர்க்கிறீர்கள்
பரவாயில்லை மோதினாராக சேர்க்கும் அவர்களை தராவிஹ் தொழ வைக்கவும் இமாமத் செய்ய சொல்வதின் பின் விளைவை சிந்தித்ததுண்டா
மிக கவலையுடன் சொல்லக்கூடிய செய்தி தமிழகத்தில் எத்தனை ஆலிம்களை ஹாபிழ்களைஉருவாக்கும் மதரஸாக்கள் உள்ளது கிட்டத்தட்ட நூறை தொடும்
வருட வருடம் பல ஆலிம்கள் ஹாபிஸ்கள் வெளி வருகிறார்கள்
அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் ஏற்கனவே நிறைய உலமாக்கள்

Thursday, February 1, 2018

அமைதியை நோக்கி நிகழ்ச்சி ஏன்? ஏதற்கு?

ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று ஏற்க இவ்வுலகு!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.



      தமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல்.

      அகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.

      இல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails