Friday, July 20, 2012
நோன்பாளிகளே - 1
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
வல்ல அல்லாஹ்வின் அருளால் நோன்பு மாதத்தை அடைந்து நோன்பு வைத்தவர்களாக நாம் இருக்கிறோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே! (அல்ஹம்துலில்லாஹ்!) நாம் நோன்பிலும், பொதுவாகவும் கடைபிடிக்கும் காரியங்களைப் பற்றி பார்ப்போம்.
குர்ஆன்:
ரமலானின் தனிச்சிறப்பே இந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதுதான். அதனால் தினமும் குர்ஆனை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் ஓதி வாருங்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் அவசியம் ஓதுங்கள்.
Monday, July 16, 2012
ஹஜ்ஜுப் பயணிகளுக்கு உதவும் நிரலி - ஜெர்மன் அறிஞர் கண்டுபிடிப்பு
முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும், மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு உதவும் வகையிலும் புதிய திறன்பேசி பயன்பாட்டு நிரலி (Smart Phone Application) ஒன்றை ஜெர்மானிய கணினி அறிஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்ற ஹபீபுர்ரஹ்மான் தஸ்தகீரி என்னும் அந்த இளம் அறிஞர் இரு நாள்களுக்கு முன்"The Global Post" நாளிதழுக்கு அளித்த செய்தியில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். "ஹஜ்ஜுக் காலத்தில் யாத்ரிகர்களுக்கு வழியறிய உதவுவதாகவும், மார்க்கக் கடமைகளை நினைவூட்டக் கூடியதாகவும் கருவியொன்று வடிவமைக்க விரும்பினேன்" என்றார் அவர். [ஆங்கிலத்தில் இச்செய்தியை வாசிக்க: http://www.satyamargam.com/1950]
"கடந்த 2006 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் உம்ரா செய்ய வாய்ப்பு கிடைத்த போதிலிருந்து இது பற்றி சிந்தித்து வந்துள்ளேன்".தனது பயன்பாட்டு நிரலிக்கு "அமீர்" என்று பெயர் சூட்டியுள்ளார் ஹபீபுர் ரஹ்மான். பொதுவாக, ஒரு பயணத்தில், இயக்கத்தில் தலைமைத் தாங்கிச் செல்பவருக்கு அரபுமொழியில் 'அமீர்' என்று கூறுவார்கள். (இந்த நிரலிக்கான சுட்டி: http://itunes.apple.com/tw/app/amir-personal-hajj-assistant/id473935680?mt=8)
உம்ரா, ஹஜ் ஆகிய புனிதக் கிரியைகளின் போது, தங்கியிருக்கும் இடம் திரும்புவதில் புனிதப் பயணிகள் படும் சிரமத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஹபீபுர் ரஹ்மான், "நாங்கள் எங்களை நன்கு தயார்படுத்திக்கொண்டிருந்தோம்; அப்படியிருந்தும் தங்கியிருந்த இடத்தை அடைவதில் சிரமம் கண்டோம்" என்று நினைவு கூர்ந்தார்.
ஆஃப்கானிஸ்தானத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹபீபுர் ரஹ்மான், பெற்றோர் தம் ஜெர்மானிய குடியமர்வுக்குப் பின்னர் மெய்ன்ஸ் நகரில் பிறந்தவர்.
அமீர் என்கிற இப்புதிய நிரலியின் மூலம், கலந்துரையாடலாக ஹஜ்ஜு, மற்றும் உம்ரா கிரியைகளின் சரிபார்ப்புப் பட்டியலையும் காணமுடியும்.
Labels:
உதவும் நிரலி . உம்ரா,
செய்திகள்,
ஹஜ்ஜுப் பயணிகளுக்கு
Sunday, July 15, 2012
வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி
பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!
ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, நாட்களையும் நேரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து சிறிதளவும் மாறிவிடக்கூடாது என்கிற எண்ண ஓட்டம் சில நேரங்களில் பாதிப்புக்கும் உள்ளாகிறது. என்னதான் நம்மை நம் வழியிலேயே வைத்துக் கொண்டு, சமூகத்திற்கு முற்றிலும் பயனுள்ள வகையில் பணிகள், எழுத்துக்கள், பேச்சுக்கள் என்று அனைத்தையும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாலும் நம்மை நோக்கி வருகிற சிற்சில இடையூறுகளைச் சந்திக்காமல் இருக்கவும் முடிவதில்லை. இதனால் நம்முடைய சிந்தனை ஓட்டம் பாதிப்படைவதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் உலகில் வாழ்கிற குறுகிய இக்காலக்கட்டத்தில் செலவு செய்கிற செல்வத்திற்கு மாத்திரமல்ல; செலவு செய்கிற நேரம், உழைப்பு, உதவிகள் என்று எல்லாவற்றிற்கும் வல்ல இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே என்கிற கவலை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருந்தே ஆக வேண்டுமல்லவா!
அதனால்தான் ஒழுக்கம், கல்வி என்பதோடு இறையச்சம், தொழுகை, நற்பண்புகள், நற்செயல்கள் என ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல முஸ்லிமாக வாழவேண்டும் என்பதை நாம் கடமையாக எண்ணுகிறோம். இதே சிந்தனையில்தான் சமூகப் பணி, அரசியல் என்று வருகிறபோது கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழிநின்று தாய்ச்சபை முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதை அந்தக் கடமையின் அங்கமாகக் கருதி பணியாற்றுகிறோம்.
நடைமுறை அரசியல்பாணி என்பது சில நேரங்களில் நமக்கு கசப்புணர்வாகத் தென்படுவதையும் இல்லை எனச் சொல்ல முடியாது. அப்படி என்ன கசப்பு? நமது சமுதாயத்தில் நாங்களும் பணியாற்றுகிறோம் எனச் சொல்லி புதுப்புது அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டு தனித்தனி அமைப்புகளாகச் செயல்படுபவர்களே நம்மைச் சீண்டுவதும், கீழான விமர்சனங்கள் செய்வதும், தவறான தகவல்களைத் தந்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுமான காரியங்களில் ஈடுபடுவதைத்தான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விழைகிறேன். நம்மைச் சீண்டுவதையோ, கீழான விமர்சனங்கள் செய்வதையோ நாம் பொருட் படுத்துவதுமில்லை; அதற்காக பதில் சொல்ல வேண்டுமே என்று நேரம் ஒதுக்கி தரம் தாழ்ந்து விடுவதுமில்லை. ஆனால், சமுதாயத்திற்குத் தவறான தகவல்கள் தந்து குழப்பங்களை உருவாக்குகிறபோது நாம் அமைதியாக இருந்துவிடவும் கூடாது. காரணம், மக்களுக்குத் தெளிவான பாதையைக் காட்டித் தந்து, அரசியல் தளத்தில் சமுதாயத்தின் கண்ணியத்தை நிலைநாட்டுவது நமது கடமை என நினைக்கிறோம். அந்தப் பார்வையில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டு நம்முடைய இதழில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என எண்ணுகிறோம்.

ஆக்கப்பூர்வமான பணி,
இறையச்சம்,
தொலைக்காட்சி
Friday, July 13, 2012
மார்க்கத்தை பிரித்தாலும் சூழ்ச்சி! (வீடியோ இணைப்புடன்)
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.(குர்ஆன்-1:5) It is You we worship and You we ask for help.
அல்லாஹ் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் உயிரோடிருப்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். அவனை சிறுதுயிலோஇ உறக்கமோ பீடிக்கா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியது. (அல்குர்ஆன் 2:255)
அன்பானவர்களே! தங்களை “சுன்னத் வல் ஜமாத்” என்று அறிவிப்பு செய்யும் சிலர் இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்துக்கு விரோதமான அனாச்சரங்களை, கபுரு வணக்கத்தை, யூதர்கள் இஸ்லாத்தில் புகுத்திய மீலாது விழாக்களை, மவ்லீதுகளை இன்று இஸ்லாத்தின் பெயரால் நபி வழி என்றும், நபியை புகழ்கிறோம் என்றும் தாயத்து, தட்டு, நூல் முடிதல் என்று அனைத்து ஷிர்க்கான செயல்களையும் செய்து கொண்டு தங்களை “சுன்னத்வல்ஜமாத்” என்று கூறும் இவர்கள் இன்று தமிழகத்திலும் கால் பதித்து வருகிறார்கள்.
இவர்களை நாம் இன்று தலைவர்களாகவும் ஏற்க முயல்கின்றோம் . தனக்காக எழுந்து நிற்பதை கூட அல்லாஹ்வின் தூதர் அனுமதிக்க வில்லை. ஆனால் இவருக்காக இஸ்லாத்தில் இல்லாத மரியாதைகள் அளிக்கப்படுகிறது. வீண் ஆடம்பரம், அவர்களை தொட்டு முத்தமிடுதல் கார், பவணி என்று அனேக அனாச்சாரங்கள் அவர்களின் உண்மை நிலையை அடையாளம் காட்டுகிறது.
இவர்களுக்கும் நபி(ஸ்ல்)அவர்களின் சுன்னத்துக்கும் என்ன சம்மந்தம்? நபியுடையை மார்கத்திற்கு மாற்றமாக செய்யும் இவர்களின் அனைத்து செயலும் நபியுடைய சுன்னததை சார்ந்ததாக இல்லை, இவைகள் காதியானிகள், ஷியாக்கள் இஸ்லாத்தின் பெயரால் புகுத்திய பித்அத்கள் ஆகும். இஸ்லாம் எதை ஒழிக்க வந்ததோ அதை மார்க்கம் என்று இன்று போதித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இவர்களை சரியாக அடையாளம காட்டுகிறது இந்த மௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை.(தலைப்பு :முஸ்ளி யார்? ) இதை திறந்த மனதுடன் கேட்டு நாம் நன்கு விளங்கி உண்மையான மூஃமின்களாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
Source : http://niduri.com/?p=776#comment-101
Labels:
இஸ்லாம்,
பிரித்தாலும் சூழ்ச்சி,
மார்க்கம்,
வீடியோ
ரமளானும் அதன் சிறப்புகளும் - S. ALAUDEEN
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும் புனித மாதத்தை வரவேற்பதில் மிக அதிக அளவில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் சில தினங்களில் நம்மை வந்து அடைய இருக்கும் ரமளானைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)
நோன்பு சென்று போன சமூகத்தாருக்கும் கடமையாகி ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பை கடமையாக்கி இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.
ரமளான் பிறை:
'ரமளான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி : 1906)
அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:
'ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி: 1898).
'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி :1899).
நோன்பும் உள்ளமும்:
நோன்பு பசியை உணரச்செய்கிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவும் எண்ணத்தை தாராளமாக வழங்குகிறது. மற்ற நேரங்களில் உதவும் எண்ணம் இல்லாதவர்கள் கூட நோன்பு காலங்களில் பிறருக்கு உதவி செய்யும் நிலைகளை காணமுடிகிறது.
எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும். மற்ற நேரங்களில் மனிதர்கள் பல தவறுகளில் இருந்தாலும் நோன்புக் காலங்களில் எல்லாவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்கள். இப்படியே தொடர்ந்து கொண்டு இருப்பதால் (வருடா வருடம் நோன்பு வைப்பதால்) இறையச்சத்துடன் நோன்பு வைத்தவர்களின் கஞ்சத்தனம், தீய செயல்கள் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விட்டு அகன்று உள்ளத்தை தூய்மைபடுத்தி நல்லபழக்கத்தை கற்றுத்ததருகிறது புனித ரமளான் நோன்பு.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும் புனித மாதத்தை வரவேற்பதில் மிக அதிக அளவில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் சில தினங்களில் நம்மை வந்து அடைய இருக்கும் ரமளானைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)
நோன்பு சென்று போன சமூகத்தாருக்கும் கடமையாகி ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பை கடமையாக்கி இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.
ரமளான் பிறை:
'ரமளான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி : 1906)
அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:
'ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி: 1898).
'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி :1899).
நோன்பும் உள்ளமும்:
நோன்பு பசியை உணரச்செய்கிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவும் எண்ணத்தை தாராளமாக வழங்குகிறது. மற்ற நேரங்களில் உதவும் எண்ணம் இல்லாதவர்கள் கூட நோன்பு காலங்களில் பிறருக்கு உதவி செய்யும் நிலைகளை காணமுடிகிறது.
எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும். மற்ற நேரங்களில் மனிதர்கள் பல தவறுகளில் இருந்தாலும் நோன்புக் காலங்களில் எல்லாவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்கள். இப்படியே தொடர்ந்து கொண்டு இருப்பதால் (வருடா வருடம் நோன்பு வைப்பதால்) இறையச்சத்துடன் நோன்பு வைத்தவர்களின் கஞ்சத்தனம், தீய செயல்கள் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விட்டு அகன்று உள்ளத்தை தூய்மைபடுத்தி நல்லபழக்கத்தை கற்றுத்ததருகிறது புனித ரமளான் நோன்பு.
Thursday, July 12, 2012
நிவாரணம் செய்வதின் வழியே ஒரு மாற்றத்தை உண்டாக்குங்கள்
உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்வில் நிவாரணம் செய்வதின் வழியே ஒரு மாற்றத்தை உண்டாக்குங்கள்.
நமக்கு தேவையானவைகளை நாம் உழைத்து சம்பாதித்து அதனால் கிடைக்கும் பணத்தினைக் கொண்டு நாம் உண்டு வாழ்கின்றோம். உண்பதற்காக வாழ்வதில்லை. வாழ்வதற்காக உண்கின்றோம். நாம் உணவு சமைக்கும் போது நமக்கு தேவையான அளவிற்கு மட்டும் சமைக்கின்றோம். அதிகமாக சமைத்து விரயம் செய்ய யாரும் விரும்புவதில்லை. திருமணம் விழாவில் சமைக்கும் உணவு பணக்காரர்களுக்கும்,உறவினர்களுக்கும் கொடுக்கப்படுகின்றது. அங்கு பசியால் வாடும் ஒருவர் வந்தால் மீதம் இருந்தால் இறுதியில் கொடுக்கின்றோம். ஆனால் அது மீதம் வந்ததால் கொடுக்கப் படுகின்றது. அவர்களையும் ஒரு விருந்தாளியாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. தர்மம் நம் வீட்டிலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்பது உண்மைதான். அதிகமாக இருப்பதனை விரயம் செய்யாமல் மற்றவருக்கும் மன மகிழ்வோடு கொடுப்பதில் ஒரு பெரிய நன்மையும் ஆத்ம திருப்தியும் உண்டாவதனை அனுபவிக்கும்போதுதான் அதன் அருமை தெரிய வரும், நோன்பு காலம் வந்து விட்டது அந்த காலத்தில் முஸ்லிம்கள் பிச்சைப் போடுவதுபோல் செய்து விட்டு அதனையும் தர்ம கணக்கில் சேர்த்துக் கொள்ள விரும்புவார்கள். உண்மையான தர்மம் உள்ளத்திலிருந்து வர வேண்டும். அதற்கு விரயம் செய்வதை தவிர்ப்பது முக்கியமாக உள்ளது. பள்ளிவாசலில் தேவைக்கு அதிகமாக நோன்புக் கஞ்சிக் காட்சி அதனை தேவையற்றோர் வாங்கிச் சென்று விரயம் செய்வதனை எங்கும் பார்க்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்..) அவர்கள் கூறினார்கள்: 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'.
நூல்: ஸஹீஹ் புஹாரி - 7376
Thursday, July 5, 2012
மூன்று செய்திகள்
மூன்று செய்திகள்:
-முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி.
அல்லாஹ்வின் தூதர் மனித சமூகத்திற்கு வழங்கிய நற்போதனைகள் ஏராளம் ஏராளம். அவைகளில் மூன்று விடயங்களாக இடம்பெற்ற செய்திகளுல் சில செய்திகளை மாத்திரம் இங்கு தொகுத்துள்ளேன். இதிலுள்ள செய்திகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமென்பதையே நான் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன்.
ஈமானின் உண்மையான சுவையை கண்டுகொண்டவர்:
“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை)
-முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி.அல்லாஹ்வின் தூதர் மனித சமூகத்திற்கு வழங்கிய நற்போதனைகள் ஏராளம் ஏராளம். அவைகளில் மூன்று விடயங்களாக இடம்பெற்ற செய்திகளுல் சில செய்திகளை மாத்திரம் இங்கு தொகுத்துள்ளேன். இதிலுள்ள செய்திகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமென்பதையே நான் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன்.
ஈமானின் உண்மையான சுவையை கண்டுகொண்டவர்:
“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை)
- அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது,
- ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
- நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).
Labels:
பாவங்கள். சமுதாயம்,
மஸ்ஜிதுகள்,
மார்கக் கல்வி
Subscribe to:
Posts (Atom)