Thursday, November 28, 2013

வெள்ளி கிழமை வந்து விட்டால்...



வெள்ளி கிழமை வந்து விட்டால்
நினைவு செய்ய மறுக்கிறது வேலைகள்

காரணம் ஜும்மா தொழுகையை
நினைவில் கொள்கிறது என் சிந்தைகள்

நான் சண்டை இட்ட ஒருவரை
சந்திக்க நினைப்பவரை

Tuesday, November 26, 2013

முஸ்லிம்கள் திருமணம்: தேவை மனமாற்றம்!


"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்தவேண்டும்" என்பது பழமொழி. இப்பொழுது ஆயிரம் பேர் முன்னிலையில் அரசிற்குப் பயந்து திருமணம் நடத்தப்படுகிறது. காரணம் சட்டம் தான்.

"பருவ வயதை அடைந்து விட்டால் திருமணம் செய்து வைத்துவிடுவது" முஸ்லிம்களின் வழக்கம். தற்பொழுது பெண்ணுக்கு 19 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியானால்தான் திருமணம் செய்து வைக்கமுடியும் என்கிறது சட்டம். ஆனால் பருவமடைந்து விட்டால் திருமணத்திற்குரிய தகுதியை ஆணும், பெண்ணும் அடைந்துவிடுகின்றனர் என்கிறது அறிவியல்.

Wednesday, November 20, 2013

இன்னொரு கூகுள் இந்தியரால் சாத்தியம் : கூகுள் தலைவர்

இணையம் என்றால் அதில் இணையற்று விளங்குகிறது கூகுள்.

இணையத் தேடலென்றால் கூகுள், இணையக் குழுமம் என்றாலும் கூகுள். இணையமென்னும் மெய்நிகர் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகி நிலை பெற்றுள்ள கூகுளுக்கு இணையாக அல்லது அது போன்ற ஒன்றை உருவாக்கும் சக்தி இந்தியத் தொழில் முனைவோரால் சாத்தியப்படலாம். இப்படி கூறியிருப்பவர் இந்தியரோ, இணையம் பற்றி அறியாதவரோ அல்ல. கூகுள் நிறுவன செயற்குழுத் தலைவர் எரிக் ஸ்மித் தான் இப்படி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Sunday, November 17, 2013

பள்ளிவாசல்: ஒரு பார்வை

முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கிறார்கள்.

இப்பெயர் தொடர்பான ஒரு பார்வை:

பள்ளி

சங்க காலத்தில் அரசர்கள் உயிர் துறந்த பின் புதைத்த இடங்களைப் பள்ளி என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. பள்ளி என்ற சொல்லானது துறவிகள் தங்குவதற்கும், உறங்குவதற்கும் அமைக்கப்பட்ட இடங்களுக்கும் பள்ளி என்றே தமிழ் பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை தவிர முனிவர்கள் ஆசிரமம், பௌத்த கோயில்கள், அரண்மனை, படுக்கை, பள்ளிக்கூடம் போன்றவையும் பள்ளி என்றே அழைக்கப்படுகிறது.

ஆதியில் சமண, பௌத்த கோயில்களே பள்ளி எனப்பட்டன. அவைகள் சைவ, வைணவக் கோயில்களாக மாறிய பின்பும் அதே பெயர்களில் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சிராப்பள்ளி, அகத்தியான்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி போன்ற ஊர்கள் இன்றளவும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் தங்கள் தொழுகைக்கான இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர். பெரும்பாலான ஊர்களில் பள்ளிவாசல் என்ற தெருவே உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 'பள்ளிவாசல்' என்ற கிராமம் உள்ளது.

துபாய் ஏர்-ஷோ: சந்தையில் விளாம்பழம் வாங்குவது போல விமானங்களை வாங்குகிறார்கள்!

துபாய் ஏர்-ஷோ: சந்தையில் விளாம்பழம் வாங்குவது போல விமானங்களை வாங்குகிறார்கள்!


இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் கலத்துகொண்டு, ‘மிக சூடாக’ அங்கிருந்து கிளம்பிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரோன், நேரே வந்து துபாய் ஏர்-ஷோவில் இறங்கினார்.
துபாயில் சூடாக இல்லை அவர். காரணம், ஐக்கிய அரபு அமீரகம் தமது ராணுவத்துக்காக 60 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. அந்த ஆர்டரை பெறுவதற்காக பிரிட்டிஷ், பிரெஞ்ச் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. பேரம் இன்னமும் படியவில்லை. நாளை எப்படியும், இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டு விடும்.
ஆர்டரை பிரெஞ்ச் நிறுவனம் தட்டிப் போகாமல் தடுப்பதற்காக, பிரிட்டிஷ் பிரதமரே நேரில் வந்திருக்கிறார்.

Friday, November 8, 2013

புத்தாண்டின் பத்தாம் நாள் - (ஆஷுரா)

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம்.

 "நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், "இந்த நாள்தான் ஃபிர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்" என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கும்) உத்தரவிட்டார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாய் (ரலி) புகாரீ, முஸ்லிம்.

அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக

பாடலாசிரியர்: கவியன்பன் கலாம் (அதிரை)
பாடகர் : தேனிசைத்தென்றல் ஜஃபருல்லாஹ்
காணொளிப் பதிவு: அதிரைக்காரன் ஜமாலுதீன்

Monday, November 4, 2013

பிறப்பதும் இறப்பதும் இறைவனின் நாட்டம்

பிறப்பதும் இறப்பதும் இறைவனின் நாட்டம்
இறப்பு நிகழ இதயம் கணக்கும்
இறப்பு நிகழ கண்களில் நீர் சுரந்து கன்னத்தில் வழியும்
இவைகள் இறைவனால் அனுமதிக்கப் பட்டவை

இறப்பு நிகழ இறைவனை நினைத்து நாக்கினால்
இறந்தவருக்காக  மனம் உருகி  இறைவனை துதி செய்யுங்கள்
இறப்பு நிகழ கைகளால் வருத்திக் கொள்வதும்
இறப்பு நிகழ நாக்கினால் புலம்புவதும்
இறைவனால் தடுக்கப் பட்டவை

தன் நேசர்கள் இறக்க
இதயம் கணக்க
விழிகளில் நீர் வழிவதை தடுத்தல் வேண்டாம்

'நாம் இறைவனின் சொத்து
நாம் இறைவனிடம் ஒரு நாள் திரும்பியே
ஆக வேண்டும்'என அமைதிப் படுத்துங்கள்
இதுவே சிறப்பான ஆறுதல் மொழி

Sunday, November 3, 2013

அல் நாசர் என்ற பெயர் கொண்டாய்..

அல் நாசர் என்ற பெயர் கொண்டாய்
Sūrat al-Naṣr என்ற இறைவனது வேதத்தில் வரும் சூராவை நினைவு படுத்தினாய்
உனக்கு இறைவனது இறக்கமும் ஆதரவும் மருலோகத்தில் கிடைக்கும்
இறப்பை நீ வேண்டி நிற்க வில்லை
இறப்பு இறைவனின் நாட்டத்தால் உனக்கு வந்தது
இருக்கும் வரை உயர்வான இறைவன் நாடியபடி வாழ்ந்தாய்
இறப்பை கொடுத்த இறைவன் உன்னை உயர்ந்த இடத்தில சுவனத்தை கொடுத்தருளவான்
இதுவே நாங்கள் உனக்காக இறைவனிடம் வேண்டும் பிரார்த்தனை

உன்னை இவ்வுலகில் இழந்து வாடும் எங்களுக்கும் உன் குடுமபத்தருக்கும் இறைவன் அமைதியை தந்தருளட்டும் .ஆமீன்.
====================
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
Surat An-Naşr குர்ஆன்-110:3
-----------------------------------------------

நீச்சல் பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்!


நீச்சல் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த விசையம் தான் ஆனால் நீச்சல் தெரிந்தவர்களை பார்த்து நீச்சல் தெரியாதவர்களுக்கு ஒரு விதமான ஏக்கமாகவே இருக்கும் . நாமும் சிறு வயதில் நிச்சல் கற்று இருந்தால் இன்று நாமும் நீச்சல் அடித்து இருக்கலாமே என்று . நீச்சல் என்பது மிக முக்கியமானது நம் வாழ்க்கையில் .ஆபத்தான தருனக்கலில் நம் உயிரையும் பிறர் உயிரையும் காப்பாற்றும் ஒரு கலை என்றால் அது நீச்சல் கலை தான் .கிராம புறங்களில் பெரும்பாலும் உள்ளவர்கள் நீச்சல் கற்று கொண்டவர்களாக இருந்தனர் ஆனால் இரு அது கூட மாறி கொண்டே வருகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails