Friday, April 24, 2015
கிழக்கு இந்திய கம்பெனியும் மன்னர் ஜஹாங்கீரும்
கி.பி. 1600-ம் ஆண்டுகளில் இந்தியாவில் அன்னிய முதலீட்டை அநுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்தின் ஜார்ஜ் மன்னர் முகலாய மன்னர் ஜஹாங்கீர் முன் சமர்பித்தார். மன்னரின் அநுமதி பெறுவதற் காக ஒரு தூதுக் குழு ஒன்றையும் இந்தியா வுக்கு அனுப்பி வைத்தார். ஜார்ஜ் மன்னரின் கோரிக்கையை ஜஹாங்கீர் ஏற்றுக் கொண் டார்.அவர் அநுமதியின் பேரில் தான் இங்கி லாந்தின் கிழக்கு இந்திய கம்பெனி தனது வர்த்தக நிறுவனத்தை இந்தியாவில் நிறுவி யது. கலகத்தா, மும்பை மற்றும் சென்னை போன்ற நகரங்களில் தொழிற்கூடங்கள் அமைக்கவும் அவர் அநுமதி வழங்கினார்.
பாபரின் ஆட்சி காலத்திலேயே, ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க அவரின் அநுமதிக்காக காத்து கிடந்தன. வணிகம் செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. போர்த்துகீசிய வணிக நிறுவ னங்கள் இந்தியாவில் தொழில் துவங்க முழு அநுமதியை வழங்கியவர் மகா அக்பர். அக்பரின் முழு ஆதரவில் வளர்ந்த இந்த தொழில் நிறுவனங்கள் இந்தியாவை வளப் படுத்தியதோ என்னவோ தங்கள் வருவாயை மேம்படுத்திக் கொண்டன.
கோடி கோடியாக பணம் சம்பாதித்து இந்திய நாட்டையே சுரண்டிக் கொண்டிருந்த ஆங்கி லேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி மீது கடுங்கோபம் கொண்ட அவுரங்கசீப் அந்த கம்பெனியின் உரிமங்கள் அனைத்தையும் அதிரடியாக ரத்து செய்தார். கம்பெனியால் இந்தியாவில் துவங்கப்பட்ட நான்கு முக்கிய தொழிற்சாலைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தார். ஆங்கிலேய நிர்வாகிகள் அனை வரையும் கூண்டோடு கைது செய்து சிறையில் தள்ளினார். சிலரை கடுமையாக தண்டித்தார். மிரண்டு போன கம்பெனி நிர்வாகம் அவுரங்கசீப்பின் காலடியில் பணிந்து வீழ்ந்தது. அவுரங்கசீப்பின் அதிரடி நடவடிக்கைகள் கிழக்கிந்திய கம்பெனியை நிலை குலைய செய்தன. அவுரங்கசீப்பின் வீழ்ச்சிக்கும் இதுவே ஒரு வடிகாலாய் அமைந்தது. அவரின் மறைவுக்கு பின் அவரது மகன் பகதூர் ஷா கம்பெனியின் முழு கைப்பாவை ஆகிப்போனார். அவரின் அழிவும் அங்கிருந்தே துவங்கியது எனலாம்.
அதைப் போன்று தென்னிந்தியாவில் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் கிளை பரப்ப தடை விதித் தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ஆவர். இந்திய நாட்டை சுரண்டும் அந்நிய தொழில் முதலீட்டு கொள்கையை தன் வாழ் நாள் முழுவதும் எதிர்த்து அதற்காகவே உயிர் துறந்தவர் மன்னர் திப்பு சுல்தான்.
Vavar F Habibullah
Labels:
கிழக்கு இந்திய கம்பெனி,
திப்பு சுல்தான்,
ஜஹாங்கீர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment