Wednesday, January 23, 2019

*எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்?*

முஸ்லிம்கள் ஏன்
ஹிந்துக்களிடம்
ஒட்டுவதில்லை..?

கத்தார் பழ மாணிக்கம்      விளக்கம்..!

*எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்?*

 என்பது  முஸ்லிம் அல்லாத பலரின் கேள்வி.

        இதோ என் பதில்!!

Thursday, January 10, 2019

மற்றவர்களை விட எப்போதுமே நீங்கள் மாறுபற்று இருக்கிறீர்கள் ஏன் ?.

ஒருவர், சூஃபி ஞானியான இறைநேசர் ஹஜ்ரத் இப்றாஹீம் இப்னு இல்யாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடத்தில் கேட்டார் நான் உங்களைப் பார்க்கிறேன், மற்றவர்களை விட எப்போதுமே நீங்கள் மாறுபற்று இருக்கிறீர்கள் ஏன் ?.

 நாங்கள் உங்களைப் பார்க்கிறோம் உங்கள் இறை வணக்கத்தை வைத்து உலகத்தை நீங்கள் தேடுவதும் இல்லை. மறுமையை நீங்கள் ஆசிப்பதுமில்லை. உங்கள் உண்மையான நிலைதான் என்ன ? எனக் கேட்டார் அவர்.

*இறைவன் கணக்கு:*○☆


ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள்  அமர்ந்திருந்தனர்.

இரவு நேரம்…, பெருத்த மழை வேறு...,

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்.

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

Wednesday, January 9, 2019

, இறைவனைத் தேடுவதற்கும், இறை ஞானம் பெறுவதற்கும்

நீங்கள் இறைவனை வணங்குவதற்கும், இறைவனைத் தேடுவதற்கும், இறை ஞானம் பெறுவதற்கும், இறைவனை அடைவதற்கும் உங்கள் உடல் தான் காரணம் அதற்கு உடல் வேண்டும் அதுவும் மிகச்சரியான இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் இறை வணக்கவழிபாடு மற்றும் அனைத்தும் நாசம்.

ஒவ்வொவரின் உடலும் மனமும் ஆன்மாவும் படுகின்றன அவதி ஒவ்வொருவரும் உணர்வதில்லை. மனம் ஆன்மா படுகின்றன அவதியை தான் அது தனது அவதியை  உடலில் மீது காட்டி உடல் நோய்வாய்ப்பட்டு உடல் வாழ முடியாமல் படுக்கையில் விழுந்து உடல் சாகிறது.

Thursday, January 3, 2019

இறை வணக்கத்தில் ஆர்வம் கொண்டு இறைவணக்கத்தில் மூழ்குங்கள்

வருடங்களையும் பாதங்களையும் நாட்களையும் அல்லாஹ்விற்கும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும் பாதகமான காரியங்களில்  வீணாக கழித்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிந்து நடக்கிறீகளா அல்லது புரியாமல் நடக்கிறீர்களா ?.

இல்லை எங்களுக்கு மார்க்கம் தெரியாமல் செய்கிறோம் என்று உங்களால் சொல்ல முடியாது ஏனென்றால் உங்கள் முன் இறை வேதமும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழி முறையும் மறைந்த பொருளல்ல. நீங்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம் சொல்ல.

Tuesday, January 1, 2019

மாசிலா முழுநிலவே

மாசிலா முழுநிலவே
மாநபியே முகமதுவே (ஸல்);
மாக்களென மாறிவிட்ட
மானுடத்தை மீட்டவரே!

மதிகெட்ட மக்களுக்கு
மறைவாங்கித் தந்தவரே;
மறுமையெனும் மறுவாழ்வின்
மகிமைதனை மொழிந்தவரே!
குகையிருப்பு நிகழ்ந்தவுடன்
சிலைமறுப்பு செப்பினீர்கள்;
கொலைமிரட்டல் காலங்களில்
தலைமறைவாய்ப் பொறுத்தீர்கள்!

உள்ளம் சீர்பெறுவது

உங்கள் உள்ளம் சீர்பெறுவது, உங்கள் தக்வா அதாவது இறை பயபக்தியுலும். தவக்கல் அதாவது இறை நம்பிக்கையுலும். தௌஹீது அதாவது ஏகத்துவ உணர்விலும். இக்லாஸ் அதாவது உங்களின் உண்மையான நடத்தையுலும் இருக்கிறது. இவைகளில் ஒன்று உங்கள் வாழ்க்கையில் தவறினாலும் உங்கள் உள்ளம் சீர்பெறுவது தவறிவிடும்.

உங்கள் உள்ளம் என்பது உங்கள் உடல்ல.  (உங்கள் உடலுக்குள் இருக்கும் உங்கள் கண்களுக்குத் தெரியாத நுட்பமான ஸ்தலம்)  அது கூட்டுக்குள் இருக்கும் பறவை, சிற்பிக்குள் இருக்கும் முத்து, உங்களுக்கு தேவை பறவையும் முத்துதானே தவிர கூன்டோ சிற்பியோ அல்ல

LinkWithin

Related Posts with Thumbnails