Tuesday, February 6, 2018

கொஞ்சம் கவலைப்படுங்கள் தமிழக ஆலிம்களின் ஹாபிஸ்களின் நிலமையை கொஞ்சம் யோசித்து

Thanks Kamaludeen +9198400-02828

Hassane Marecan
அன்பான. கண்ணியமான தமிழக பள்ளிவாசலின் நிர்வாகிகளே
அன்பான வேண்டுகோள் வட மாநிலத்திலிருந்து வரும் ஓதிய மாணவர்களை
மோதினார் பற்றாக்குறை என்ற பெயரில் பள்ளிவாசல் பணி அமர்த்துகிறீர்கள் குறைவான சம்பளம் சாப்பாடு பிரச்சினை இல்லை என்று எண்ணி சேர்க்கிறீர்கள்
பரவாயில்லை மோதினாராக சேர்க்கும் அவர்களை தராவிஹ் தொழ வைக்கவும் இமாமத் செய்ய சொல்வதின் பின் விளைவை சிந்தித்ததுண்டா
மிக கவலையுடன் சொல்லக்கூடிய செய்தி தமிழகத்தில் எத்தனை ஆலிம்களை ஹாபிழ்களைஉருவாக்கும் மதரஸாக்கள் உள்ளது கிட்டத்தட்ட நூறை தொடும்
வருட வருடம் பல ஆலிம்கள் ஹாபிஸ்கள் வெளி வருகிறார்கள்
அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் ஏற்கனவே நிறைய உலமாக்கள்

இமாமத் பணி யை விட்டு விட்டு வேறு துறையில் இறங்கி விட்டார்கள் தற்போது  மதரஸாவில் ஓதி வெளிவரும்உலமாக்களுக்கு இமாமத் தராவிஹ் தொழுகைக்கு இடம் கிடைக்காமல் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை இந்த பணியில்
சேர்த்ததின் காரணமாக தமிழக ஹாபிஸ்களுக்கு இடம் கிடைக்கா விட்டால்
காலப்போக்கில் ஓதுவதை விட்டு விடுவார்கள் அனைத்து மதரஸாக்களை
மூடிவிடும் சூழல் ஏற்படும் கொஞ்சம் கவலைப்படுங்கள் தமிழக ஆலிம்களின்
ஹாபிஸ்களின் நிலமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள் நிர்வாக பெருமக்களே சிரமமான சூழலில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக உலமாக்களை
மேலும் சிரமத்தில் தள்ளி விடாதீர்கள் தோற்றம் நல்லதாக உள்ளது குரல் அருமை
சம்பளம் குறைவு என எண்ணி வட மாநிலத்தவரை சேர்க்கும் முன் அவர்களின் குணம் என்ன அவர்களின் செயல்பாடுகள் என்ன அவர்கள் எப்படிப்பட்ட தன்மையில் வந்திருக்கிறார்கள் நல்லவர்களா கெட்டவர்களா அனைத்தையும் ஆராய்ந்து பாருங்கள்
வருங்கால நம் சந்ததிகளிடம் மார்க்கக் கல்வி இல்லாமல் போய்விடுமே.
சிந்தனை செய்யுங்கள் பள்ளிவாசலின் பொறுப்புதாரிகளே முதலில் நம் வீட்டை கவனித்துக் கொள்வதுதான் நமக்கும் நல்லது சமுதாயத்திற்க்கும் நல்லது
நம் தமிழக ஹாபிஸ்களை ஆலிம்களை நாம் ஓதுக்கினால் நாம் தற்கொலை செய்வதற்கு சமம் அருமையான அல்லாஹ்வின் பள்ளிவாசலின் பொறுப்புதாரிகளே
அண்ணல் நபியின் வாரிசுகளான தமிழக ஆலிம்களை ஹாபிஸ்களின்
வாழ்க்கையையும்சேவையையும் அழித்து விட வேண்டாம் தமிழக மார்க்கக் கல்வி கூடங்களை மூடச் செய்து விட வேண்டாம் தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டால் கவலைப்பட்டு பலன் இல்லை வடமாநிலத்தில் உள்ள முஸ்லிமான உலமாக்களேயே ஹாபிஸ்களையோ குறை சொல்வது நோக்கமல்ல நம் உலமாக்கள் ஹாபிஸ்கள் ஓரங்கட்டப்பட்டால் நாளை நம் பிள்ளைகள் மார்க்கம் தெரியாத அநாதையாகி விடுவார்கள் புரிந்து கொள்வீர்கள் என் நம்புகிறேன் பணிவுடனும் கவலையுடனும் வேதனையுடனும் பல உலமாக்களின் அனுபவித்த கஷ்டங்களை அறிந்தபின் இதை பதிவிட்டுள்ளேன் நல்ல சிந்தனையோடு படித்து செயல்பட பணிவுடன் வேண்டுகிறேன்
Thanks Kamaludeen +9198400-02828

Hassane Marecan

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails