இருள வந்தது மழை
விடிந்து வருவதற்குள்
முடிந்து போனது
பெய்த மழையை அளவிட
மழைமானி தேவையில்லை
விழுந்த துளிகளை
எடுத்து
எண்ணியே சொல்லிவிடலாம்
இத்தனை மழையென்று
இருப்பினும்
சம்பள நாளைவிட
சந்தோஷமானது
அமீரகத்தில் மழை
இடி மின்னல் என்னும்
வன்முறை அற்ற
அகிம்சையானது
அமீரகத்தில் மழை
சபுராளிகளுக்கு
வயிறார உண்டசுகம்
சற்றுநேரமேயெனினும்
அமீரகத்தில் மழை!
sabeer.abushahruk சொன்னது…
http://adirainirubar.blogspot.in
அமீரகத்தில் மழையே மழை அதுசமயம் நான் எடுத்த வீடியோ உங்களுக்காக!
Rafeeq Sulaiman



No comments:
Post a Comment