அன்றைய காலகட்டத்தில் மிதிரிக்கட்டை என்று அழைக்கப்பட்ட காலனியும் தான் நம் முன்னோர்களால் கால்களுக்கு செருப்பாக காலனிகளாய்ப் பயன்
பாட்டில் இருந்து வந்தன. மரக்கட்டையால் தயாரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த மிதிரிக்கட்டை அதன்மேல் விரல்களைத் தாங்கி நடக்க ஏதுவாக தோல் அல்லது ரெக்சினில் மேல்ப்பாக அமைப்பை ஏற்ப்படுத்தி மிதிரிக்கட்டை என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு ஒரு காலத்தில் காலனியாக பிரபலமாக பயன்பாட்டில் இருந்து வந்தன என்றே சொல்லலாம்
அன்றைய காலகட்டத்தில் காலனிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்காமல் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று வெற்றுக் கால்களால் நடந்து உழைத்து வேதனையை பெரிதாக நினைக்காத காலம் அது. அப்போதைய காலகட்டத்தில் அப்படியே காலணி அணிந்து கொண்டு கடைவீதி தெருப்பக்கம் நடந்து போனால் பெரும் செல்வதராகவும் சமுதாயத்தில் பெரும் அந்தஸ்த்திற்க்குரியவராகவும் மதிக்கப்பட்டு கருதப்பட்டு வந்தனர். காலனியென்றால் அப்போது ஒரு கௌரவ அணிகலனாக விளங்கியது அன்றைய சூழ்நிலையில் இந்த மிதிரிக்கட்டைதான் பெரும்பாலும் காலணியாக உபயோகத்தில் இருந்தது.
அது ஒருபுறமிருக்க அடுத்துப் பார்ப்போமேயானால் இந்த மிதிரிக்கட்டை எனும் காலணி புழக்கத்தில் இருந்து உபயோகித்தபோது கால்பாதங்கள் பாதிக்காமலும் ஆணிக்கால்கள் ஏற்ப்படுவது அரிதாகவும் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் கோடைகாலமானாலும், மழைகாலமானாலும் எல்லாப் பருவகாலத்திலும் அணிந்து செல்வதற்கு ஏற்றமானதாகவும் எளிதில் வீணாகிவிடாமலும் நீண்டநாள் பாவித்தும் வந்தன.
இந்த மிதிரிக்கட்டை எனும் காலணி நமது நாட்டில் மட்டுமல்லாது இலங்கை, நேபாளம், தாய்லாந்து, பர்மா,ஜப்பான், இந்தோனேசியா,மலேசியா, சிங்கப்பூர்,பிலிப்பைன்ஸ்,போன்ற ஆசிய நாடுகளிலும் காலணியாக வெகுகாலமாக பயன்பாட்டில் இருந்து வந்தது..என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை சிறப்பு மிக்க இந்த மிதிரிக்கட்டை எனும் காலணியை படிப்படியாக நாகரீகமும் நவீனமும் வளர்ந்து மாற்றத்தை ஏற்ப்படுத்தி முற்றிலும் காலணிகளின் வடிவமைப்பு மாற்றம் பெற்றுவிட்டன.இன்றைய தலைமுறையினருக்கேற்ப புதுப்புது விதமாய் வடிவமைக்கப்பட்ட தோல், பிளாஸ்டிக் , ரெக்சினிலான செருப்பு லெதர் ஷூ, கேன்வாஸ் ஷூ ஆகிய காலணிகள் வருகைக்குப் பின் இந்த மிதிரிக்கட்டை மறையத் தொடங்கி விட்டன. அதற்குப் பிறகும் கூட ஒரு சில வருடங்களுக்கு முன்புவரை சில தாத்தாமார்கள் கால்களில் காலணியாக ஒட்டிக் கொண்டிருந்த இந்த மிதிரிக்கட்டை தற்ப்போது முற்றிலும் மறையத் தொடங்கி விட்டன.மக்களும் மறக்கத் தொடங்கி விட்டனர். என்னதான் மாற்றம் வந்தாலும் மக்கள் மறந்தாலும் பழமையை மறவாது நினைவு கூறவேண்டும் அல்லவா !
இந்த மிதிரிக்கட்டை காலணி இன்னும் சில ஆசிய நாட்டில் பயன்பாட்டில் இருந்து வருவது பழமை இன்னும் மறையவில்லை என்பதற்கு சான்றாகவும் சற்று ஆறுதலான விசயமாகவும் உள்ளது.
அதிரை மெய்சா
நன்றி : http://nijampage.blogspot.ae/
No comments:
Post a Comment