Saif Saif
நடக்கும் நிகழ்வுகள் அவனது நாட்டமின்றி வேறென்ன..!?
இன்றைய உலக,
நாட்டு நடப்புக்கெல்லாம் மனதில் எழும் கேள்விக்கெல்லாம்
இறைவன் எத்தனை தெளிவான
பதிலையும்,
தீர்வையும் சொல்லி வைத்திருக்கிறான்..!
"மேலும் இதேபோன்று ஒவ்வோர் ஊரிலும் அங்குள்ள பெரும் குற்றவாளிகளை
நாம் விட்டு வைத்திருக்கிறோம்.
தங்களுடைய ஏமாற்று வலையை அங்கு அவர்கள் விரித்து வைக்கட்டும் என்பதற்காக!உண்மையில் அவர்களே தங்களின் ஏமாற்று வலையில் சிக்கிக் கொள்கின்றார்கள்.
ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை."
(6:123)
"எந்த ஊரையும் மறுமைநாளைக்கு முன் அழித்தொழிக்காமலோ, கடுமையான வேதனையில் ஆழ்த்தாமலோ நாம் விட்டு விட மாட்டோம். இது இறைவனின்
பதிவேட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது."
(17:58)
"நாம் ஓர் ஊரை அழித்திட நாடினால் அங்கு சொகுசாக
வாழ்வோருக்கு நாம் கட்டளையிடுகின்றோம்; அவர்கள் அங்கு (இக்கட்டளைக்கு)
மாறு செய்யத் தலைப்படுகிறார்கள். அப்போது தண்டனைக்குரிய தீர்ப்பு அவ்வூரின் மீது விதிக்கப்பட்டு விடுகின்றது. ஆகவே, அதனை நாம் அழித்தொழித்து விடுகின்றோம்.(17:16)
"மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர்களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது.(16:61)
"என்ன, இந்த மக்கள் மறுமை நாள் தங்களிடம் திடீரென வந்துவிட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றார்களா? அதன் அடையாளங்கள் வந்துவிட்டனவே! அந்நாளே அவர்களிடம் வந்துவிட்டால், அறிவுரையை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த வாய்ப்புதான் எஞ்சி இருக்கப்போகிறது?"
(47:18)
"மேலும்,இறுதிநாள் நிகழ்வதற்கு அதிக நேரம் தேவையில்லை.கண் சிமிட்டும் நேரம்,ஏன் அதைவிடவும் குறைந்த நேரம் போதுமானதாகும்."
(16:77)
"சற்று சிந்தித்துப் பாருங்கள்! முகங்குப்புற நடந்து செல்பவன் மிகச் சரியான வழியை அடைபவனா.? அல்லது தலைநிமிர்ந்து ஒரு நேரான வழியில்
நடந்து சென்று கொண்டிருப்பவனா..?(67:22)
"ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும் பூமியில் குழப்பம் செய்து திரிபவர்களையும்
நாம் சமமாக்கி விடுவோமா,என்ன?
பயபக்தியுடையோரைப் ஒழுக்கக் கேடர்களைப் போன்று நாம் ஆக்குவோமா, என்ன?(38:28)
#ஒருபோதும்
எந்த துன்பமும் ஏற்படுவதில்லை.
அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல்! எவரேனும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தால் அவரது உள்ளத்திற்கு அல்லாஹ் வழிகாட்டுதலை வழங்குகின்றான்..(64:11)
#நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்.கவலையும் கொள்ளாதீர்கள்.நீங்கள் இறைநம்பிக்கை
உடையோராயின் நீங்களே மேலோங்குவீர்கள்."
(3:139)
No comments:
Post a Comment