ஒருவர், சூஃபி ஞானியான இறைநேசர் ஹஜ்ரத் இப்றாஹீம் இப்னு இல்யாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடத்தில் கேட்டார் நான் உங்களைப் பார்க்கிறேன், மற்றவர்களை விட எப்போதுமே நீங்கள் மாறுபற்று இருக்கிறீர்கள் ஏன் ?.
நாங்கள் உங்களைப் பார்க்கிறோம் உங்கள் இறை வணக்கத்தை வைத்து உலகத்தை நீங்கள் தேடுவதும் இல்லை. மறுமையை நீங்கள் ஆசிப்பதுமில்லை. உங்கள் உண்மையான நிலைதான் என்ன ? எனக் கேட்டார் அவர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றால் இறைவணக்கம் புரிந்து உலக மோகங்களில் ஆசைக் கொண்டு இறைவணக்கத்தை வைத்து இந்த உலகை தேடுகிறீர்கள் தேடுங்கள். அல்லது மறுமையை வாழ்வை வெற்றியாக கொள்ளுங்கள்.
இம்மை ஒருவகையில் சுகவாழ்வு தேடுதல் என்றால் மாறுமை தள்ளி வைக்கப்பட்ட சுகவாழ்வு. இரண்டு வாழ்வின் நோக்கம் உங்கள் தன்னலம் மட்டுமே தவிர இறை திருப்தி இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் இறை வணக்கம், இறை தேடுதல், இறை ஞானம், இறை உணர்வு அனைத்தும் ஏதோவொன்றுக்காக இருந்தால் நீங்கள் தேடியது கிடைக்கும் ஆனால் உங்கள் இறைவன் உங்களுக்கு கிடைக்க மாட்டான்.
அதனால்தான் எனது வாழ்வு, இறைவணக்கம் அணைத்தும் இறைவன் "லிகா" வை அதாவது இறைவனின் சந்திப்பதை , இறைப் பொருத்தையும் மட்டுமே நோக்கி இருக்கிறது. அதனால்தான் நீங்கள் என்னிடத்தில் தேடியது உங்களுக்கு கிடைக்கவில்லை. எனக் கூறினார்கள். சூஃபி ஞானியான இறைநேசர் ஹஜ்ரத் இப்றாஹீம் இப்னு இல்யாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
(அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை.
(அல்குர்ஆன் : 6:162)
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment