Iskandar Barak
இன்று நடந்தது .....மதியம் ஹெட்ஆபீஸ் போகலாமென போகிற வழியில் ஹெட்ஆபீஸ் அருகில் லுஹர் மதியத்தொழுகைக்கு நேரமாகிவிட்டதால் ....அங்கே ஒரு கத்தர்காரர் வீட்டில் வேலை செய்யும் நண்பரோடு தொழுக போனேன் ....தொழுது முடித்து உட்கார்ந்திருக்கும் போதுஎங்களுக்கு முன் வரிசையிலியிருந்து தொழுதுவிட்டு வந்த ஒரு கத்தர் அரபியை கண்டதும் இந்த நண்பர் எழுந்து கைகொடுக்க முயற்சித்தபோது அவரோ இவரை வேண்டாம் உட்காரென தோளை பிடித்து உட்காரவைத்து விட்டு இவரிடம் சகஜமாய் கை கொடுத்தும் தெரியாத என்னிடமும் கைகொடுத்து
கைபஹாலுக்
ரமளான் கரீம் குல்லுசனா அன்துல் பில்ஹைர் ..னு
சொல்லிட்டு சந்தோஷமா புன்னகைத்து போனார்
சுன்னத் தொழுதுட்டு வெளிய வந்தபோது இந்த நண்பர் என்கிட்ட கேட்டார்
நமக்கு கை கொடுத்தாரே அந்த அரபி யார் தெரியுமானு
தெரியல தஸ்தீக் யார் அவர் ...னு கேட்டேன்
அவர் தான் என் வீட்டு முதலாளி ..என் கபீல் அவர் மக்களுக்கு தான் நான் கார் ஓட்ரேன் ....னு சொன்னபோது
அப்படியே அசந்துட்டேன் .........மனிதம்
தலைக்கனத்தில் வாழ்வதில்லை ...மாறாக தலை தாழ்த்திலே தான் வாழ்கிறதென்பதை சற்று நேரத்தில் காட்டிச்சென்றவர் அந்த மாமனிதர்.....ஆம்
வீட்டிலும் எப்போதும் இதே மாதிரி தான் அவரென சொன்னார் தஸ்தீக்.
மதிப்போம் மனிதத்தை ...மதிப்பை பெறுவோம்
No comments:
Post a Comment