உங்கள் உள்ளம் சீர்பெறுவது, உங்கள் தக்வா அதாவது இறை பயபக்தியுலும். தவக்கல் அதாவது இறை நம்பிக்கையுலும். தௌஹீது அதாவது ஏகத்துவ உணர்விலும். இக்லாஸ் அதாவது உங்களின் உண்மையான நடத்தையுலும் இருக்கிறது. இவைகளில் ஒன்று உங்கள் வாழ்க்கையில் தவறினாலும் உங்கள் உள்ளம் சீர்பெறுவது தவறிவிடும்.
உங்கள் உள்ளம் என்பது உங்கள் உடல்ல. (உங்கள் உடலுக்குள் இருக்கும் உங்கள் கண்களுக்குத் தெரியாத நுட்பமான ஸ்தலம்) அது கூட்டுக்குள் இருக்கும் பறவை, சிற்பிக்குள் இருக்கும் முத்து, உங்களுக்கு தேவை பறவையும் முத்துதானே தவிர கூன்டோ சிற்பியோ அல்ல
.
அதனால் நீங்கள் அதாவது உங்கள் உள்ளம் சீர்பெறுவது தக்வா, தவக்கல், தௌஹீத், மற்றும் இக்லாஸாக மாறாதவரை உங்கள் உங்கள் சீர்பெறாது.
وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ
(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்.
(அல்குர்ஆன் : 2:45)
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 8:2)
""ஹஜ்ரத் கௌஸுல் ஆழம் முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்""
நூல்: பத்ஹுர் ரப்பானி
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment