இஸ்லாத்தில் துறவறம் இல்லை. மணம் செய்து கொள்வது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். திருக்குர்ஆனும் இதை வலியுறுத்துகின்றது.
திருமணம் செய்தல் என் வாழ்க்கை
வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர்
என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
திருமணத்தின்
நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று
பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன்
நோக்கமாகும். அன்பு மலர்களால் ஆழ்ந்த பூந்தோட்டம் என்னும் திருமணத்தை
தம்பதிகள் தங்களது சுயநலம் காரணமாக போர்க்களமாக ஆக்கிவிடுகிறார்கள்.
திருமணம் என்பது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவன் மற்றும் மனைவியாக இணைந்து வாழ செய்துக் கொள்ளும் ஒப்பந்தமாக உள்ளது. திருமணம் இருவருக்கும் பொறுப்புகளை உள்ளடங்கியதாக உள்ளது . இந்த பொறுப்புகளை கணவன் மற்றும் மனைவி ஒழுங்கான முறையில் சரியாக கடைபிடிப்பதில் திருமண வாழ்வில் மகிழ்வு இருக்கும் . பிரச்சினை இல்லாத காரியங்கள் எதுவுமில்லை. அது திருமண வாழ்விலும் ஏற்படலாம். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை விட்டுக் கொடுக்கும் மனதோடு பேசித் தீர்க்க வேண்டும், இல்லையென்றால் அது விவாகரத்தில் போய் முடியும்.
ஒருவருக்கொருவர் இடையே வெறுப்பு வளர்க்கும் பண்பினை விட்டொழிக்க வேண்டும். வெறுப்பு நமக்கு மன அழுத்தத்தை மற்றும் துயரத்தினை தூண்டுகிறது. எந்த ஒரு மனிதனும் அல்லது பெண்ணும் முழுமையாக குறையற்றவராக இந்த உலகில் படைக்கப் படவில்லை. எல்லோரிடமும் பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றது. தவறு செய்யும்
போது இறைவனிடம் மனமுருகி மன்னிப்புத் தேடி திருந்திக் கொள்ள வேண்டும் செய்த தவறுகளை தானே விளம்பரம் செய்ய முயலக் கூடாது. இறைவன் மறைத்ததை நாம் ஏன் மற்றவரிடம் சொல்ல வேண்டும்? கெட்ட
குணங்கள் இல்லாமல் உலகில் யாரையும் பார்க்க முடியாது.
அல்லாஹ் நம்மை சோதனை படுத்தும் போது அதை பொறுமையோடு ஏற்றுக் கொண்டு அதற்கு இறை வணக்கமே ஒரு சிறந்த வழிவகையாக உள்ளன. பிரார்த்தனை மிக்க சக்தி வாய்ந்தது.
ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவியரிடையே சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக
கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. சிந்திக்கத் திறனில்லாமை, ஆத்மீகப்
பயிற்சியில்லாமை போன்ற காரணங்களினால் விவாகரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
இருவரிடமும்
பலவீனங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் ஒருவருக்கொருவர் நம் பலவீனங்களை
அறிந்து அதனை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நல் வாழ்வு
வாழ வேண்டும். அனைத்து சூழ்நிலைகளிலும் பொறுமையை கையாள வேண்டும் . அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிந்து திருமண பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.அல்லது குறைந்த பட்சம் அமைதியாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் நமது பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று நினைக்க வேண்டும். அல்லாஹ்வை தவிர பிரச்சினைகளை தீர்க்க உதவ யாரும் இல்லை என்று நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
விவாகரத்து ஒரு முடிவல்ல. இந்த பலவீனமான 'இமான்' இறை நம்பிக்கைதான் முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்து வழக்குகளின்
எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
தகுந்த
காரணமின்றி விவாகரத்து கேட்கும் ஒரு பெண் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர
முடியாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியிருக்கிறார்கள். பெண்களுடைய உரிமை சம்பந்தமாக எழும் வழக்குகளைத்
தீர்ப்பதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பெண் நீதிபதி இருக்க வேண்டும்
என்று இமாம் அபூஹனீபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
கைக்கூலிக்கு
ஆசைப்பட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மீண்டும் கைக்கூலி
பெறுவதற்காகவே, தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒரு பெண்ணை
திருமணம் செய்ய விரும்பும் கயவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். படித்த இளைஞர்களும் பணத்திற்காக விலைப்போகும் கொடுமை இந்த நாட்டில் அதிகமாகி வருவது வேதனைக்குரியது.
No comments:
Post a Comment