Saturday, December 15, 2012

முஸ்லீம்கள் அறியவேண்டிய முக்கிய சில விளக்கங்கள்


முஸ்லீம்கள் அறியவேண்டிய முக்கிய சில விளக்கங்கள்
அல் ஹாபிழ் மௌலவி எஸ். சுஹ்பத் அலி மிஸ்பாஹி
பேராசிரியர் - அல் பத்ரியா அரபுக்கல்லூரி – கறம்பக்குடி – புதுக்கோட்டை
முன்னாள் பேராசிரியர் - திவுரும்பொல ஜாமிஆ மனாருல் ஹ{தா

    ஈமான் என்றால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை எவ்வித திருத்தமும் மாற்றமுமின்றி உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிவதற்கு ஈமான் என்று கூறப்படும்.

இஸ்லாம்

முஸ்லிம் என்றால் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதுடன் அவனால் தடுக்கப்பட்டவர்களைத் தவிர்ந்து கொள்பவருக்கு முஸ்லிம் என்று சொல்லப்படும்.  எனவே ஒரு முஸ்லிம் இறைவனின் சட்டதிட்டங்களை நிலைமைக்கேற்ப அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.  உதாரணமாகத் திருமணம் செய்ய நாடுபவன் திருமணத்தின் சட்டங்களையும் அதே போல ஒரு வியாபாதி இஸ்லாமிய வியாபாரச் சட்டங்களையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.  அதன் அடிப்படையில் அறிய வேண்டிய அவசியச் சட்டங்கள் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை நான் தொகுத்துள்ளேன்.  அப்புத்தகத்தின் ஒரு சில கருத்துகளையே இங்கு கட்டுரையாக தொகுத்து வழங்குகிறேன்.

மாந்திரீகம்
சிலை பூஜை மற்றும் இணை வைக்கும் வார்த்தைகளைக் கொண்டு மந்திரிப்பவரிடம் சென்று தாயத்துப் போடுவது செய்வினை போன்ற எக்காரியங்களுக்காகவும் அவர்களிடம் செல்வது கூடாது.  ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் ஏகத்துவக் கொள்கைக்கு மாற்றமான இணை வைக்கும் வார்த்தைகளைக் கூறி மந்திரிக்கிறார்கள்.  சில காரியங்கள் பயனளித்து விடுவது எதார்த்தத்தில் அமைந்ததாகும்.  இதுவே அவர்கள் செய்யும் காரியம் சரியானது என்பதற்கு ஆதாரமாகாது.

ஜோசியம் பார்க்கலாமா?

குறிகாரன் ஜோசியக்காரன் போன்றவர்களிடம் செல்வதும் குற்றமாகும்.  மேலும் அவர்களின் கருத்தை நம்புவது பெரும் பாவமாகும்.  யுhர் குறிகாரனிடம் சென்று அவர் கூறும் சொல்லை நம்பினாரோ அவரின் நாற்பது நாட்கள் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஒரு நபி மொழி  முஸ்லிம் என்ற நூலில் வந்துள்ளது.

‘யார் ஜோசியக்காரனிடம் சென்று அவர் கூறுவதை நம்பினாரோ அவர், முஹம்மது நபியின் மீது இறக்கப்பட்ட மார்க்கத்தை விட்டும் நீங்கிவிட்டார்.”     (நபி மொழி: நூல் : முஸ்லிம்)

அதிர்ஷ்டக்கல் மோதிரம்
மோதிரங்களி;ல் பதிக்கப்படும் அதிசயக் கல், ஜாதிக் கல் போன்ற உயர்ரகக் கற்களுக்கு மனித வாழ்க்கையில் நன்மை தீமை மற்றும் அந்தஸ்தை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கின்ற சக்தி உள்ளதா? ஆதை நம்பலாமா? என்றால் கற்கள் மூலமாக பிரதிபலிப்புகள் ஏற்படுகின்றன என்பதெல்லாம் இணை வைப்போரின் கொள்கையாகும்.  அதை முஸ்லிம்கள் நம்புவது கூடாது.  மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகள் அனைத்தும் இறைவனால் ஏற்படுகின்றன, என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும்.  அனைத்துக் காரியங்களும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டு விட்டன.

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுதல் நட்சத்திரங்களின் மூலம் ஃபால் பார்ப்பதை இஸ்லாம் தடுக்கிறது.  மேலும் வெளிச்சம் காற்றோட்டம் கிடைக்கும் படியான வீடுகளை இன்ஜீனியரின் ஆலோசனைப்படி கட்டலாம், அதுவே சிறந்ததுமாகும். வாஸ்து பார்ப்பது, ஃபால் பார்ப்பது, போன்றவை அந்நியரின் மூடு நம்பிக்கையாகும்.  ஹதீஸ்களில் அவற்றைக் கண்டித்துக் கடுமையான பல எச்சரிக்கைகள் வந்துள்ளதால் இவைகளை நம்புவது பெரும் குற்றமாகும்.

ஸஃபர் பீடை மாதமா?

ஸபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதித் திருமணம் போன்ற சுப காரியங்களைத் தாமதப்படுத்தக் கூடாது.  ஏனென்றால் “ஸபருல் முளஃப்பர்”, “ஸபருல் கைர்” (வெற்றியின் மாதம், நன்மையின் மாதம்) என்பதே ஸபர் மாதத்தின் முழுப் பெயராகும்.  இஸ்லாமிய வரலாற்றில் பல வெற்றிகள் இம்மாதத்திலேயே கிடைத்திருக்கின்றன.  எனவே ஸஃபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதுவது சரியல்ல.  அவ்வாறு கருதுவது அறியாமைக் கால மூட நம்பிக்கையாகும்.  “தொற்று நோய், பறவை ஜோசியம், ஸபர் (பீடை) ஆகியன இஸ்லாத்தில் கிடையாது.” (நபி மொழி: நூல் புகாரீ)No comments:

LinkWithin

Related Posts with Thumbnails