Friday, February 9, 2018

ஜனாஸா அடக்க நிகழ்சியில்

 *உண்மைசம்பவம்*
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

நாம் பலமுறை ஜனாஸா அடக்க நிகழ்சியில் கலந்து கொள்கிறோம்.

ஒரு சில நேரங்களில்  ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் போது நடக்கும்.

சில நல்ல  அடையாளங்களை வைத்து நல்ல ஜனாஸா என்று நாம் அடையாளம் கண்டும் உணர்ந்தும். கொள்கிறோம்.


அதே வேலையில் ஒரு சில ஜனாஸாக்களை அடக்கம் செய்யும்போதும்.

எப்போதாவது யாராவது ஏதாவது ஒரு சில தீய  நிகழ்வுகளையும் பார்த்தும் இருப்போம்.

அந்த வரிசையில்
என் கண்ணெதிரே நடந்த ஒரு ஜனாஸாவின் நிலையை பற்றிய ஒரு கட்டுரை.


கடந்த சில வருடங்களுக்குமுன் தில்லியில் நடந்த சம்பவம்.


நான் தில்லியில் வசிக்கும் நேரத்தில்.

அந்த ஊரை சார்ந்த எனக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பரின் அண்ணணின் மரண செய்தி இரவு 9 மணி அளவில் கேட்டு.

அடக்கம் பன்னும் நிகழ்சியில் கலந்து கொண்டேன்.

இரவு 11.30 மணி அளவில் அமைதியான நேரத்தில்

(இந்த நேரத்திலும் ஜனாஸா அடக்குவார்களா என்று சந்தேகம் ஏற்படலாம்

தில்லியை பொருத்தவரை எல்லா நேரத்திலும் ஜனாஸாகளை அடக்குவார்கள்

காரணம் மறுநாள் அனைவர்களும் வேலைக்கு செல்ல வேண்டிய அவசர  சூல்நிலை)


சுற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில்

கையில் ஒரு சில விளக்குகளுடன் நடந்த அந்த அடக்க நிகழ்சியில்.

கபரஸ்தானை ஒட்டிய ஒரு இடத்தில்   ஜனாஸா தொழ வைக்க முயற்சித்த வேலையில்.

நான்கு தக்பீருக்கு பதிலாக மூன்று தக்பீருடன் தவறுதலாக தொழுகை முடிந்தது.

அதை சரி செய்யும் விதமாக மறுபடியும் ஜனாஸா தொழுகை நடைபெற்றது.

அதுவும் தவறுதலாகவே மூன்று தக்பீருடன் முடிந்தது.

மறுபடியும் மூன்றாம் முறையாக சரியான நாலு தக்பீருடன் தொழுகை நிறைவேற்றி

ஜனாஸாவை அடக்கம் செய்ய கபர் அருகே கொண்டு சென்று

சந்தூக்கில் இருந்து ஜனாஸாவை தூக்கியவுடன்

யாரும் எதிர்பாரமல் திடீர் என
கபர் இடிந்து மண் முழுவது கபரை மூடி விட்டது

மறுபடியும் அதிலிருந்த மணல்களை அகற்றி விட்டு

ஜனாஸாவை கபர் உள் கொண்டு சென்றால்

ஜனாஸா உள்ளே செல்ல மறுக்கிறது

கபர் அகலமாக தோன்றப்பட்டுள்ளது

இவர் சுமாரான உடல் வாகு கொண்டவர்.

இருந்தாலும் ஜனாஸாவின் இரண்டு தோள்பட்டையையும் இடிக்கிறது


நன்றாக தெரிகிறது கபர் இடம் தர மறுக்கிறது.

ஒரு வழியாக ஜனாஸாவை கபரில் உள்ளே வைத்து விட்டு
அடக்கம் பன்ன முயற்சிக்கும் போது

(நமதூரை போல் அங்கு மூங்கில்களை அடுக்கும் பழக்கம் இல்லை

பலகைகளை கபரின் மேல்முக்கால்பகுதியில் வரிசையாகபரப்பி

அதன்மேல் பாயை பரப்பி

அதன்மேல் பிளாஸ்டிக்கவர்களை பரப்பி அதன் மேல் மண்மூடுவார்கள்

எந்த நிலையிலும் மணலோ தண்ணீரோ உள்ளே புக வழி இல்லை)

பலகைகள் அடுக்கி பாய் விரித்து பிளாஸ்டிக் கவர்களையும் விரித்து
கபரின் மேல் மண் போட போட

கபரின் நடுபகுதியில் இருந்து சர்ரென மண் உள்ளே செல்கிறது

அந்த இடத்தில் மண் உள்ளே செல்ல வாய்ப்பே இல்லை

இருந்தாலும் மண் உள்ளே சென்று
கபர் மேலே எழும்ப மறுக்கிறது

அசாதரன சூழ்நிலையை உணர்ந்த அங்கிருந்தவர்கள் அனைவர்களும்

அரைகுறையாக
அப்படியே விட்டு விட்டு

அந்த இடத்தை விட்டு அகன்று சிறிது தூரம் வந்து இருப்போம்

கபர் அருகே ஏதோ பாராங்கல்கள் ஒன்றோடு ஒன்று உரசும் சப்தம் போல் தட தட என ஒரு பெரும் சப்தம் கேட்டது

பாத்திஹா கூட ஓதாமல்  திரும்பிபாராமல் பயந்து அங்கிருந்து வெளியேறினோம்

மறுநாள் விடிந்து அந்த கபரை சென்று பார்த்தால்

மணல்கள் சிதறி மிகவும் அலங்கோலமாக காட்சி அளித்தது

என்ன நடந்தது என்று தீர்மானிக்கமுடியவில்லை.

மறுபடியும் மணலை மூடி சரி செய்து விட்டு பாத்திஹா ஓதி விட்டு

இந்த சம்பவம் நமக்கு உணர்த்தும் படிப்பினை என்று நினைத்து கனத்த மனதுடன் திரும்பி வந்தோம்.

பிறகு விசாரித்ததில்
மரணித்த அந்த நபர் மது மாது என்று அதிலேயே மூழ்கி

தன் குடும்பத்தை பார்க்காமல் வாழ்ந்தவர் என்று கேள்விபட்டு
அவரின் மறுமை வாழ்வு சிறக்க துவா இறைஞ்சினோம்

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் வாழும் காலத்தில் நல்ல படி வாழ்ந்தால் நல் மரணம் நம்மை வந்தடையும்.

தீய வழியில் வாழ்ந்தால் தீய மரணம் நம்மை வந்தடையும்.


அல்லாஹ் நம் அனைவர்களையும்
தூர் மரணங்களை விட்டு பாதுகாத்து

நல் மரணங்களை நஸீபாக்கி நல்லோர்கள் கூட்டத்தில் நம்மை சேர்த்து அருள் புரிவானாக.


அன்புடன்
*அன்வர்பாஷா*
 ஷைக் ஹிஷாம் கப்பானி
தமிழில்: ரமீஸ் பிலாலி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails