Wednesday, June 15, 2016

யாவருக்கும் இந்த மாதம் ..6 மணி நேர வேலை தான் இங்கே


Iskandar Barak

வெயில் ....
மதியம் 12 மணி கத்தார் டைம் சைட்விசிட் போயிட்டு கொஞ்ச வேலயிருந்தது முடிச்சிட்டு கிரான்மால் போயிட்டு வரும் வழியில் பார்த்தால்....46 சி காட்டுது ...யப்பா கார்ல புல் ஏசியிலயே உள்ள உட்கார முடியல வெளி வெயிலின் தாக்கம் தெரியுது ...பட்
நோன்பு இதனால் எந்த அசைவையும் நமக்கு தரவில்லை தான் .............இருந்தாலும்

என்னவோ தெரியவில்லை...

எனது நண்பர்கள் நல்லவர்கள்.
இது என் கதையல்ல.
யாரையோ சொல்வதற்கு பதில் என்னையே சொல்லி இருக்கிறேன்.
கதையின் கரு...
ஏழைகளை அவமதிக்கக் கூடாது என்பதுதான்.
-------Abu Haashima


என்னவோ தெரியவில்லை...
திடீரென்று ஒரு செலவு வந்து விட்டது.
அவசரமாக பத்தாயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது.
அவ்வளவு பணம் புரட்டும் நிலையில் நான் இல்லை.
பணம்தான் என்னிடம் இல்லையே தவிர நிறைய நண்பர்கள் உறவினர்கள் இருந்தார்கள்.
ரொம்ப அன்னியோன்யமாகப் பழகும் சில நண்பர்கள் எப்போதும் என் மனக் கஷ்டங்களை கேட்டு ஆறுதலும் சொல்வார்கள்.
தைரியமான வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டுவார்கள்.
அவர்களில் சிலர் வசதிமிக்கவர்கள்.
உறவினர்களிடம் கேட்பதைவிட நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்தேன்.
நிச்சயமாக உதவுவார்கள் என்று நம்பிக்கையோடு சாலமதிடம் கேட்கலாமா என்று யோசித்தேன் .
பத்தாயிரம் கேட்டால் அவன் மனது சங்கடப்படுமோ என நினைத்து
சாலமதிடம் ஐயாயிரமும் இஸ்மாயிலிடம் ஐயாயிரமும் கேட்பது என்று தீர்மானித்தேன்.
வழக்கம்போல் அன்னைக்கு காலையில் வாக்கிங் முடிச்சுட்டு சாயாக்கடை பக்கம் வந்தான் சாலமது.
என்னிடம் எப்போதும்போல் உற்சாகமாக பேசினான். அவன் வீட்டுக்கு கிளம்பும்போது ...

Tuesday, June 14, 2016

*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:*


*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:*

_சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுஹானல்லாஹில் அளீம்_

பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன். கண்ணியமிக்க
அல்லாஹ்வை துதிக்கின்றேன்.

*_சிறப்பு:மீசான் தராசில்அதிக கனமுள்ளது. நூல்:புகாரி. 66820._*

_2. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி_

பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன்.

_*சிறப்பு:கடலின் நுரை அளவு பாவங்கள் மன்னிக்கப்படும். நூல்புகாரி: 6405*_

Saturday, June 11, 2016

புனித மாதத்திலுமா..

Malikka Farook

புனித மாதத்திலுமா
புலக்கடையில் புழக்கம்
தீமைகளை தூண்டுவிடும்
வதந்திப்பெட்டியோடு பழக்கம்..

புண்ணாக்குகள் விற்பதற்க்கும்
புதிய யுக்தியாய்
பெண்ணாடைக்குறைப்பு
விளம்பரங்கள்..
ஆகா நிகழ்ச்சிகளைக்கண்டு
அழுது வடியும்
நேரத்தில் தொழுது வணங்குங்கள்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..

ஆளாளுக்கு சொல்லும்
மார்க்கவுரைகளையும்
மனதை திசை திருப்பயெண்ணுவதெல்லாதினையும்
அமத்திப் போடுங்கள்..

Wednesday, June 8, 2016

மனிதம் மதிக்கத்தக்கவை


Iskandar Barak
இன்று நடந்தது .....மதியம் ஹெட்ஆபீஸ் போகலாமென போகிற வழியில் ஹெட்ஆபீஸ் அருகில் லுஹர் மதியத்தொழுகைக்கு நேரமாகிவிட்டதால் ....அங்கே ஒரு கத்தர்காரர் வீட்டில் வேலை செய்யும் நண்பரோடு தொழுக போனேன் ....தொழுது முடித்து உட்கார்ந்திருக்கும் போது
எங்களுக்கு முன் வரிசையிலியிருந்து தொழுதுவிட்டு வந்த ஒரு கத்தர் அரபியை கண்டதும் இந்த நண்பர் எழுந்து கைகொடுக்க முயற்சித்தபோது அவரோ இவரை வேண்டாம் உட்காரென தோளை பிடித்து உட்காரவைத்து விட்டு இவரிடம் சகஜமாய் கை கொடுத்தும் தெரியாத என்னிடமும் கைகொடுத்து
கைபஹாலுக்
ரமளான் கரீம் குல்லுசனா அன்துல் பில்ஹைர் ..னு
சொல்லிட்டு சந்தோஷமா புன்னகைத்து போனார்

Sunday, June 5, 2016

மகத்தான ரமலான் நோன்புக்காலம் ...

மகத்தான ரமலான் நோன்புக்காலம் ...
J Banu Haroon
================================
தனித்திருக்கும் வேளை ....
பசித்திருக்கும் வேளை ...
விழித்திருக்கும் வேளை ...
---- நோன்பின் காலங்கள் ...
கூட்டமாக பெண்களின் ...
பள்ளித் தொழுகைகள் ...
இளசுகளின் பைக் உறுமல்கள் ...
---- தராவிஹ் இரவுகள் ...

அத்தனை பேருமே மதிக்கும் மாண்பான செயல் நோன்பு.

Iskandar Barak


இன்று ...அரப் நாட்டை பொறுத்தவரை அரபிய மாதமான ஷஃபான் மாத பிறை 29 ம் நாள்
இரவு 30 வது நாளை எதிர்நோக்கும் இரவென்பதால் இந்த இரவுக்குப்பெயர்
யவ்முஷ் ஷக் .....அதாவது
விடியும் நாள் இதே ஷஃபான் மாத 30 ம் நாளா அல்லது அடுத்த மாதமான ரமளான் மாத முதல் நாளா யென்ற சந்தேகமிருப்பதால் இதற்கு சநதேகத்திற்குரிய இரவு சந்தேகத்திறகுரிய நாள் யென அழப்பதுண்டு....காரணம்

அரபி தேதியில் 31 யென்பதே கிடையாது ...29 ம் 30 மாகவே மாதங்கள் முடிவடைவதால்
ஆங்கில தேதியின் கணக்குப்படி வருடத்திற்கு 11 நாட்கள் குறைவாகவே வருகிறது ..............ஆகவே
இன்று இரவு 99 சதவீத நண்பர்களின் எண்ணப்படி ..பிறை பார்க்கப்பட்டு முதல் நோன்பு வைப்பதற்குரிய ரமளான் முதல் நாள் வாய்ப்பே அதிகமென படுகிறது

LinkWithin

Related Posts with Thumbnails