Saturday, December 15, 2012

மனிதருள் மாணிக்கம்’

(படத்தில் - லால்பேட்டை மர்ஹூம் ந.ப. முகம்மது இப்ராஹீம் ஹஜ்ரத் முன்னாள் நீடூர் -நெய்வாசல் மிஸ்பாகுல் ஹுதா முதல்வர் மற்றும் மர்ஹூம் சல்லல்லாஹ் பாவா அவர்கள்)
இருவரும் எங்கள் தந்தைக்கு மிகவும் வேண்டியவர்கள் . எங்கள் தந்தை Hajee.S.E.Abdul Kader sahib அவர்கள் இறந்த செய்தி கேள்விப்பட்டு வந்த சல்லல்லாஹ் பாவா உடல் நலம் குன்றி ஒரு மாதம் சென்ற பின் அவர்களும் எங்கள் ஊரிலேயே இறந்து விட்டார்கள்

இறைவன் படைப்பினில் மனிதன் சிறப்புள்ளவன்.  அத்தகைய மனிதரில் ஒரு சிலரே மாணிக்கங்களாகத் திகழ்கின்றனர்.  இறைவனடி எய்திய நாஜிர் N.P.முகம்மது இப்ராகிம் ஹஜ்ரத் . அவர்கள் அப்படியொரு மாணிக்கமாகத் திகழ்ந்தவர்கள்.  இஸ்லாமிய உலகம் மறக்க முடியாத மாபெரும் மேதைகளில் ஒருவராக அவர்களைப் போற்றினாலும் மிகையாகாது.  அந்த அளவுக்கு தன்னலத்தைத் துறந்து மார்க்கக் கல்விக்காக அல்லும் பகலும் பாடுபட்டிருக்கிறார்கள்.

எங்கள் குடும்பத்துக்கு அவர்கள் மிகவும் பழக்கமுண்டு.  ‘பாவா, பாவா’ என்று தான் எங்கள் வீட்டு குழந்தைகள் அவர்களைப் பிரியமுடன் அழைப்பார்கள்.  எங்கள் குடும்ப அங்கத்தினர்களில் ஒருவராகவே அவர்களை நாங்கள் மதித்தோம்.  ஆதனால் தான் அவர்களுடைய சிறப்புக்களை, மற்றவர்களைவிட அதிகமாக அறியும் வாய்ப்பு எங்களுக்கு உண்டு.

தலைவலி, சாதாரண ஜுரம் ஆகியவற்றுக்கெல்லாம் நாங்கள் பாதிக்கப்படும் போது டாக்டர்களை நாங்கள் நாடுவதே இல்லை.  ஹஜ்ரத்தின் உதவியையே நாடுவோம்.   அவர்கள் தரும் நாட்டு மருந்தினால் விரைவில் குணமடைவோம்.  அத்தனை வலிமை அந்த மருந்திற்கு உண்டு.

உறவினர்களும் தனக்கென ஒரு குடும்பமும் இருந்துங்கூட தாம் வசித்து வந்த இல்லத்தை அரபிக் கல்லூரிக்கு தானம் செய்துவிட்ட அந்த வள்ளல், உயிர் பிரியும் வரை மத்ரசாவின் முன்னேற்றத்தைப்பற்றியே எண்ணத்தைச் சுழலவிட்டுக்கொண்டிருந்து அந்த மேதை, எந்நாளும் நம் இதயத்தில் இருப்பார்கள்.

நற்குணங்களுடன் கூடிய உழைப்பு, புத்தி பூர்வமான செயல் நேர்த்தி, உண்மையைக் கடைபிடிப்பது, அன்பைப் பெருக்குவது, வஞ்சனையற்ற உழைப்பைத் தருவது, கஷ்டப்படுபோரின் துயரைத்துடைக்க முயற்சிப்பது, நேர்மைத்திறனுடன் எல்லா சந்தர்ப்பங்களிலும் நடந்து கொள்வது, ஆண்டவனிடம் உறுதியான நம்பி;க்கைகொண்டு அச்சம் தவிர்ப்பது, “மத்ரசா நலனே பிரதானம்” என்ற கொள்கையுடன் நாஜீரு; வேலை ஆற்றியது - இத்தனை பண்புகளும் நிறைந்திருந்த நாஜிரின் வாழ்க்கை நீடூர் மத்ரசாவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.

 
ஆக்கம் : மர்ஹூம் நீடூர் ஏ. முஹம்முது சயீது பி.ஏ.,பி.எல்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails