கடையாலுமூடுக்கு போகும் வழியில் பல ஊர்கள்.
அவையெல்லாம் பாரதிய ஜனதா செல்வாக்கு பெற்ற ஊர்கள். சாலைகளில் நாம் பார்க்கும் பலரும் காவி வேட்டி அணிந்தபடிதான் காட்சி தருவார்கள்.
சாலை இரண்டாக பிரியும் ஒரு இடத்தில் சிலர் ஓரமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள்.... நான் சொன்ன அடையாளங்களோடு.
தயங்கித் தயங்கி அவர்களிடம் கேட்டேன் ...
கடையாலுமூடுக்கு எப்படி போக வேண்டுமென்று .
நான் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக மிக பவ்யமாக ..
" பள்ளிவாசலுக்கா பாய் ? ஒரு முக்கால் கிலோ மீட்டர் நேரே போய் வலது பக்கமா போங்க பாய் " அப்படின்னு ரொம்ப மரியாதையா சொன்னாங்க.
கொஞ்ச தூரம் வந்ததும் மீண்டும் ஒரு திருப்பம்.
கடையாலுமூடு பக்கம் போகாமல் வலது பக்கம் திரும்பியதும் சந்தேகம் வந்து ஒரு இந்து கடைக்காரரிடம் கேட்டேன்.
அவர் கடையைவிட்டு கீழே இறங்கி வந்து ...
" நோன்பு திறக்கப் போறீங்களா ? நேரம் ஆகிப்போச்சே " என்றபடி பக்கத்தில் கையைக் காட்டி " இந்தப் பக்கம் போங்க. அங்கதான் பள்ளிவாசல் இருக்கு " என்றார். அவர் சொல்லவும் பாங்கு சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
ஒரு பெரிய நன்மை செய்த பூரிப்பு அந்த பெரிய மனிதர் முகத்தில் ஏற்படுவதைப் பார்த்தேன்.
மனதுக்கு மகிழ்வும் நம்பிக்கையும் ஏற்பட்டது.
மனிதம் இன்னும் மரிக்கவில்லைஎன்று !
Abu Haashima
No comments:
Post a Comment