நீங்கள் இறைவனை வணங்குவதற்கும், இறைவனைத் தேடுவதற்கும், இறை ஞானம் பெறுவதற்கும், இறைவனை அடைவதற்கும் உங்கள் உடல் தான் காரணம் அதற்கு உடல் வேண்டும் அதுவும் மிகச்சரியான இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் இறை வணக்கவழிபாடு மற்றும் அனைத்தும் நாசம்.
ஒவ்வொவரின் உடலும் மனமும் ஆன்மாவும் படுகின்றன அவதி ஒவ்வொருவரும் உணர்வதில்லை. மனம் ஆன்மா படுகின்றன அவதியை தான் அது தனது அவதியை உடலில் மீது காட்டி உடல் நோய்வாய்ப்பட்டு உடல் வாழ முடியாமல் படுக்கையில் விழுந்து உடல் சாகிறது.
அதிகாலையில் எழுந்ததிருந்து இரவு படுக்கபோகும் வரை உடல் மனம் ஆன்மா க்கு ஒத்துவராத வாழ்க்கை, எண்ணங்கள், செயல்பாடுகள், நடத்தைகள், உணவு முறைகள், மற்றும் நீங்கள் பேசும் வார்த்தைகள், பார்க்கும் காட்சிகள், கேட்கும் சத்தங்கள், உங்களைச் சுற்றியுள்ள சுற்றுசூழல் இவைகள் அனைத்துமே உங்கள் உடல் மனம் ஆன்மாவை பாதிக்கிறது.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் நீங்கள் இரவு சீக்கிரத்தில் தூங்க வேண்டும் என்றும், தூங்குவதற்கு முன் இறை திக்ரில் இருந்து ஓதி தூங்க வேண்டும் என்றார்கள் ஆனால் நாம என்ன செய்கிறோம் இறை திக்ரு அல்லாத செயல் அதாவது இரவு நீண்ட நேரம் வரை தேவை இல்லாத பேச்சு, தேவை இல்லாத ஒலி ஒளி அதாவது டிவி பார்ப்பது இதனால் காலையில் இருந்து களைத்து போன உடல் மனம் ஆன்மா மேலும் களைத்து போகிறது. மறுநாள் காலையில் உடல் மனம் ஆன்மா சோர்வும் கவலையும் வேதனையும் நிகழ்கிறது.
ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ فَهِىَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ وَاِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَآءُ وَاِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللّٰهِ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ
இதற்குப் பின்னும் உங்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவைகளைவிடக் கடினமானவைகளாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு. (பிளந்தால்) வெடித்து அதிலிருந்து நீர் புறப்படக் கூடியவைகளும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக்கூடியவைகளும் அவற்றில் உண்டு. (ஆனால் யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
(அல்குர்ஆன் : 2:74)
சரி விஷயத்திற்கு வருவோம் உங்கள் உடலுக்கு தேவையான சக்திகள் நீங்கள் சாப்பிடும் உணவு மூலம் பெறுகிறது. ஆனால் மனம் ஆன்மாவுக்கு தேவையான சக்தி இறை திக்ரும் அமைதியும் தான்.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ
..... அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன!
(அல்குர்ஆன் : 13:28)
நீங்கள் இரவில் தூங்க போகும் முன் ஒழு செய்து விட்டு உங்கள் படுக்கையில் உக்கார்ந்து முதல் உங்களை ஆசுவாசப் படுத்தி அதாவது சமநிலைக்கு கொண்டு வாருங்கள் பிறகு இஸ்லாத்தின் மூல மந்திரமான உயர்திரு கலிம ( لا اله الا الله ) (லாஇலால இல்லலாஹ்) என்ற மந்திரத்தை உங்கள் உள்ளம் அமைதி பெறும் வரை ஓத வேண்டும். உங்கள் உள்ளம் அமைதி அடையும்போது உங்கள் தலை தூக்கத்தால் தலை சாய்த்து விழும் அப்போழுது நீங்கள் படுங்கள் உங்கள் தூக்கம் நிறைவானதாக இருந்து அதுமட்டுமல்ல மறுநாள் காலையில் உங்கள் உடல் மனம் ஆன்மா மிக சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியுடன் எதையும் செய்யும் ஆர்வத்துடன் இருக்கும்.
உங்கள் தாக்கக்கூடிய கவலை துன்பம் சோம்பல் ஏமாற்றம் வஞ்சகம் சூது வஞ்சனை சூனியம் கண்திருஷ்டி விரோதி எதிர்ப்பு அனைத்தையும் நெற்றிப் பெறக்கூடிய சக்தி கிடைக்கும்.
""உங்கள் உடல் நலமாக இருந்தால் மட்டுமே உங்கள் இறை வணக்கம் மற்றும் அனைத்தும் நலமாக இருக்கும்.""
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேல
No comments:
Post a Comment