Thursday, January 3, 2019

இறை வணக்கத்தில் ஆர்வம் கொண்டு இறைவணக்கத்தில் மூழ்குங்கள்

வருடங்களையும் பாதங்களையும் நாட்களையும் அல்லாஹ்விற்கும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும் பாதகமான காரியங்களில்  வீணாக கழித்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிந்து நடக்கிறீகளா அல்லது புரியாமல் நடக்கிறீர்களா ?.

இல்லை எங்களுக்கு மார்க்கம் தெரியாமல் செய்கிறோம் என்று உங்களால் சொல்ல முடியாது ஏனென்றால் உங்கள் முன் இறை வேதமும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழி முறையும் மறைந்த பொருளல்ல. நீங்கள் செய்யும் தவறுகளுக்கு காரணம் சொல்ல.


அதெப்படி உங்களால் இறை வணக்கம்  செய்ய மற்றும் மார்க்க காரியங்கள் புரிய மட்டுமே போடுபோக்கு சோம்பேறி தனம் வருகிறது அந்தளவுக்கு உங்களிடத்தில் நீங்கள் கொண்டுள்ள மார்க்கம் குறைவாகி விட்டதா என்ன ?.

மாற்றிக் கொள்ளுங்கள் இறை வணக்கத்தில் ஆர்வம் கொண்டு இறைவணக்கத்தில் மூழ்குங்கள் ஏனென்றால் இந்த உலகம் யார் வசனமும் நிரந்தரமாக இருந்ததில்லை. உங்களுக்கான இந்த உலகில் உங்கள் செயல் மட்டுமே இறைவன் உங்களை கேள்விகள் கேட்பதில்லை. மறுமையில் உங்களுக்கு, உங்கள் செயலுக்காக கேள்விகள் மட்டுமே தவிர செயல்கள் இல்லை. உங்கள் மார்க்க செயல்கள் மட்டுமே நீங்கள் உங்கள் இறைவன் முன் நிற்பதை நிற்னையம் செய்யும் என்பதை உணருங்கள்.

உங்களால் மறுமையில் இருந்து திரும்பவும் முடியாது இறைவனை வணங்கவும் முடியாது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா ?

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு உங்களை அலட்சியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். எவர்கள் அவ்வாறு செய்கிறார்களோ, அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏
நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா! நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!”

وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ وَاللّٰهُ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏
ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை. மேலும், நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருக்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 63:9,10,11)

""ஹஜ்ரத் கௌஸுல் ஆழம் முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்""
        நூல்:  பத்ஹுர் ரப்பானி

        மௌலவி கலீfபா
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
          மேலப்பாளையம்
            திருநெல்வேலி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails