Sunday, June 5, 2016

மகத்தான ரமலான் நோன்புக்காலம் ...

மகத்தான ரமலான் நோன்புக்காலம் ...
J Banu Haroon
================================
தனித்திருக்கும் வேளை ....
பசித்திருக்கும் வேளை ...
விழித்திருக்கும் வேளை ...
---- நோன்பின் காலங்கள் ...
கூட்டமாக பெண்களின் ...
பள்ளித் தொழுகைகள் ...
இளசுகளின் பைக் உறுமல்கள் ...
---- தராவிஹ் இரவுகள் ...

ஆண்களின் அணிவகுப்புகள் ...
அவரவர் தொழுகைகள் ...
கூடுதல் ,குறைத்தல்கள் ...
----- பள்ளிகள் நிறைதல் ...
இரவுகளின் விடியல்கள் ....
வெளிச்சமும் இறை மணமும் ...
புசிக்கும் நிறை உணர்வும் ....
---- சஹர் நேரங்கள் ....
பஜ்ர் தொழுத பின் ...
சூரியன் உதிக்கும் நேரம் ...
சுகமான உறக்க மயக்கம் ....
----- நோன்பு நாளின் தொடக்கம் ...
அடுத்தடுத்த தொழுகை நேரம் ...
காத்திருக்கும் பணிகள்....
எப்போதும்போல் தேனியாக ...
----- வருடத்திற்கொரு மாதம் ...
முஸ்லிம்கள் இப்படித்தான் ...
மூச்சில் பயணிக்கும் வாழ்க்கை ...
மறுமை நோக்கிய பயணம் ....
---- ஜே .பானு ஹாரூன்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails