Thursday, June 16, 2016

உனக்கே புகழ் யாஅல்லாஹ்

உனக்கே புகழ் யாஅல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ் யாரஹ்மானே - என்
மனதில் நிறைந்து வாழ்பவனே !
தொழுது பிராத்தனை செய்தாலும் - ஒர் 
அடியானாய் என்னை மதிப்பவனே !
நோன்பை தந்து எனக்காக - தன்
சுவர்க்கக் கதவை திறப்பவனே !
தராவிஹ் தொழுகை தவத்தாலே -தன்
சுவர்க்க வழியை காட்டுபவனே !
மனமோ பாவத்தை செய்யாமல் - என்
கல்பை காப்பாற்றும் வல்லவனே !

பொறுமையாய் இருக்கும் என்மீது - நல்ல
ரஹ்மத் மழை பொழிபவனே !
வரம் பெற்ற பிறப்பினில் - உன் 
குர்ஆனை கற்றுத் தந்தவனே !
உண்மை முஸ்லிமாய் வாழ்வதற்கு - உறுதியான 
ஈமானை தந்து காப்பவனே !
இன்னும் உன்னை நினைத்து - இவள் 
வாழ்வதற்கு இல்மை தந்தவனே!
அமலுக்குள் என்னை உட்படுத்தி - அதில்
சந்தோசத்தை வரமாய் தந்தவனே !

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails