உலமா ஓய்வூதியத் தொகையை ரூ. 750லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தி உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஜமாத்தின் செயலாளர் ஆர். ரஹ்மதுல்லாஹ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உலமாக்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளதற்கும் ஹஜ் பயணிகளுக்கான மானியத் தொகையை 10 இலட்சத்திலிருந்து 20 இலட்சமாக உயர்த்தியுள்ளதற்கும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
Source : http://www.inneram.com

No comments:
Post a Comment